Home /News /lifestyle /

இனி ராஜா போல பயணிக்கலாம் - அரண்மனை செட்டப்பில் ரயில்களை அறிமுகப்படுத்திய ரயில்வே துறை

இனி ராஜா போல பயணிக்கலாம் - அரண்மனை செட்டப்பில் ரயில்களை அறிமுகப்படுத்திய ரயில்வே துறை

சொகுசு ரயில்கள்

சொகுசு ரயில்கள்

‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ என்ற மிக உயர்ந்த சொகுசு வசதிகள் கொண்ட ரயில்களை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே துறை.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India
  அவனுக்கு என்னப்பா! ராஜ வாழ்க்கை என்ற வசனம் நம்மில் பலர் அடிக்கடி உயயோகிக்கும் ஒன்று. நம்மை சுற்றியிருப்பவர்கள் யாரேனும் வசதியாக, சொகுசாக வாழும்போது அதனை இப்படி வர்ணிப்போம். ஆக, எல்லோருக்குமே சொகுசு மிகுந்த வாழ்க்கை என்றால் அலாதி பிரியம் தான். அதுவும் திரைப்படங்களில் அரண்மனை காட்சிகள் வரும்போது, இதுபோன்ற ஒரு மாளிகையில் நாமும் ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற நப்பாசை நம் மனதில் உதித்தே தீரும்.

  இப்படி ராஜா போல இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ என்ற மிக உயர்ந்த சொகுசு வசதிகள் கொண்ட ரயில்களை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே துறை. மொத்தம் 4 விதமான ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு இந்தியன் பனோரமா, தி இந்தியன் ஸ்ப்லெண்டர், தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா மற்றும் டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது.  இதில், இந்தியன் பனோரமா, தி இந்தியன் ஸ்ப்லெண்டர், தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா ஆகிய 3 ரயில்களும் 6 இரவு, 7 பகல்களை உடைய பயணத் திட்டத்தை கொண்டது. டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா ரயிலானது 3 இரவுகள் 4 பகல்கள் என்ற திட்டத்தை உடையது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான கேபின்கள் மற்றும் சியூட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

  காண்பிக்கப்படும் சுற்றுலா இடங்கள்

  சொகுசு, உயர் ரக சொகுசு, அதற்கும் மேலான சொகுசு வசதி என பயணிகள் தேர்வு செய்யும் பெட்டிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்றாலும், அவர்களுக்கு காண்பிக்கப்படும் சுற்றுலா இடங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். அனைத்துப் பயணிகளும் டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிடலாம். ரான்தாம்பூர் புலிகள் வனச் சரணாலயத்தில் காட்டுக்குள் பயணித்து தாவர மற்றும் வன உயிரினங்களை பார்வையிடலாம்.

  ஜெய்ப்பூரில் மிக அழகான வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகளை காணலாம். உலகிலேயே மிக அதிக கட்டணத்தைக் கொண்ட சொகுசு ரயில்களான பிரிட்டனின் ஸ்காட்ஸ்மேன் மற்றும் ஐரோப்பாவின் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை விட கூடுதலாக மகாராஜா ரயில்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  ராஜா போன்ற உணர்வு கிடைக்கும்: 

  பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சொகுசு பெட்டிகளை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அனைத்துமே உங்களுக்கு ராஜா என்ற உணர்வை தரக் கூடியதாக இருக்கும். ரயில் பெட்டியில் பயணிகளுக்கு தனித்தனியே எல்சிடி டிவி, டிவிடி பிளேயர், இன்டர்நெட் வசதிகள், லைவ் டிவி, திரைப்படங்களை காணும் வசதி மற்றும் பல உயர்வான அனுபவங்கள் கிடைக்கும்.

  ரயில்களில் பயணிக்கும்போது இயற்கை அழகை ரசிக்கும் விதமாக அனைத்து பெட்டிகளிலும் பனோரமா வியூ பாயிண்ட் இருக்கும். இரண்டு உணவருந்தும் மாடங்கள் உண்டு. கொஞ்சம் கிளு, கிளுப்பாக இருக்க விரும்பும் பயணிகளுக்காக வொயின், பீர் மற்றும் இதர பானங்கள், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.

  கட்டணம் ரொம்ப கம்மிதான்!

  மகாராஜா ரயில்களில் 4 பகல் 3 இரவுகளைக் கொண்ட டிரெஷ்ர்ஸ் ரயிலில் தான் கட்டணம் கொஞ்சம் குறைவு. அதுவும் கூட 2.79 லட்சத்தில் தொடங்கி 10.32 லட்சம் வரை வருகிறது. 7 பகல், 6 இரவுகளை கொண்ட மற்ற ரயில்களில் கட்டணம் என்பது 4.40 லட்சத்தில் தொடங்கி 18.96 லட்சம் வரையில் இருக்கிறது.

  இதையும் வாசிக்க:  நிதி ஆயோக் சிறந்த வளர்ச்சி ஆர்வமுள்ள மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரித்துவார் !

  எப்படி புக்கிங் செய்வது:

  மகாராஜா ரயில்களில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இந்த லிங்க் https://www.the-maharajas.com/pages/bookticket கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம். பயணத் திட்ட விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க் https://www.the-maharajas.com/ கிளிக் செய்யலாம். இந்த லிங்க்-களை கிளிக் செய்தால் ரயில் பெட்டி எப்படி அரண்மனை போல இருக்கும், என்னென்ன காட்சி அமைப்புகள் இருக்கின்றன என்பதை ஃபோட்டோ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  Published by:Salanraj R
  First published:

  Tags: Indian Railways, Travel

  அடுத்த செய்தி