• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அபிர் இந்தியா நடத்திய கலை திருவிழா நிறைவு... 10 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

அபிர் இந்தியா நடத்திய கலை திருவிழா நிறைவு... 10 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

நாடு முழுவதும், கலைஞர்களை ஊக்குவிப்பது, கலைப் படைப்புகளை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அபிர் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

  • Share this:
    டெல்லியில் அபிர் இந்தியா அமைப்பு நடத்திய கலைத் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. இதில், சிறப்பான படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த கலைஞர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோப்பையும், தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு அபிர் இந்தியா என்ற, நிறுவனம் (N.G.O) செயல்பட்டு வருகிறது. அபிர் என்றால் வண்ணங்கள் என்று அர்த்தம். நாடு முழுவதும், கலைஞர்களை ஊக்குவிப்பது, கலைப் படைப்புகளை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அபிர் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அபிர் இந்தியா நடத்திய கலைத் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.



    டெல்லியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், 122 கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சுமார் 2,500 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அவர்களில் இருந்து சிறந்த 10 பேரை தேர்வு செய்து விருது வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த 10 சிறந்த கலைஞர்களை தேர்வு செய்வதற்காக, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.எம்.பழனியப்பன், வாசுதேவன் அக்கிதம், கிறிஸ்டின் மைக்கேல், ஹார்ட்மட் வர்ஸ்டர் ஆகியோர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது.



    இதன்படி, புனேவைச் சேர்ந்த ஷுபாங்கர் சுரேஷ் சந்தேரே, தானேவைச் சேர்ந்த கின்னரி ஜிதேந்திரா டோண்ட்லேகர், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீபர்ணா தத்தா, அசாமின் பாரமாவைச் சேர்ந்த ஜிந்து மோகன் கலிதா,கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியா ரஞ்சன் புர்கைத், மேற்கு வங்காளத்தின் ஆசிப் இம்ரான், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த செரிங் நேகி, குஜராத்தின் சுரேந்திரநகரைச் சேர்ந்த ருத்விக் மேத்தா, வதோதராவைச் சேர்ந்த மௌஷம் மங்கல்லா, மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜெயக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.



    இவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணமும், விருதுகளும் வழங்கப்பட்டன. இதுவரை அபிர் இந்தியா சார்பாக 5 கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பங்கேற்ற 620 கலைஞர்கள் 10,200 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அவர்களில் மொத்தம் 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: