நீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..!

எல்லோருக்கும் மிதமான அளவில் உணவை உட்கொள்வதால் உடல் எடைக் குறையும் அல்லது ஏறாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன் வைக்கிறது இந்த ஆய்வு.

news18
Updated: July 24, 2019, 11:26 AM IST
நீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்..!
நீங்கள் சாப்பிடும் பழக்கத்தை மாற்றினால்தான் உடல் எடை குறையும்
news18
Updated: July 24, 2019, 11:26 AM IST
இன்றைய டையட் கலாசாரம் என்பது மிதமான அளவில் உணவுகளை உண்பதுதான். ஆனால் அதுதான் உங்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என பகீர் தகவலை அளிக்கிறது ஆய்வு.

ஆம், எல்லோருக்கும் மிதமான அளவில் உணவை உட்கொள்வதால் உடல் எடைக் குறையும்  என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன் வைக்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வில் 7,000 பேரின் உணவுப் பழக்கத்தைக் கண்கானித்துள்ளது. அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள், அதில் உள்ள கலோரி அளவு, ஒவ்வொரு வாரமும் எத்தனை வகையான உணவுகளை மாற்றுகின்றனர் என்பன போன்ற பட்டியலைத் தயார் செய்து அதன்படி கண்கானித்துள்ளது.


அதில் பெரும்பாலானோர் உடல் எடைக் கட்டுப்பாடு காரணமாக அளவான உணவை உட்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒவ்வொரு வாரமாக, மாதமாகக் கண்காணித்ததில் 120 சதவிகிதம் இடுப்பின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் உடல் எடையும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் தொடர்ந்து வகைவகையான உணவுகளை முயற்சி செய்யும்போது நீரிழிவு நோய் வரும் ஆபத்தும் இருக்கிறது என PLOS ONE ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Loading...

அளவாகச் சாப்பிடுவதால் பசிக்கவே கூடாது என்பதற்காக ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உட்கொள்கின்றனர். சில சமயங்களில் பசியையும் தவிர்த்துவிடுகின்றனர். இப்படி கலோரியில் அதிக கவனம் செலுத்துவதால் உண்ணும் உணவின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தவறுகின்றனர். அதிகக் கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். எனவேதான் உடல் எடை அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.

எனவே உடலைக் குறைக்கிறேன் அல்லது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் என உடலைக் கெடுத்துக்கொள்வதைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவை நன்கு சாப்பிட்டு அதற்கு ஏற்ற உடற்பயிற்சி செய்தாலே உடல் எடை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...