'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' - 43 கிலோ உடல் எடையை குறைத்து ‘ட்ரிம்’ ஆன ஐபிஎஸ் அதிகாரி

ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே.

உடற்பருமன், மளமளவென உடல் எடை எகிறுவது உலகம் முழுதுமே உள்ள ஒரு பெரிய பிரச்னை. பலரும் உடல் எடையைக் குறைக்க ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று அலைந்து திரிந்தும் பயனற்று போய் கடைசியில் குண்டாக இருந்து விட்டுப் போவோம் என்று தோல்வி மனப்பான்மையில் முடிந்து விடுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆனால் ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே அப்படி அல்ல. எந்த மாதிரியான உணவு உட்கொள்ளும் பழக்கம் அவர் உடல் எடை அதிகரிப்புக் காரணமோ அதை கட் செய்தார், புதிய லைஃப் ஸ்டைல் மேற்கொண்டார் 43 கிலோ உடல் எடையை இழந்து ட்ரிம் ஆனார்.

    உடற்பருமனால் கவலையடைந்து நம்பிக்கை இழந்தவர்களுக்கு இவரது விடாமுயற்சி ஊக்கம் தருவதாக அமையும்.

    விவேக் ராஜ் சிங் தேசிய போலீஸ் அகாடமியில் சேரும்போது அவரது உடல் எடை 134 கிலோ!! ஆனால் அகாடமியில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் பெரிய அளவில் உடல் எடையைக் குறைத்துள்ளார் விவேக் ராஜ். தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அவர் இது தொடர்பாகக் குறிப்பிடும் போது, “46 நாட்கள் கடும் பயிற்சி, தேகப்பயிற்சி, அனைத்து பயிற்சிகளும் எனது எடையை 134 கிலோவிலிருந்து 104 ஆகக் குறைத்தது. இது எனக்கு பெரிய சாதனையாக அமைந்தது” என்றார்.

    ஆனால் பணியை ஏற்றவுடன் இவரது எடைக்குறைப்புப் பயணம் சற்றே பின்னடைவு கண்டது. “பீகாரின் நக்சலைட் பகுதிகளில் பொறுப்பேற்ற போது எனக்கு மீண்டும் உடல் எடை கூடவே செய்தது. இப்போது 138 கிலோ எடைப் போட்டேன். தனது சாப்பிடும் பழக்க முறைதான் இத்தனையாண்டு காலம் உடல் எடை இப்படிக் கூடுவதற்கு காரணம் என்கிறார் விவேக் சிங்.

    “அடிப்படையில் நான் ஒரு சாப்பாட்டுராமன், நிறைய சாப்பிடுவேன். உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்பதே என் நோக்கம். மூளைக் கெட்டத் தனமாகச் சாப்பிட்டேன் என்றுதான் கூற வேண்டும், அதோடு வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் சாப்பிடுவேன், இதுதான் என் உடல் பெருக்கத்துக்குக் காரணம்.

    அதன் பிறகு வாக்கிங் போகத் தொடங்கி இப்போது வாக்கிங் என்பது தன் கூடப்பிறந்த பழக்கமாகி விட்டது, ஏனெனில் உடல் எடையை இதன் மூலம்தான் தான் குறைத்ததாக அவர் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடைக் குறையத் தொடங்கியதும் சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி குறைத்துக் கொண்டுள்ளார்.

    “கடந்த சில மாதங்களாக என் உணவை எண்ணி எண்ணி சாப்பிடுகிறேன். இன்று வரை 43 கிலோ எடையை வாக்கிங் மற்றும் சாப்பாட்டு முறை மாற்றத்தின் மூலமே குறைத்துள்ளேன். இதன் மூலம் உடல் ஷேப்பும் நன்றாக ஆகி விட்டது” என்றார்.

    விவேக் சிங் என்ற இந்த ஐபிஎஸ் அதிகாரியின் இந்த உடல் எடைக்குறைப்புப் பயணம் அவர் உடற்தகுதியை மேம்படுத்தியதோடு, அவரது ஆரோக்கியத்தையும் செழுமையாக்கியுள்ளது. இப்போது தனது ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: