ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டிசைனர் பிரைடல் லெஹங்கா வாங்கப்போறீங்களா..? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

டிசைனர் பிரைடல் லெஹங்கா வாங்கப்போறீங்களா..? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

டிசைனர்  பிரைடல் லெஹங்கா

டிசைனர் பிரைடல் லெஹங்கா

தற்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள இளம் பெண்கள் விதவிதமான, வித்தியாசமான லெஹங்காவை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியா பல்வேறு மதங்கள், மாநிலங்கள், கலச்சாரங்கள் கலந்த நாடாகும். எனவே இங்கு பண்டிகைகளுக்கும் பஞ்சம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்தின் பண்டிகையின் போதும் அங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து கொண்டாடி வருகின்றனர். வடமாநில பெண்களைப் பொறுத்தவரை லெஹங்கா அவர்களுடைய பாரம்பரிய உடையாக கருதப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள இளம் பெண்கள் விதவிதமான, வித்தியாசமான லெஹங்காவை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

உங்கள் தோற்றத்திற்கு அழகினை சேர்க்கவும் மற்றவர்களின் கண்களைக் கவர்வதற்கு நீங்கள் லெஹெங்கா சோலியை அணியலாம். லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் பலவகையான மாடல்களில் கிடைக்கும் லெஹங்காவை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்...

1. ஆன்லைன் கலெக்‌ஷன்களை தேடுங்கள்:

பேஷன் டிசைனிங் என்பது காலத்திற்கு ஏற்றார் போல் மாறக்கூடியது, குறிப்பாக திருமண ஆடைகள் விஷயத்திலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே அப்போதைய ட்ரெண்டிங்கிற்கு ஏற்ற லெஹங்காவை அறிந்து கொள்ள ஆன்லைன் தளங்களை ஒருமுறை நோட்டமிடுங்கள். இதன் மூலம் புதிதாக அறிமுகமாகியுள்ள வண்ணங்கள், எம்பிராய்டரி டிசைன்களை அறிந்து கொள்ளலாம்.

2. பட்ஜெட் முக்கியம்:

ஒவ்வொரு பிரைடல் லெஹங்காவும் பயன்படுத்தப்படும் எம்பிராய்டரி மற்றும் துணியின் தன்மையைப் பொறுத்து விலை மாறுபடும். ஒரு லெஹங்காவை வாங்க திட்டமிடும் முன்பாக உங்களுடைய பட்ஜெட் என்ன என்பதை முடிவு செய்து கொள்வது தேவையில்லாத செலவையும், சராசரி பட்ஜெட்டில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்கவும் உதவும்.

3. தேவையான நேரத்தை ஒதுக்குங்கள்:

மணப்பெண்ணின் திருமண உடையாக இருந்தாலும் சரி, ஸ்பெஷல் பங்ஷனுக்கான ஆடையாக இருந்தாலும் சரி லெஹங்கா வாங்க சரியான மற்றும் தேவையான அளவு கால அவகாசத்தை ஒதுக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது திட்டமிட்டு, கடை கடையாக ஏறி இறங்கி தேடினால் தான் நல்ல லெஹங்காவை தேர்வு செய்ய முடியும். இதே திருமண உடை என்றால் தேடலை 6 மாதத்திற்கு முன்பிருந்தே தொடங்குவது நல்லது.

Cannes 2022 : கேன்ஸ் திரைப்பட விழாவில் விதவிதமான மெஸ்மெரிசிங் லுக்கில் தீபிகா படுகோன் - ஒரு பார்வை

4. வசதியான துணியை தேர்ந்தெடுங்கள்:

திருமணம் போன்ற முக்கிய விசேஷத்திற்கு பயன்படுத்தக்கூடிய உடை என்பதால், உங்களுக்கு பொருத்தமான துணியால் செய்யப்பட்ட லெஹங்காவை உருவாக்குவது அவசியமானது. லெஹங்காவின் எம்பிராய்டரி ஒவ்வொரு டிசைனிலும் மாறுபடும் என்பதால், உங்கள் திருமண நாளில் உங்களுக்கு வசதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் சரியான அலங்காரத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

5. காலநிலையை கருத்தில் கொள்ளுங்கள்:

ஒரு உடையை அணியப் போகிறீர்கள் என்றால் அது சார்ந்த பருவநிலை மிகவும் அவசியமானது. கோடை காலத்தில் கனமான துணிகள் மற்றும் எம்பிராய்டரி கொண்ட லெஹெங்காக்களை தேர்வு செய்வது வசதியாக இருக்காது. குளிர்காலத்தில் லைட் எம்பிராய்டரி மற்றும் லைட் ஃபேப்ரிக் போன்றவற்றை தேர்வு செய்வதும் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

6. அனைத்து விஷயத்திலும் கவனம் தேவை:

லெஹங்கா டிசைன் தவிர, ஆக்சஸரீஸ், துப்பட்டா மற்றும் பிளவுஸ் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான லெஹெங்காவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், லெஹெங்காவுடன் முற்றிலும் பொருந்தக்கூடிய மற்றும் நேர்த்தியான துப்பட்டாவைத் தேடுவது அவசியம். லெஹெங்காவை பிரகாசமாக்க பிளவுஸின் கட்-டைப்பும் முக்கியமானது. மேலும் உச்சி முதல் பாதம் வரை அணியக்கூடிய அணிகலன்களும் முக்கியமானது.

7. ஆல்ட்ரேஷனுக்கு நேரம் ஒதுக்குங்கள்:

லெஹங்காவை தேர்வு செய்வதற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ஆல்ட்ரேஷனுக்கும் கொடுக்க வேண்டும். பலரும் திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் வரை ஆல்ட்ரேஷன் பற்றி கவலைப்படாமல், கடைசி நேரத்தில் கலங்குகிறார்கள். எனவே சரியான நேரம் ஒதுக்கி ஒருமுறைக்கு இருமுறை லெஹங்காவை அணிந்து ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக செய்து கொள்ளுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fashion Tips