ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்கள் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்க இவ்வளவு வழிகள் இருக்கா..? வாய்ப்பை தவறவிடாதீங்க..!

பெண்கள் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்க இவ்வளவு வழிகள் இருக்கா..? வாய்ப்பை தவறவிடாதீங்க..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆன்லைன் பிஸ்னஸ்தான் இன்று களைகட்டுகிறது. இதற்கு பெரிய அளவில் செலவுகள் இல்லை. ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் இப்படி எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் முதலீடு செய்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸப்பில் விற்பனை செய்யலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் சுயதொழில் செய்வது வருமானத்திற்கானது மட்டுமல்ல அவர்களுக்கான நம்பிக்கையை விதைப்பதுதான் முக்கிய காரணம். சுற்றத்தார்களுக்கு அவர்கள் மீதான மரியாதையைப் பெருக்கும்.

இன்று யூடியூபர்கள் பெருகிவிட்டதன் காரணம். எளிதில் சம்பாதிக்கலாம் என்பதுதான். மக்களைக் கவரும் வகையில் சிறந்த யோசனைகளை தொகுத்து அதில் ஒன்றை தேர்வு செய்து யூ டியூப் சேனல் துவங்குங்கள். அது மக்களுக்கு பயனுள்ள, தேவைக்கு, தேடுதலுக்கு உதவும் சேனலாக இருந்தால் விரைவில் பிரபலமடையும். சந்தாதாரர்களும் அதிகரிப்பார்கள். வருமானம் ஈட்டலாம்.

Read More : வீட்டிலிருந்தே ஈஸியா பெண்கள் சம்பாதிக்க முடியும்..! டியூசன் முதல் குழந்தைகள் பராமரிப்பு வரை.. இதோ முழு விபரம்!

இது போல நீங்களும் வீட்டிலிருந்து சுயத்தொழில் செய்ய கீழே சில யோசனைகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

வலைப்பதிவு : எழுத்து ஆர்வம் இருப்போர் இதை முயற்சிக்கலாம்.யூ டியூப் போலவே உங்களுக்கு பிடித்த விஷயங்களை , மக்களுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் வகையில் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். லைஃப்ஸ்டைல், ஹெல்த், சமையல் டெக்னாலஜி தகவல்கள் இப்படி எதுவாக இருந்தாலும் தயங்காமல் துவங்கலாம். இதற்கு தற்போது இலவசமாகவே கூகுள் word press, blogger, weebly, wix என பல சேவைகள் இலவசமாக வலைப்பதிவு தொடங்க உதவுகின்றன. அதில் சென்று விருப்பம் போல் உங்கள் வலைப்பதிவை அமைத்துக்கொள்ளலாம்.
சமையல் கலை : இன்று வீட்டுச் சாப்பிட்டிற்கு ஏங்குவோர் பலர் உள்ளனர். ஆன்லைனில் வீட்டுச் சுவையைத் தேடி தேடி சாப்பிடும் இளைஞர்கள்தான் அதிகம். நீங்கள் சமையலில் அசத்துபவர் என்றால் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்களில் பதிவு செய்து கொண்டு வீட்டிலேயே சமைத்து உணவுகளை ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.
தையற்கலை : உங்களுக்கு ஏற்கனவே தையற்கலை தெரியுமென்றால் தையல் பயிற்சி அளிக்கலாம். இன்றைய சுடிதார், பிளவுஸ் என்றில்லாமல் குர்தா, ஷார்ட் டாப்ஸ், அனார்கலி என காலகட்ட ஆடை மாற்றங்களுக்கு ஏற்ப உங்களின் திறமையை மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். தெரியாது என்றால் கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தே ஆடைகள் தைத்து சம்பாதிக்கலாம்.
இன்ஸ்டாகிராம் சந்தை : ஆன்லைன் பிஸ்னஸ்தான் இன்று களைகட்டுகிறது. இதற்கு பெரிய அளவில் செலவுகள் இல்லை. ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் இப்படி எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் முதலீடு செய்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸப்பில் விற்பனை செய்யலாம். 
ஃப்ரிலான்ஸர் : எழுத்தும் இன்று தொழில்தான். உங்களுக்கு எழுதுவதில் விருப்பம் இருந்தால் பத்திரிகைகளுக்கு எழுதி பணம் சம்பாதிக்கலாம். அதேபோல் ஆன்லைனில் டிரான்ஸ்லேட்டர்களும் தேவைப்படுகிறார்கள். அப்படி நீங்கள் வீட்டிலிருந்தே எந்த முதலீடும் இன்றி மொழிபெயர்ப்பாளராக பணியாற்றலாம்.
நிகழ்ச்சி நிர்வாகம் : ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்று சொல்லக் கூடிய இதுவும் இன்று டாப் பிஸ்னஸ்தான். அலுவலக நிகழ்ச்சிகள், திருமணம், பர்த் டே என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு சில குழுக்கள் இருக்கின்றன. நிகழ்ச்சி நிர்வாகம் தொழிலையும் நீங்கள் வீட்டில் இருந்த படியே குழுவை மட்டும் அமைத்தால் போதும். சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து ஆர்டர்களைப் பெறலாம். இதற்கு முதலில் உங்கள் உறவினர்களின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை ஆர்டர் எடுத்து பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
யோகா பயிற்சி : உங்களுக்கு யோகா தெரியுமெனில் வீட்டிலிருந்தபடியே யோகா பயிற்சி எடுக்கலாம். இதிலும் நல்ல லாபம் ஈட்டலாம். அதிக முதலீடும் இருக்காது. அமைதியான சூழல், விசாலமான இடம் இருந்தால் போதும். தற்போது ஆன்லைன் வகுப்புகள் பிரபலமாகி வருகிறது. எனவே ஆன்லைனிலேயே யோகா பயிற்சி வகுப்புகளும் எடுக்கலாம். இதுவும் சிறிய முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
கிராஃபிக் டிசைனிங் : வீட்டிலிருந்தே இணையதளம் உருவாக்கிக் கொடுக்க கிராஃபிக் டிசைனர்கள்தான் இன்று தேவைப்படுகின்றனர். நீங்கள் அதில் வல்லவர் எனில் வீட்டிலிருந்தே செய்து கொடுக்கலாம் அல்லது ஆர்டர்களை பெறும் திறமை இருந்தால் கிராஃபிக் டிசைனிங் தெரிந்தவர்களை குழுவாக அமைத்து அவர்களை நிர்வகிக்கலாம்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Job Fair, Women