ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த பெண்களுக்கு அதிகாரமளிப்பது மிக அவசியம்!

சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த பெண்களுக்கு அதிகாரமளிப்பது மிக அவசியம்!

பெண்கள்

பெண்கள்

Women Empower | நகர்ப்புற பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை பெறுவதில், கிராமப்புறங்களில் வாழும் பெண்களை காட்டிலும் சமூக-கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. பாரம்பரிய பாலின ஒடுக்குமுறையின் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் வடிவங்கள் ஆகியன கிராமப்புற பெண்களின் அகத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :

இந்தியாவை தன்னிறைவு கொண்டதாகவும், பொருளாதார ரீதியாக துடிப்புமிக்கதாக மாற்றுவதில் பொருளாதார முகவர்களாக செயல்படும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் உற்சாகமாக செயல்படுவதன் மூலமான பங்களிப்பை உறுதி செய்ய பெண்களுக்கு அதிகாரமளிக்காத வரையில் நாம் உண்மையிலேயே -ஆத்மநிர்பார் பாரத் (‘Atmanirbhar Bharat’) ஆக- [தன்னிறைவுப் பெற்ற இந்தியாவாக] மாற முடியாது. சமூக நீதிக்கும் அப்பால், தேசிய வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நிலையான வளர்ச்சிக்கும் அவர்கள் முக்கிய பங்காற்றுபவர்களாகவும் உள்ளனர். மேலும் ஐநாவின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கு (UN Sustainable Development Goals (SDG)) இல் கையொப்பமிட்டிருப்பதால் பாலின சமத்துவம் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளிக்கும் உலகளாவிய பொறுப்பை நாம் கொண்டுள்ளோம்.

முன்பு அவர்கள் சமூக மாற்றங்களில் பங்கேற்க வாய்ப்புகள் பெரிதும் அளிக்கப்படாத நிலையில், பெண்களுக்கு 100 சதவீதம் அதிகாரமளிப்பதை அடைவது என்பது, இந்திய தொழிலாளர்களில் 48 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பதை குறிப்பதாகும். பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின்படி (According to the Ministry of Corporate Affairs,),  தொழிலாளர்களில் 21 சதவீதம் பெண்கள் பங்கேற்புடன், இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை, உலக சராசரியில் பாதியாக உள்ளது. இதன் விளைவாக, சம வாய்ப்புகளுடன் பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம், இந்தியா 2025-ல் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 770 பில்லியன் டாலர்களை கூடுதலாக ஈட்ட இயலும். இந்த இலக்கை அடைவதற்கு, பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் செய்வதற்கான ஒரு சமூக மாற்றத்தை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இருந்த போதிலும், இந்த மாற்றத்தை மேற்கொள்வது என்பது குறிப்பிட்ட சவால்கள் காரணமாக, அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் சொல்வதற்கு எளிதானதாக இருக்கலாம். ஆனால் செயல்படுத்த கடினமானது.

கிராமப்புற இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், குறைந்த வயதிலேயே திருமணம் முடித்தல், பிரசவம், நிதி மற்றும் டிஜிட்டல் மேலாண்மை குறித்த போதிய அறிவு இல்லாதது, கடன் வசதிகளை பெற இயலாத நிலை போன்ற பொருளாதார செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற தாமாக செயல்பட சுதந்திரமில்லாத சமூகங்களில், சிறிய அளவிலான குடும்பம் மற்றும் பெரிய தேசம் ஆகியன சமூகத்தின் ஒரு பிரிவினரை முழுமையாக இழக்கிறது. அவர்கள் மிகப் பெரிய அளவில் நுண்ணறிவு கொண்டவர்களாகவும், சிக்கலை தீர்க்கும் ஆக்கப்பூர்வமான திறன்கள், சிக்கலான பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக கையாளும் ஆற்றல், கணிசமான அளவு மூலதனமாக மனித வளத்தையும் கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால், அவர்கள் நம்பிக்கைக்குரிய தொழில் முனைவோர், அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைவர்கள் ஆவதற்கான வாய்ப்புகளையும் இழக்கின்றனர்.

நகர்ப்புற பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை பெறுவதில், கிராமப்புறங்களில் வாழும் பெண்களை காட்டிலும் சமூக-கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. பாரம்பரிய பாலின ஒடுக்குமுறையின் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் வடிவங்கள் ஆகியன கிராமப்புற பெண்களின் அகத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டுள்ளன. தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான வலுவான தூண்டுதல்கள் இருந்த போதிலும், குடும்ப ஆணாதிக்கத்தின் நிழலிலேயே வாழ வேண்டியதாக உள்ளது.

