மனைவிக்காக 55,000 ஆடைகளை வாங்கிக் கொடுத்தக் கணவர்!

காதலில் மூழ்கியிருக்கும்போது நம்மை சுற்றி இருக்கும் எதுவும் தெரியாது என்பார்கள். அப்படித்தான் நானும் இருந்தேன். மார்கொட்டின் மீதான காதலில் மெய் மறந்தேன்

news18
Updated: January 24, 2019, 11:25 AM IST
மனைவிக்காக 55,000 ஆடைகளை வாங்கிக் கொடுத்தக் கணவர்!
காதலில் மூழ்கியிருக்கும்போது நம்மை சுற்றி இருக்கும் எதுவும் தெரியாது என்பார்கள். அப்படித்தான் நானும் இருந்தேன். மார்கொட்டின் மீதான காதலில் மெய் மறந்தேன்
news18
Updated: January 24, 2019, 11:25 AM IST
பெண்களைப் பொருத்தவரை எவ்வளவுத் துணிகள் இருந்தாலும், வெளியே செல்லும்போது ஆடைகளே இல்லை என்பதைப் போல் வருத்தப்படுவார்கள். ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த மார்கொ ப்ரோக்மேனிற்கு அப்படியொருக் கவலை இல்லை. தினமும் ஒரு புது ஆடை அணிவார்.

ஏனெனில்,    83 வயதான கணவர் பால் ப்ரோக்மேன் தன் காதல் மனைவி மார்கொ ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியக் கூடாது என்பதற்காக தினம் ஒரு ஆடை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி 57 வருடங்களாக தன் மனைவிக்காக 55,000 ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கிறார் பால்.உலகின் அதிகமான ஆடைக் கலெக்‌ஷன்களைக் கொண்டவர்கள்  என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு.

"காதலில் மூழ்கியிருக்கும்போது நம்மை சுற்றி இருக்கும் எதுவும் தெரியாது என்பார்கள். அப்படித்தான் நானும் இருந்தேன். மார்கொவின் மீதான காதலில் மெய் மறந்தேன்" என்கிறார் பால்.பால் மற்றும் மார்கொ தன் வீட்டில் ஒவ்வொரு இரவும் பால்ரூம் நடனம் ஆடுவது வழக்கமாம். அப்போது "மார்கொ ஏஞ்லைப் போல் கவுன் அணிந்து வந்து தன் கை பிடித்து ஆடும்போது முதல் நாள் காதலைப் போல் உணர்வேன் என்கிறார் பால். அதனால் ஒவ்வொறு முறையும் மார்கொ புது கவுன் அணிந்து வர வேண்டும். அணிந்த கவுனை மீண்டும் அணியக் கூடாது என நினைத்தேன்" என்கிறார்.
Loading...


மார்கொவிற்கு வியானா டான்ஸ் தான் மிகவும் பிடிக்குமாம். அவருக்காக ஆடை அணிவது மார்கொவிற்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் ”ஒவ்வொரு இரவும் அவருடன் நடனம் ஆடும் போது ஸ்பெஷல் நாளிற்காகத் தயாராவது போல் அலங்காரம் செய்து கொள்வேன்” என்கிறார் மார்கொ.

பால் எப்போது வெளியே சென்றாலும் ஆடைகளை வாங்கி வருவாராம். பின் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேரடித் தொடர்புவைத்துக் கொண்டு புது கலெக்‌ஷன்கள் வந்தால் முதல் நபராக இவரை அழைப்பார்களாம். மார்கொவிற்காக 2,3 ஆடைகளை வாங்கி வருவராம்.ஆரம்பத்தில் மார்கொவிற்கு ஒன்றும் புரியவில்லையாம். பின் தன் மீதான அன்பால் இவ்வாறு செய்கிறார் என ஏற்றுக் கொண்டாராம். ஒரு நாள் அவர் வாங்கிக் குவித்த ஆடைகளைப் பார்த்தால் மலை போல் நிரம்பியிருந்ததாம். ஒரு கட்டத்தில் மார்கொவின் அலமாரியில் ஆடைகள் வைக்க இடம் இல்லாமல் போயிருக்கிறது. பின் இது போதும் நிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார் மார்கொ.

”எதர்க்கும் ஒரு முடிவு வேண்டும். எனக்கும் வயதாகி விட்டது. இனி என்னால் விலையுயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. எனவே இனி ஆடைகளை வாங்க வேண்டாம்” என தன் கனவரிடம் கூறியிருக்கிறார் மார்கொ. அதை ஏற்றுக் கொண்ட பால் 2014 ஆண்டிலிருந்து ஆடைகள் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.தற்போது அந்த ஆடைகளை தன் மகளின் அறிவுரைப்படி விற்க முடிவு செய்திருக்கின்றனர். இதுவரை 7000 ஆடைகளை விற்றிருகின்றனர். அதில் 200 ஆடைகளை மட்டும் விற்பனைக்கு அல்லாமல் எடுத்து வைத்திருக்கிறார் பால். காரணம், இனி வரும் நாட்களுக்கு மார்கொ அணிய வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்திருக்கிறாராம். அதை அணிந்து இரவில் நடனம் ஆடுவோம், காதலில் திளைப்போம் என்கிறார் பால் ப்ரோக்மேன்.

Also See...

First published: January 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...