• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்..

கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்..

கொரோனா

கொரோனா

கோவிட் -19 நோயால் லேசாக பாதிக்கப்பட்ட நபர்கள் கூட சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்புகளை உணரலாம்.

  • Share this:
கொரோனாவின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்து வரும் நிலையில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து மீண்டு குணமடைந்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு தொற்று பரவ துவங்கியதில் இருந்தே கோவிட் -19 தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பெரும்பாலும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை அதிகளவில் சந்தித்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பெரிய ஆய்வு ஒன்று, ஆரம்பகால நோய் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள் பின்னர் பல மாதங்கள் நீடிக்கும் சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடுவதாக கூறி உள்ளது. கோவிட் -19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அல்லது வைரஸால் லேசாக பாதிக்கப்பட்ட நபர்கள் சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்புகளை உணரலாம் என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்து உள்ளது.

சைலன்ட் கில்லர் நோய் என்று சிறுநீரக நோய் குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் சிறுநீரக செயலிழப்பு அல்லது இந்த உறுப்பில் ஏற்படும் பிற நோய் பெரும்பாலும் வலி மற்றும் பிற அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். இதனால் தங்களது சிறுநீரக செயலிழப்பு 90% மக்களுக்கு தெரியாமலே இருக்கும் என்று தேசிய சிறுநீரக அறக்கட்டளை கூறுகிறது இதனிடையே தொற்றிலிருந்து மீண்ட சில நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தீவிர சிறுநீரக செயல்பாடு குறைவு ஏற்படலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆய்வு சமீபத்தில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜி இதழில் வெளியிடப்பட்டது. நோய்வாய்ப்பட்ட கோவிட் நோயாளிகள் ஆரம்பத்தில் நீடித்த சிறுநீரக பாதிப்பை அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதே போல குறைவான கடுமையான ஆரம்ப நோய்த்தொற்று உள்ளவர்கள் கூட பாதிக்கப்படலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாதவரான சிறுநீரக மருத்துவர் மற்றும் Yale மெடிசினின் இணை பேராசிரியர் டாக்டர். எஃப். பெர்ரி வில்சன் ஆய்வு முடிவு பற்றி கூறுகையில், நான் பார்த்த வரை தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் இடையே சீறுநீரக பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் சிறுநீரகத்துடன் தொடர்புடைய முக்கியமான நிகழ்வுகளின் அதிக ஆபத்தை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது என்று கூறினார். செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு, SARS-CoV-2 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீரக பாதிப்பு மற்றும் நாள்பட்ட மற்றும் இறுதி நிலை சிறுநீரக நோய்களை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை காட்டியுள்ளது.

Also read : இளைஞர்களை குறி வைக்கும் மாரடைப்பு : என்ன காரணம்..? என்ன தீர்வு..? மருத்துவரின் விளக்கம்...

சிறுநீரக கோளாறால் இதயம், நுரையீரல், மத்திய நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படலாம். சிறுநீரக நோயின் இறுதி கட்டத்தில் டயாலிசிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆபத்தான நிலையும் உருவாகும். சமீபத்திய Department of Veterans Affairs health system பதிவுகளின் அடிப்படையில், மார்ச் 1, 2020 - மார்ச் 15, 2021-க்கு இடையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 89,216 நபர்களின் தரவை பகுப்பாய்வு செய்தது. இத்துடன் கோவிட் நோயாளிகள் அல்லாத 1,637,467 நபர்களின் தரவுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் 1,51,289 பெண்களை உள்ளடக்கிய தரவுகளையும் குழு ஆய்வு செய்தது. இதில் சுமார் 8,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களிடையே சிறுநீரக செயல்பாடு குறைவதற்கான ஆபத்து அதிகம் என்பதும், லேசான கோவிட் -19 தொற்று ஏற்பட்டிருந்த நோயாளிகளுக்கும் கூட இந்த ஆபத்து நீடிக்கிறது என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

Also read : இந்த பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சளை தொடவே கூடாதா..? கவனமாக இருங்கள்...

தங்களது ஆய்வு பற்றி கூறிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியர் ஜியாத் அல்-அலி, "லேசான தொற்று உள்ளவர்கள், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்கு கூட, நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற பெரிய பாதகமான சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து 15% , கடுமையான சிறுநீரகக் காயம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து 30% உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். தொற்று பாதிப்பு கடுமையாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு, பெரிய பாதகமான சிறுநீரக கோளாறு ஆபத்து ஏற்பட ஏழு மடங்கு அதிக வாய்ப்பு, இறுதி கட்ட சிறுநீரக நோயின் ஆபத்து 13 மடங்கு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: