Home /News /lifestyle /

முகத்துக்கு ஃப்ளீச் செய்யும் பழக்கம் இருக்கா..? அப்ப மறக்காமல் இத ஃபாலோ பண்ணிடுங்க..!

முகத்துக்கு ஃப்ளீச் செய்யும் பழக்கம் இருக்கா..? அப்ப மறக்காமல் இத ஃபாலோ பண்ணிடுங்க..!

முகத்துக்கு ஃப்ளீச்

முகத்துக்கு ஃப்ளீச்

பேஸ் ஃப்ளீச் செய்யும் போது நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான பொருள்களை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் முகத்தில் அலர்ஜி உண்டாகக்கூடும்.

பேஸ் ஃப்ளீச் செய்யும் போது நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான பொருள்களை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் முகத்தில் அலர்ஜி உண்டாகக்கூடும்.

குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் தொடங்கி நண்பர்களுடன் டூர் செல்வது போன்ற அனைத்து விஷேஷங்களுக்கும் அழகாக செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. குறிப்பாக சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் நிறமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பலரும் பேஸ் ஃப்ளீச்சிங் செய்கின்றனர். பலர் வீட்டில் இருந்தே சருமபராமரிப்பு மேற்கொண்டு வரும் நிலையில், ஃப்ளீச் செய்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

உங்கள் முகத்தில் ப்ளீச் பூசுவதற்கு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்:

முதலில் உங்கள் முகத்தை கழுவுங்கள்:

பேஸ் ப்ளீச்சிங் செய்வதற்கு முன்னதாக நீங்கள் முகத்தை முதலில் கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் பேஸ் ப்ளீச் செய்தபிறகு உடனே முகத்தை கழுவும் போது சிகிச்சையின் செயல்திறன் குறையும். எனவே உங்களது முகம் பளபளப்பாக இருப்பதற்காக ப்ளீச் செய்த பிறகு சுமார் 6-8 மணி நேரம் வரை முகத்தில் பேஸ் வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்தக்கூடாது.



பேட்ச் டெஸ்ட் (patch test):

சிலருக்கு சில கிரிம்கள் ஒத்துக்கொள்ளாது. எனவே முகத்தில் ப்ளீச் செய்வதற்கு முன்னால், உங்களது கையில் சோதனை செய்து பார்க்கவும். உங்களுக்கு அலர்ஜி எதுவும் ஏற்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பின்னர் பயன்படுத்த முயலுங்கள்.

பேஸ் ப்ளீச்சை கொஞ்சமாக உபயோகிக்கவும்:

அனைத்து க்ரீம்களும் உங்களது ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் பலவற்றில் சோடியம் ஹைபோகுளோரைட் இருப்பதால், உங்களது சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குறைவான அளவுள்ள ப்ளீச்சை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

வழிமுறைகளைப் படிக்கவும்:

ப்ளீச் பயன்படுத்துவதற்கு முன் அதில் உள்ள வழிமுறைகளைப் படிக்கவும். உங்களது சருமத்திற்கு ஏற்ற சரியான அளவைத்தேர்வு செய்து சருமத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் பாா்த்து கொள்ளவேண்டும்.

ALSO READ | மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் 6 சமையலறை பொருட்களின் பட்டியல்...

உங்கள் முகத்தில் ப்ளீச் பூசுவதற்கு செய்யக்கூடாத விஷயங்கள்:

ப்ளீச் செய்த பின்னர் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வேளை வெளியில் செல்லும் சூழல் ஏற்பட்டால், முன்னதாக நிறைய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் அடிக்கடி ப்ளீச் பயன்படுத்துவதால் சருமம் விரைவில் வயதான தோன்றத்தை நமக்கு அளிக்கும். எனவே மாதத்திற்கு ஒரு முறை மட்டும் பின்பற்ற முயலுங்கள்.



வீட்டில் இருந்தே நீங்கள் பேஸ் ப்ளீச் செய்வதற்கு முன்னதாக ஸ்கின் டாக்டரை சந்தித்து உங்களது சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களைப் பயன்படுத்த அறிவுறுரை வாங்கி கொள்ளுங்கள். குறிப்பாக வறண்ட தோல், சென்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் உங்களது முகத்தை ப்ளீச் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

ஃபேஷியல் ப்ளீச் எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

உங்கள் முகத்தில் ப்ளீச்சை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். குறிப்பிட்ட நேரம் வரைத் தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.ப்ளீச்சை தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் சருமத்தின் வகைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் தொடர்ந்து ப்ளீச் பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, ஃபேஷியல் ப்ளீச் உபயோகிக்கும் போது, ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளதா? என்று கண்காணிக்க மறந்துவிடாதீர்கள்..
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Beauty Tips, Face Bleaching

அடுத்த செய்தி