Home /News /lifestyle /

”விரும்பிய வாய்ப்பு கிடைக்காததால் இன்றும் வருத்தப்படுகிறேன்” - சாரா அலிகான் ஓப்பன் டாக்..

”விரும்பிய வாய்ப்பு கிடைக்காததால் இன்றும் வருத்தப்படுகிறேன்” - சாரா அலிகான் ஓப்பன் டாக்..

sara ali khan

sara ali khan

Sara Ali Khan | மிக பெரிய நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் வாரிசாக இருந்தாலும், அவர்களின் ஆதரவோடு திரைத்துறையில் அறிமுகமாகிவிடலாம். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்கு திறமை அவசியம் தேவைப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமூகம் முன்னேற்றம் பெறுவதற்கு உதவும் மிக முக்கியமான கருவியில் கல்வி ஒன்று. கல்வி என்று வரும்போது பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் அளவுக்கு தேர்வுகள் இருக்க வேண்டும். ஆனால் அவை குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. சாதாரண குடிமக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ ஒரு சில பிரபலங்களின் பிள்ளைகளுக்கும் கல்வி முக்கியம் என்பதை ஒரு சில நேரங்களில் அறிய முடிகிறது. அப்படி சமீபத்தில் தன்னுடைய மன வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார், பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலிகான்.

எந்த ஊர், எந்த நாட்டு நடிகையாக இருந்தாலும் சரி வெறும் அழகு பொம்மையாக, கவர்ச்சியாக தோன்றிவிட்டால் போதும் என்ற நிலை மாறி விட்டது. இப்பொழுதும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தாலும் அதை தாண்டி பல்வேறு துறைகளில் பல திறமைகளோடு நடிகைகள் திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்தது போல நடனம், பாடல், இசை, பற்றிய அறிவு ஞானம் நடிப்பு தேர்ச்சியும் பெற்று தான் பல நடிகைகள் திரைத்துறையில் அறிமுகம் ஆகிறார்கள்.

மிக பெரிய நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் வாரிசாக இருந்தாலும், அவர்களின் ஆதரவோடு திரைத்துறையில் அறிமுகமாகிவிடலாம். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்கு திறமை அவசியம் தேவைப்படுகிறது.



பாலிவுட்டின் மிகப்பெரிய குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் தான் அழகும் இளமையும் ததும்பும் சாரா அலிகான். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சைஃப் அலிகான் மற்றும் ஒரு காலத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகையான அம்ரிதா சிங் ஆகியவர்களின் முதல் பெண் சாரா அலிகான்.

Also Read : சென்னைக்கு அருகிலேயே அற்புதமான டிராவல் டெஸ்டினேஷன்கள்.. பட்ஜெட் டிராவல் இதோ

தற்போது பாலிவுட்டில் இளம் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் சாரா அலிகானுக்கு தான் விரும்பிய கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வாழ்நாள் வருத்தமாக இருக்கும் என்பதை சமீபத்தில் பதிவு செய்திருந்தார். பல திரைத்துறை பிரபலங்கள் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்கிறார்கள். அதே போலத்தான் சாரா அலிகானும்! உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு விரும்பினார். ஆனால் அவருடைய கனவு நிறைவேறவில்லை.

“எனக்கு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் இடம் கிடைக்கவில்லை. நான் நிராகரிக்கப்பட்டு விட்டேன் என்பதை அறிந்தபோது என் கனவு என் கண் முன்னே சுக்குநூறாக உடைந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, என் உலகமே இடிந்து போனதாக உணர்ந்தேன்” என்று வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.



சாரா அலிகான், “கல்வி மிகவும் முக்கியம் என்று என்னுடைய அப்பா எனக்கு இளம் வயதிலேயே கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் படிக்கும் கல்லூரி அல்லது யூனிவர்சிட்டியில் எனக்கான ஒரு பிரதானமான இடத்தை தக்க வைத்துக்கொள்வதும் அவசியம் என்பதை அவர் கற்று கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்தார். சாரா அலிகானின் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கல்வியின் முக்கியத்துவம் அறிந்திருக்கிறது என்பதையும் அவர் கூறியிருந்தார்.

Also Read : உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய பானங்கள்.!

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அட்மிஷன் மறுக்கப்பட்டவுடன் சாராவுக்கு கொலம்பியா யூனிவர்சிட்டியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் தனது கல்வியை முடித்தார். கொலம்பியாவில் மூன்று ஆண்டுகள் படித்ததும், அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருந்ததாகவும் சாரா அலிகான் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் தான் படிப்பதற்கு தனக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதையும் அவர் பின்னாளில் உணர்ந்தார் என்றும் கூறினார்



மேலும், சாரா “ஒரு யுனிவர்சிட்டியில் இடம் கிடைப்பதற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், அந்த கல்வி நிலையத்தில் உங்களுக்கான இடத்தை தேடுவதற்கான முயற்சியை நீங்களே தான் செய்ய வேண்டும், உங்களுக்கு என்ன பாடங்கள் பிடித்திருக்கிறது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நீங்கள் நீங்களாக இருங்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள், என்ன படிக்க விருப்பம் என்பதை கவனமாகத் தேர்ந்தெடுங்கள் என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Published by:Selvi M
First published:

Tags: Education, Lifestyle, Sara Ali Khan

அடுத்த செய்தி