பெண்களைக் கவர கிட்கேட் சாக்லெட் ஐஷாடோவை வெளியிட்ட நிறுவனம்!

கிட்கேட்டின் ராப்பர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு இந்த ஐஷாடோவை தயாரித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Web Desk | news18
Updated: February 8, 2019, 6:03 PM IST
பெண்களைக் கவர கிட்கேட் சாக்லெட் ஐஷாடோவை வெளியிட்ட நிறுவனம்!
கிட்கேட் ஐஷாடோ
Web Desk | news18
Updated: February 8, 2019, 6:03 PM IST
கொரியாவைச் சேர்ந்த 'ஈட்யூட் ஹவுஸ்' (Etude House)  பியூட்டி நிறுவனம் கிட்கேட் சாக்லெட் ஸ்டைலில் ஐஷாடோ தயாரித்துள்ளது.இந்நிறுவனம் கிட்கேட்டின் ராப்பர் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு இந்த ஐஷாடோவை தயாரித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதற்கு  ‘ஒரிஜினல்’ என்று பெயர் வைத்துள்ளது. அதில் மொத்தம் 6 வகையான நியூட்ரல் ஷேட்களில் ஐஷாடோவை வெளியிட்டுள்ளது. அதோடு ஸ்ட்ராபெர்ரி தீமிலும் மற்றொரு கிட்கேட் ஐஷாடோவையும் வெளியிட்டுள்ளது.  ஐஷாடோவுடன் இலவசமாக கிட்கேட் பவுச்சும் அளிக்கப்படுவதுதான் அதன் சிறப்பம்சம்.இந்த ஸ்டைல் பெண்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த ஐஷாடோவின் ஸ்டைல் சாக்லெட் போன்றே இருப்பதால் சுவைக்கத் தூண்டுவதாக கொரியாவை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...