ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இயற்கையான முறையில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் திரவம் தயாரிப்பது எப்படி..?

இயற்கையான முறையில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் திரவம் தயாரிப்பது எப்படி..?

பாத்திரம் கழுவும் திரவம்

பாத்திரம் கழுவும் திரவம்

Chemical-Free Dishwashing Liquid | வேதிப்பொருட்கள் கலந்த திரவத்தை காட்டிலும் இந்த இயற்கை திரவத்தில் பாத்திரம் கழுவும் பொதுஅழுக்குகளை மொத்தமாக நீக்குவதோடு உடலுக்கும் எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை. இயற்கையான முறையில் பாத்திரம் கழுவும் திரவம் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாத்திரம் கழுவுவது அன்றாட வேலைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட 15 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரையிலும் பாத்திரம் கழுவுவதற்காக சராசரியாக செலவிடுகிறார்கள். ஆனால் இவ்வாறு நீண்ட நேரம் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபடும் போது பாத்திரம் கழுவும் திரவத்திலுள்ள வேதி பொருட்கள் உங்கள் கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனித உடலுக்கு இந்த வேதி பொருட்களினால் பிரச்சனைகள் உண்டாகின்றன. சருமத்திலும் பல ஒவ்வமிகள் ஏற்படுகின்றன. எனவே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வீட்டிலேயே பாத்திரம் கழுவும் திரவத்தை இயற்கையான முறையில் தயாரிக்கலாம்.

நம் மக்கள் பாத்திரம் கழுவும் போது அதிலிருந்து நுரை அல்லது குமிழ்கள் வெளிப்பட்டால் மட்டுமே அது நல்ல பாத்திரம் கழுவும் திரவம் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல இயற்கையாக பயன்படுத்தப்பட்ட திரவத்தில் குமிழ்கள் வெளிவராது. ஆனால் வேதிப்பொருட்கள் கலந்த திரவத்தை காட்டிலும் இந்த இயற்கை திரவத்தில் பாத்திரம் கழுவும் பொதுஅழுக்குகளை மொத்தமாக நீக்குவதோடு உடலுக்கும் எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை. இயற்கையான முறையில் பாத்திரம் கழுவும் திரவம் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்:

ஒரு கப் பூந்திக்கொட்டைகள்

இரண்டு கப் தண்ணீர்

¼ கப் கல் உப்பு

7 எலுமிச்சை பழம்

நான்கு டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகர்

Also Read : எலுமிச்சை ஊறுகாயில் ஒளிந்திருக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இதோ..! 

தயாரிக்கும் முறை:

முதலில் பூந்தி கொட்டைகளை எடுத்து 8-9 மணி நேரம் வரை தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் ஒரு கடாய் நிறைய தண்ணீரை எடுத்து அதில் இந்த ஊற வைத்த பூந்தி கொட்டைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதித்துக் கொண்டிருக்கும் போது நாம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தை துண்டு துண்டாக வெட்டி அதில் போட வேண்டும். பிறகு அந்தக் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி குளிர விட்டு விட வேண்டும். தற்போது பூந்திக்கொட்டைகளை எடுத்து அவற்றின் மேல் தோலை உரித்து விட வேண்டும்.

பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு ஒரு பேஸ்ட்டை போல வரும் அளவிற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் தற்போது அந்தக் கலவையுடன் தண்ணீர் கலந்து மறுபடியும் ஒரு முறை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது அந்த கலவையை வெளியே எடுத்து அதனுடன் கல் உப்பு மற்றும் அரை கப் வெள்ளை வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் வரை கொதி நிலைக்கு கீழ் வேக வைக்க வேண்டும்.

Also Read : உஷார்: உங்கள் மெத்தையில் இந்த விஷயங்கள் தென்பட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து! 

அதன் பிறகு மற்றும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு கொதி நிலையில் வேக வைக்க வேண்டும். நன்றாக கொதித்தபின் அடுப்பை அணைத்து அந்த கலவையை குளிர வைக்க வேண்டும். இப்பொழுது இயற்கையான முறையில் தயாரித்த பாத்திரம் கழுவும் திரவம் தயார் இதனால் உங்களது சருமத்திற்கு அல்லது உடலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது மேலும் பாத்திரங்கள் சுத்தமாக அதில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்கும்.

Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Vessel wash