நிலையான இடையீடுகள் வாயிலாக சாதகமான மாற்றங்களை உருவாக்குதல்:

இன்று, அரசாங்கமும், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் நன்மைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. சமூக மாற்றத்தை ஏற்படுத்த ’பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு அளிப்போம்’ [Beti Bacho Beti Padhao] திட்டம் மற்றும் பதின்பருவ மகளிருக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் தேசிய கல்வி கொள்கை 2020-ன் கீழ் அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கும், பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திறன் மற்றும் பயிற்சி திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. திறன் மேம்பாடு, கல்வி, வருமானம் ஈட்டுதல் ஆகியவற்றில், இந்த முயற்சிகள் பல்வேறு தனியார் துறை முன்னெடுப்புகளால் இந்தியா முழுவதுதும் வலுப்படுத்தப்படுகின்றன. நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக, கிராமப்புற சமூகங்களில் மாற்று சக்திகளாக பரிணமிக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூக நலப் பிரிவான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (Srinivasan Services Trust (SST)) பெண்களுக்கு தொடர்ந்து அதிகாரமளித்து மேம்படுத்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் வாயிலாக, கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்த, சுய உதவி குழுக்களை அமைக்க SST வசதிகளை செய்து தருகிறது. SST-ன் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சுய உதவி குழுக்களில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

தென்னம்பட்டினம் பஞ்சாயத்தில் உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் இல்லத்தரசியான கவிதா, அப்படி ஒரு அனுபவத்தை பெற்றுள்ளார். அவரது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன்னிறைவு பெறவும், சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்றும் எப்போதும் கவிதா விரும்பினார். SST மூலம் அவருக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது அவளுடைய கனவை நனவாக்கும் நம்பிக்கையை கொடுத்தது. அறக்கட்டளை மூலம் பனை ஓலை கைவினை பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்க உதவியது. அதில் அவர் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, கிராமத்தில் உள்ள தாழம்பூ சுய உதவி குழுவிலும் இணைந்தார். கவிதா தனது பனை ஓலை கைவினைப் பொருள்களை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விற்பனை செய்தார். சென்னை மற்றும் கடலூரில் இருந்து ரூ.12,800/-க்கு ஆர்டர்கள் வாங்கி, அதில் ரூ.2,300/- லாபம் ஈட்டினார். மூன்றே மாதங்களில் ரூ.15,000/- லாபத்தை ஈட்டினார். அவர் தனது தயாரிப்புகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தினார். இது பிற நாடுகளில் வசிக்கும் மக்களிடமிருந்தும் அவர் மீதான ஒரு கவனத்தை ஏற்படுத்தியது. இந்த பயிற்சியின் முக்கியத்துவம் என்பது அவரைப் போன்ற ஒரு பெண்ணை உருவாக்குவது, அவர் மேலும் 5 பெண்களுக்கு பயிற்சி அளித்தார். பாரம்பரிய பனை ஓலை கைவினைப் பொருள்கள் எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். அவரது மகனும் மகளும் இந்த செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை பார்த்து கவிதா பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.

மற்றொரு உதாரணம், வறட்சியால் பாதிக்கப்பட்ட அரசனார் குளம் கிராமத்தில் உள்ள சீரியல் பல்புகள் தயாரிக்கும் மகாமாரியம்மன் சுய உதவிக் குழு. இக்குழுவானது, திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் சுப காரியங்களுக்கு சீரியல் விளக்கு செட்கள் மற்றும் எல்இடி பல்பு பேனர்கள் ஆகியவற்றை தயாரித்து கொடுக்கிறது. தனலட்சுமி, 11 ஆண்டுகளுக்கு முன்பு இத்தொழிலை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கணவர் SST உடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதை விளம்பரப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் பணியாற்றினார். தனலட்சுமி பல்பு அமைக்கும் பணிகளை கற்றுக் கொண்டார். அசோக்கின் நுட்பங்களை கவனித்து புரிந்து கொண்டார். இன்று, தனலட்சுமி சீரியல் செட் பல்புகள் அமைக்கும் தொழிலில் 50 பெண்களுக்கு வேலை அளிக்கும் ஒரு முதலாளி. இதுவரைக்கும் 550க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இத்தொழிலில் அவர் பயிற்சி அளித்துள்ளார். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் சொந்த யூனிட் தொடங்கி, அதில் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 20 முதல் 30 பெண்களை வரை வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். தனலட்சுமி ஒரு பெருமை மிக்க தொழில் முனைவோர். கிராமப்புறத்தில் ஏராளமானோரின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளார். மேலும் அவருக்கு அக்கம் பக்கத்தினரும் ஆதரவு அளித்தனர். 11 வருடங்களுக்கு முன்பு தனது தொழிலை தொடங்கும் போது இப்படியொரு வெற்றியை அடைவார் என அவர் நினைத்து கூட பார்த்ததில்லை.

சீரியல் விளக்கு செட் தயாரிக்கும் பெண்கள்

கவிதா மற்றும் தனலட்சுமியின் வெற்றி கதைகள் கிராமப்புற சமூகங்களில் பெண்களின் அதிகாரம் மற்றும் பொருளாதார உள்ளடக்குதலுக்கான முக்கியத்துவம் வாய்ந்த உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. சமூகப் பார்வைகளை மாற்றி, சமூங்களில் முற்போக்கான கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இவை வலியுறத்துகின்றன. ஆகவே, அனைத்து தரப்பினரின் வலுவான ஒத்துழைப்புடன் இத்தகைய முன்முயற்சிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கிராமப்புற பெண்களின் நிலையை மாற்றி, சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் அதே வேளையில் இது அவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ஆக்குகிறது.

(கட்டுரையாளர் ஸ்வரன் சிங், ஓய்வு பெற்ற  ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் தலைவராக உள்ளார் )

First published:

Tags: International Women's Day, Women, Women Empower, Women's Day, Working women