உங்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில ஈஸியான ஹேக்ஸ்!

கோப்புப் படம்

த்ரெட்டிங், வேக்ஸிங் கிரீம் மூலம் முடியை அகற்றுவதும் சற்று வலியை கொடுக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுவாகவே பெண்கள் தங்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளால் மிகவும் கவலை கொள்கின்றனர். அவற்றை நீக்க பல்வேறு முயற்சிகளை எடுப்பர். கடைகளில் விற்கும் ராசாயனம் கலந்த பேஸ்டுகள் மூலம் தேவையில்லாத முடிகளை அகற்றுவர். இருப்பினும் அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுதவிர, த்ரெட்டிங் மூலம் ரிமூவ் செய்வது, வேக்ஸிங் க்ரிம் பயன்படுத்தி முடிகளை நீக்குவது, ரேசர் மூலம் முடிகளை நீக்குவது என பல வழிகள் உள்ளன. ரேசர் மூலம் ஷேவ் செய்வது எளிதாக இருந்தாலும் முடியின் வேர் அப்படியே இருப்பதால் மீண்டும் முடி வளரும். அதேபோல த்ரெட்டிங், வேக்ஸிங் கிரீம் மூலம் முடியை அகற்றுவதும் சற்று வலியை கொடுக்கும். தேவையற்ற முடிகளை நீக்க இத்தனை செயற்கை வழிகள் இருக்கும் போது, இயற்கை வழிகளுக்கு மட்டும் பஞ்சமா என்ன. சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு, இயற்கை வழியில் தேவையற்ற முடிகளை அகற்ற ஈஸியான சில ஹேக்ஸ் குறித்து கீழே காண்போம்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 8 முதல் 9 தேக்கரண்டி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். அந்த கலவையை அடுப்பில் வைத்து குமிழ்கள் தோன்ற ஆரம்பிக்கும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் அதை குளிர வைத்து, ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் அதனை அப்படியே உலர வைக்க வேண்டும். கலவை நன்கு காய்ந்த உடன் அந்த பகுதியை வட்ட இயக்கத்தில் தேய்த்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் சர்க்கரை: வாக்சிங் செய்வதற்கு மாற்றாக உள்ள முறை இதுவாகும். இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். கலவையை சுமார் மூன்று நிமிடங்கள் சூடாக்கி தேவைப்படும் இடத்தில் தடவிக் கொள்ளலாம். வாக்சிங் போலவே இதனை பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் கலவையில் சற்று தண்ணீர் சேர்த்து சூடாக்கலாம்.

ஓட்ஸ்: இது மிகவும் எளிமையான முறை ஆகும். இரண்டு தேக்கரண்டி ஓட்மீலை பழுத்த வாழைப்பழத்துடன் கலந்து ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். பின்னர் அந்த இடங்களில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

உருளைக்கிழங்கு சாறு: ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் ஐந்து தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாற்றை சேர்த்து கலக்கவும். இதற்கிடையில், இரவு முழுவதும் ஊற வைத்த பயறு வகைகளை மென்மையான பேஸ்டு பதத்திற்கு அரைத்து அதனை சாறு கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும். இப்பொது இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் தடவவும். அது முற்றிலும் உலர்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும்.

சோளமாவு: முட்டையின் வெள்ளைக் கருவுடன் சோள மாவு ஒரு தேக்கரண்டி மற்றும் சர்க்கரை ஒரு தேக்கரண்டி கலக்கவும். இந்த கலவையை நீங்கள் தேவையற்ற முடி உள்ள இடங்களில் தடவி உலர்ந்ததும் அதனை உரித்தெடுக்கவும். முட்டையின் வெள்ளைக் கரு, மற்றும் சர்க்கரை மற்றும் சோள மாவுடன் இணைத்து தோலில் ஒரு மெல்லிய லேயரை உருவாக்கும்.

மஞ்சள்: மஞ்சள் தூளை தண்ணீரில் ஊறவைத்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி, உங்களுக்கு அதிக முடி இருக்கும் முக பகுதியில் தடவி, சில நிமிடங்கள் விட்டு விடுங்கள். அது காய்ந்தபின், வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி மஞ்சள் கலவையை துடைத்து எடுங்கள்.

Also read... ஆண்களே நீங்கள் ஹேண்ட்சமாக இருக்க ஆசையா? இதோ 5 சூப்பரான டிப்ஸ்!

கடலை மாவு: பல காலமாக கடலை மாவு ஒரு நல்ல பேஸ்பேக்காக பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் உள்ள அதிகப்படியான முடியை, குறிப்பாக வாய் மற்றும் கன்னத்தை சுற்றி உள்ள முடியை அகற்றும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

பப்பாளி: தேவையான அளவு பப்பாளியை எடுத்து அதன் தோலை நீக்கி, நல்ல பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை மசிக்கவும். பிறகு அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி தோலில் சுமார் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு தெளிவான நீரில் கழுவவும்.

வெங்காய சாறு: சிறிதளவு வெங்காய சாறுடன் துளசி இலைகளை அரைத்து சேர்த்த கலவையை பூசும்போது, அவை உடலில் இருந்து தேவையற்ற முடியை அகற்ற உதவுகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: