Home /News /lifestyle /

கண்களைப் பாதுகாக்கும் ப்யூட்டி பொருள்களில் பாலின வேறுபாடு உள்ளதா? தெரிந்து கொள்வோம்!

கண்களைப் பாதுகாக்கும் ப்யூட்டி பொருள்களில் பாலின வேறுபாடு உள்ளதா? தெரிந்து கொள்வோம்!

கண் பாதுகாப்பு.

கண் பாதுகாப்பு.

பெண்கள், ஆண்கள் என அனைவரும் வேறுபாடு இன்றி கண்களை பராமரிப்பதோடு அவற்றைச் சரி செய்ய முயல்வது அடிப்படையாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்றைய சூழலில்  ஆண் மற்றும் பெண் என எவ்வித பாகுபாடு இல்லாமல் நடுநிலையோடு அவர்களின் அழகைப் பாதுகாக்கவும், முகம், கண்களைப் பராமரிக்கும் அழகுசாதன பொருள்கள் மற்றும் அதன் சேவைகளை பயன்படுத்துவது மக்களிடம் அதிகரித்து வருகிறது.

    பெண்களுக்கு மட்டும் கண்கள் அழகில்லை. ஆண்களை அழகாகக் காட்டுவதிலும் முக்கிய பங்கு வகிப்பது அவர்களது கண்கள் தான். இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கண்களைப் பராமரிப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது.

    ஆரம்பத்தில் கண்களைப் பராமரிக்கும் ஒப்பனைத் துறையில் பெண்களை மையமாகக்கொண்ட தயாரிப்புகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இன்றைக்கு ஆண்களின் அழகு மற்றும் தோற்றத்தில் ஏற்படும் மாறுபாடுகளைச் சரிசெய்யவும் பல அழகு சாதனப்பொருள்கள் சந்தையில் விற்பனையாகிறது. இதுகுறித்து ENTOD பார்மாசூட்டிகல்ஸ் மருத்துவ இயக்குனர் அஞ்சுலா மசுர்கர் தெரிவிக்கையில், பெண்களைப் போல் ஆண்களும் முகம், கண்கள் போன்றவற்றைப் பராமரிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார். இதோடு சந்தையில் நுகர்வோர்களின் நிலை என்ன? என்பது குறித்துப் பல விளக்கங்களை அளித்துள்ளார்.

    நுகர்வோர் சார்ந்த தொடர்பு: உடல்நலம் மற்றும் அழகுத் துறையானது நுகர்வோரை மையமாகக் கொண்ட தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அதற்கேற்றால் போல் தான் சந்தைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அழகு சாதனப்பொருள்கள் விற்பனையாவதோடு பாலின நடுநிலையான விளம்பரங்களும் அதிகமாகிறது. இதோடு நுகர்வோர் மத்தியில் சில பிராண்டுகள் கண்களுக்குக் கீழே ஜெல் சீரம்களை உருவாக்குவதற்கு நானோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதோடு மக்களிடம் நல்ல வெற்றியையும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Also Read : கோலா பானங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கிறதா..? எச்சரிக்கும் ஆய்வு..!

    குறிப்பாகக் கண்களில் வீக்கம், கருவளையங்கள் போன்ற பிரச்சனைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே பல அழகு சாதனப் பொருள்கள் விற்பனையாகும் நிலையில் அவற்றைச் சரியாக நாம் கையாள வேண்டும். இல்லாவிடில் கண் பிரச்சனைகள் யாருடைய வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

    இதோடு இன்றைக்கு உள்ள சூழலில் எந்தவொரு நோய்களுக்கான மருத்துவ உதவிகள் என்பது அனைத்து பாலினத்தவருக்கும் பொருந்தும். குறிப்பாக ஆண் மற்றும் பெண்களின் கண்களுக்குக் கீழே வரக்கூடிய பிரச்சனைகளைச் சரி செய்வதில் ஆரோக்கியமான விஷயங்களை நாம் கையாள வேண்டும். பொதுவாக ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், சரியான தூக்கம் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகள் யாருக்கு வந்தாலும் அவர்களைச் சரியாக அணுகுமுறையோடு கையாள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், திருநங்கை என எவராக இருந்தாலும் கண்களையும், கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையம் போன்றவற்றைப் பராமரிப்பதோடு அவற்றைச் சரி செய்ய முயல்வது அவர்களின் அடிப்படையான பணிகளில் ஒன்றாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Beauty Tips, Eye care, Men's Beauty

    அடுத்த செய்தி