மழைக்காலம் தொடங்கும் முன் அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்சா வேக்சினேஷன்: சுகாதார நிபுணர்கள் பரிந்துரை

காட்சிப் படம்

பல பெற்றோர்களுக்கு ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்றால் என்னவென்று கேள்விகள் எழும். இது சாதாரண சளியை விட எவ்வாறு வேறுபடும்? இதில் இருந்து நம் குழந்தைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

 • Share this:

  அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்சா வேக்சினேஷன்  போட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறியதாக செய்திகள் வருகிறது. காய்ச்சல் அல்லது சளி மற்றும் கோவிட் 19 உடைய அறிகுறிகள் ஒன்றுபோல் உள்ளதால், நிபுணர்கள்  ஃப்ளு வேக்சினேஷன் குழந்தைகளை பாதுகாத்து பெற்றோர்களுக்கு பதற்றத்தை குறைக்கும் என நம்புகிறார்கள்.

  பல பெற்றோர்களுக்கு ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்றால் என்னவென்று கேள்விகள் எழும். இது சாதாரண சளியை விட எவ்வாறு வேறுபடும்? இதில் இருந்து நம் குழந்தைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

  அந்த நோய் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

  மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் நமது குழந்தைகளுக்கு வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இருப்பினும் காய்ச்சல், மூக்கு அடைப்பு மாற்று மற்ற சளி சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தைகள் இன்ஃப்ளுயன்ஷா என்னும் அபாய கட்டத்திற்குள் வருவார்கள், இதனை  ஃப்ளு என்றும் கூறலாம்.

  ஃப்ளு/காய்ச்சல் மிக விரைவாக பரவக்கூடிய வைரல் கிருமி இது காற்று வழியில் குழந்தைகளின் நுரையீரலை தாக்கலாம் மற்றும் இது ஒரு பொதுவான ஒவ்வொரு வருடமும் வரும் மூச்சுக்குழல் பிரச்சனை. ஜான் ஹாப்கின்ஸ் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் ஒரு வாரத்தில் குழந்தைகள் சரி ஆகினாலும், மற்றவர்களுக்கு தீவிர தொற்று பரவி மருத்துவ தேவை மற்றும் நுரையீரல் தொற்று (நியூமோனியா) அல்லது இறப்பு வரை நேரிடலாம். ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டும் காய்ச்சல்/ ஃப்ளு காரணத்தால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்கு உள் உள்ள 1 லட்சம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறார்கள்.

  யாருக்கு ஆபத்து ?

  யாருக்கு வேண்டுமாலும் இன்ஃப்ளுயன்ஷா  வரலாம். இருப்பினும், ஒரு சில தனிநபர்களுக்கு இந்த நோய் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது, இது 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 65 வயது மற்றும் மேலுள்ள வயதானவர்கள், நல சேவகர்கள் மற்றும் நீரழிவு  நோய், ஆஸ்துமா, புற்றுநோய் நோய் எதிர்ப்பு சக்தி குறையுடையவர்கள்  பல தொடர் நோய்கள் கொண்ட நபர்களும் உள்ளடங்குவர்.   

  பரவுதல்/ தொற்று 

  இந்த வைரஸ் முக்கியமாக இன்ஃப்ளுயன்ஷா  தொற்று உடையவர்கள் இருமல், தும்மல் மற்றும் பேசும்போது வரும் துளிகளில் இருந்து பரவும். அதனால், தொற்று ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த துளிகள் காற்றில் பறந்தால் 6 அடி தூரம் வரை பரவி, சுற்றி இருப்பவர்களை தாக்கும்.

  சிறிய குழந்தைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தொற்று நீண்ட நாள் இருந்து மற்றவர்களையும் வெகு நாட்கள் கிருமி தாக்கும்.

   பாதுகாப்பு

  ஒரு சில ஆன்டி வைரல் (ஆன்டி இன்ப்ளூயன்சா) மருந்துகள் இருக்கின்றன இது நோயை குணப்ப டுத்தும், இருப்பினும், நோய் வராமல் தடுப்பது மிக முக்கியம். எளிமையான மற்றும் சிறப்பான பாதுகாப்பு முறைகள் கிருமியை பரபாமல் தடுக்கும். இதில் உள்ளடங்குபவை:

  1.குழந்தைகளுக்கு இரும்பும் போதும் தும்மும் போதும் வாயை மூட கற்றுக் கொடுப்பது.

  2.கைகளை அடிக்கடி மற்றும் நன்கு கழுவுவது. தண்ணீர் இல்லாத தருணங்களில், சானிடைசேர் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

  3.தொற்று ஏற்பட்டவர்களுடன் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் நேரடி தொடர்பை தவிர்த்தல்.

  4.குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிதல்.

  5.ஆண்டிற்கு ஒருமுறை இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன்.

  வருடாந்திர ஃப்ளு வேக்சினேஷன்    நம்மை இன்ஃப்ளுயன்ஷா நோயிலிருந்து பாதுகாக்க ஒரு சிறந்த வழியாக உதவுகிறது. உலகளாவிய மற்றும் இந்திய நல அதிகாரிகள் ஆண்டுகால ஃப்ளு வேக்சினேஷன்

  6 மாதம் முதல் 5 வருட குழந்தைகளுக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கிறது.

  ஒரு காலகட்டத்தில் இந்த இன்ஃப்ளுயன்ஷா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறையும் மேலும் இந்த வைரஸ் ஸ்ட்ரைன் ஒவ்வொரு ஆண்டும் மாறும், அதனால், ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடுவது அவசியம். ஆண்டிற்கு ஒரு முறை ஊசி போட்டுக் கொள்வது உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்துவது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு பரவுதலையும் தடுக்கும். மேலும் விவரங்களுக்கு உங்கள் குழந்தைகள் மருத்துவரை அணுகி இந்த இன்ஃப்ளுயன்ஷா நோய்

  பற்றியும் தடுப்பூசி மூலம் அதன் தடுப்பு முறை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

  பொறுப்பு துறப்பு: பொது நலம் கருதி வெளியிடுவோர் GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. இந்த பதிவில் கூறிய அனைத்து தகவல்களும் பொது விழிப்புணர்வே. இதில் எதுவும் மருத்துவ பரிந்துரை இல்லை. இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் முழு நோய்கள் தடுப்பு தடுப்பூசி அட்டவணை பெற அணுகுங்கள். GSK பொருட்களுடன் ஏதேனும் புகார் இருந்தால் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும் india.pharmacovigilance@gsk.com.

  CL code: NP-IN-FLT-OGM-210007, DoP Jun 2021
  Published by:Tamilmalar Natarajan
  First published: