Home /News /lifestyle /

எண்ணெய் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவையா ? அழகு நிபுணர்கள் தரும் ப்யூட்டி டிப்ஸ்!

எண்ணெய் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவையா ? அழகு நிபுணர்கள் தரும் ப்யூட்டி டிப்ஸ்!

 எண்ணெய்ப் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம்

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம்

ஆயில் ஸ்கின் அதாவது எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம் ஆனால் அவர்கள் சருமத்திற்கு ஏற்றதை பயன்ப்படுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சருமத்தைப் பராமரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாய்ஸ்சரைசர் உதவியாக உள்ளது. குறிப்பாக எண்ணெய்ப் பசை(ஆயில் ஸ்கின்) சருமத்தைக் கொண்டவர்கள் லைட்வெயிட், நான் – காமெடோஜெனிக் மற்றும் ஜெல் போன்ற மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தருகின்றன.

    பொதுவாகப் பெண்கள் சருமத்தை அழகாக வைத்துக்கொள்வதற்குப் பல முயற்சிகளை எடுப்பார்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் ஆயில் ஸ்கின், டிரை ஸ்கின், சென்சிடிவ் ஸ்கின் என ஒவ்வொரு விதமான சருமங்கள் இருக்கும். பொதுவாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தான் சருமப் பிரச்சனையில் அதிகளவில் பாதிக்கப்போகிறார்கள். குறிப்பாக நம் சருமத்தின் எண்ணெய்ப் பசையானது சமநிலையில் இருக்க வேண்டும்.

    கொஞ்சம் கூடுதலாக இருந்தால் கூட சரும துளைகள் அடைத்து பருக்கள் மற்றும் பல சரும பிரச்சனைகளை நமக்கு ஏற்படுகிறது. எனவே சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை நீக்குவதோடு உங்களது சருமம் மற்றும் பொலிவுடன் இருக்க மாய்ஸ்சரைசர் உபயோகிப்பது உங்களுக்கு உதவும். எனவே முதலில் உங்களுக்கு எண்ணெய்ப் பசை சருமம் தானா? என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    உங்களது முகத்தை நீங்கள் சுத்தம் செய்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு உங்களது தோல் பளபளப்பாகத் தோற்றமளிக்கும். ஆனால் சில மணி நேரங்களிலே உங்களது சருமம் எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும். இதோடு உங்களது மாதவிடாய் காலத்திற்கு முன்னதாக மூக்கில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படும் . இது போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்குத் தான் ஏற்படும்.

    Also Read : பெண்களே உடல் நலத்தை பாதுகாக்க உதவும் இந்த 5 ஆப்ஸ் பற்றி தெரியுமா?

    எண்ணெய் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் அவசியம்:

    ஆயில் ஸ்கின் அதாவது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்குப் பருக்கள் மற்றும் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற நேரத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்து உங்களது சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளித்து மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இருந்த போதும் நம்முடைய வாழ்க்கை முறை, உணவு முறை, ஸ்கின் டைப் போன்றவற்றை அறிந்து கொண்டு உங்களது சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

    நீங்கள் எண்ணெய் சருமத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், மற்ற பொருட்களிலிருந்து கூடுதல் எண்ணெய்யைச் சேர்ப்பதைத் தவிர்த்து சருமத்தை ஹைட்ரேட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக எண்ணெய்யைக் கட்டுப்படுத்தும் சருமப் பராமரிப்புப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தும்போது உங்கள் சருமம் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும் என்பதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    மேலும் எண்ணெய்ப் பசை சருமம் இருந்தால், உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு சோடியம் லாரெத் சல்பேட் மற்றும் சோடியம் லாரில் சல்பேட் போன்ற அல்கலைன் சர்பாக்டான்ட்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதோடு அதிக வீரியம் கொண்ட கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை தோலின் மேற்புறத்திலேயே செயல்படுவதோடு முகத்தில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் முகப்பருக்கள் அதிகரிக்கும். எனவே குறைந்த வீரியம் கொண்ட மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Moisturizer, Oily Skin, Skin Care

    அடுத்த செய்தி