அறிவியல் படி சிவப்பு உடை அணிந்தால் என்ன ஆகும் தெரியுமா ?

சிவப்பு நிறம்

அன்பு, புரட்சி என இரண்டையும் தன்னுள் அடக்கிய நிறம் சிவப்பு

 • News18
 • Last Updated :
 • Share this:
  சிவப்பு பலரையும் ஈர்க்கும் நிறம். அதன் பளீர் நிறம் காண்போருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தும். அன்பு, புரட்சி என இரண்டையும் தன்னுள் அடக்கிய நிறம். இதையெல்லாம் விட அது இன்னும் என்னவெல்லாம் செய்கிறது என யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் சோசியல் சைக்காலஜி வெளியிட்டுள்ளது.  அதில் ஜெர்மனியைச் சேர்ந்த 180 மாணவர்களை சிவப்பு மற்றும் நீல நிறம் அணிய வைத்துள்ளது. அவர்களை கண்ணாடி முன் நிற்க வைத்து எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு அந்த மாணவர்கள் என் மீதே எனக்கு ஈர்ப்பு அதிகமாகிறது. கவர்ச்சியாக உணர்கிறேன் என நீல நிறத்தோடு ஒப்பிடும்போது சிவப்பு நிறம் அணிந்த மாணவர்கள் இந்த பதிலை அளித்துள்ளனர்.

  அதுமட்டுமன்றி நம்பிக்கை, தைரியம், உலகை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை போன்றவும் அதிகமாக உணர்வதாகக் கூறியுள்ளனர் சிவப்பு அணிந்த மாணவர்கள்.
  அவர்களுக்கு மட்டுமல்லாமல் சிவப்பு அணிந்து வெளியே சென்றாலும் மற்றவர்களை ஈர்க்கும் சக்தியும் அதிகம். சட்டென ஒரு கணமாவது திரும்பிப் பார்ப்பார்கள் என கூறியுள்ளது ஆய்வு.  இதேபோல் 2010 ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்கள் சிவப்பு நிறம் அணிந்தால் பெண்கள் அழகில் வீழ்ந்துவிடுவார்கள் எனக் குறிப்பிட்டது. சிவப்பு நிற டை , பவ், ஷூ என எதை அணிந்தாலும் வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும். அதேபோல் பெண்கள் சிவப்பு அணிந்தால் கூட்டத்தில் தனித்தவராகக் கலக்குவார்கள் எனக் கூறியுள்ளது.

  ஆக, ஆண் பெண் இருவரும் தங்களுடைய உணர்வை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளைக் காட்டிலும் இந்த நிறம் அதிகம் பேசும். காதலன், காதலியின் கோபத்தைத் தணிக்க சிவப்பு அணிந்து கூலாக்கிவிடுங்கள். அதேபோல் நேர்காணல் செல்கிறீர்கள் என்றால், பர்ஃபெக்டான சிவப்பு நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். நேர்காணல் செய்பவருக்கும் உங்களின் முதல் சந்திப்பு பிடித்துவிடும். அடுத்ததென்ன, வேலை உங்களுக்கு நிச்சயம்.
  Published by:Sivaranjani E
  First published: