• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பொலிவான சருமத்தை பெற உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய பழங்கள்!

பொலிவான சருமத்தை பெற உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய பழங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

நமது சருமத்தின் அழகை பராமரிக்க நீங்கள் சிறந்த டயட்டை பின்பற்ற வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுவாக உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை காக்க பல அழகு மருந்துகளை உபயோக்கிக்கலாம். அனால் அதையும் மீறி இயற்கை முறையில் இதையெல்லாம் பராமரிக்கலாம். அதாவது ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது சருமத்தில் பிரதிபலிக்கும். நமது சருமத்தின் அழகை பராமரிக்க நீங்கள் சிறந்த டயட்டை பின்பற்ற வேண்டும். அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொள்வதால் உங்கள் சருமம் பொலிவாகும். நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

ஆப்பிள்

ஆப்பிள் வைட்டமின் சி, ஏ, தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இவை உடலுக்கு நன்மை தருவதை போன்றே சருமத்துக்கும் நன்மை செய்கிறது. சருமத்தை பாதுகாக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது, இதனால் சருமத்தில் சுருக்கங்கள் விழுவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் மெலனின் உற்பத்தியை சீராக வைக்க உதவுவதால் சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களினால் சருமம் சேதம் ஆவதை தடுக்கிறது. வைட்டமின் சி ஆனது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே தினமும் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளை

மாதுளம் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து, நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் இ, வைட்டமின் கே, ரிபோபிளவின், கால்சியம், காப்பெற், செலினியம், ஜின்க் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது வயதாவதை கட்டுப்படுத்தி எப்பொழுதும் இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் ஒரு மாதுளம் பலத்தினை உட்கொண்டு வாருங்கள். அதேபோல மாதுளை, பிரவுன் சுகர்,தேன் மற்றும் ஆரஞ்சு பொடி சேர்த்து கலந்து மாஸ்க்காக போட்டுக் கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். உங்கள் முகப்பரு சில நாட்களிலேயே மறைந்து விடும்.

செர்ரி

சுவைமிக்க செர்ரி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு மற்றும் பல தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதனை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும். செர்ரி பழங்களை நன்றாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சுருக்கம் மறையும்.

Also read... ஆரோக்கியமான சருமத்தை பெற இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ்!

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், தயாமின், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இது சருமத்தின் அழகை மேலும் பிரகாசமாக்க செய்கிறது. ஆரஞ்சு பழங்களை காட்டிலும் ஆரஞ்சு தோல்களில் வைட்டமின் சி உள்ளடக்கம் அதிகமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்துக்கு மிக இன்றியமையாதது.

பப்பாளி

சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கும். அதற்கு பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

ஸ்டாபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். இது சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம் வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும். ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்ற்ம் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். எனவே ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்தால் சருமம் பொலிவாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: