முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / World Earth Day 2022 : உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பூமியை பாதுகாக்க முடியும் : எப்படி தெரியுமா..?

World Earth Day 2022 : உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பூமியை பாதுகாக்க முடியும் : எப்படி தெரியுமா..?

பூமி 2022

பூமி 2022

பூமி ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யும், ஆனால் பேராசைகளை அல்ல என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பூமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாம் வாழும் உலகில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருப்பதற்காகவும், அதை பாதுகாப்பதற்காகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பூமி பசுமையாக இருப்பது எவ்வளவு முக்கியம் நம் வாழும் சூழல் பாதுகாப்பாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் உருவாக்கப்படும். ‘இன்வெஸ்ட் இன் அவர் ப்ளானட்’ அதாவது நாம் வாழும் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள் என்பது இந்த ஆண்டின் தீமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமி ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்யும், ஆனால் பேராசைகளை அல்ல என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். எனவே இந்த உலகில் நமக்கு தேவையான அனைத்துமே நமக்கு கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு நம்முடைய சுயநலத்திற்காகவும் பேராசைக்காகவும் பூமியின் வளங்களை சுரண்டி வருகிறோம். பூமி பசுமையாக வளம் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே, நாம் வாழ முடியும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் பொறுப்புள்ள நபராக இருக்கும் அதே நேரத்தில், நம் கிரகத்தை பாதுகாப்பாக மாற்றும் கடமையும் உள்ளது. இந்த 5 எளிமையான வாழ்வியல் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம், பூமியை பசுமையாக, மகிழ்ச்சியாக மாற்றலாம்.

நீடித்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் : உலகில் உள்ள உயிரினங்கள், சுற்றுசூழல் நிலை, தனிநபர் மற்றும் குழுவாக மக்களுன் செயல்கள் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்தி சுழற்சி செய்ய முடியாத வேஸ்ட் பொருட்களின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நீடித்த வாழ்க்கை முறை என்பது யூஸ் & த்ரோ அல்லது ஒன் டைம் யூஸ் போன்ற பொருட்களை தவிர்ப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. இயற்கையோடு ஒத்துப்போகும் வாழ்க்கைமுறையும் இதில் அடங்கும். உள்ளூரில் கிடைக்கும் அல்லது நீங்கள் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் பொருட்களை அதிகமாக வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றங்கள் உடனடியாக மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும் நாளடைவில் இது கணிசமான முன்னேற்றத்தை நீங்கள் காணலாம்.

கிரீன் எனர்ஜி : மின்சார நுகர்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. ஆனாலும் நம்முடைய ஆதாரங்கள் நிலக்கரி, எண்ணெய் ஆகிய மறு சுழற்சி செய்ய முடியாத ஆதாரங்களை சார்ந்து தான் இருக்கிறது. அதிகரித்து வரும் தேவைகளும் குறைந்து வரும் வளங்களும் எதிர்கால எனர்ஜி தேவைக்கான கேள்விக்குறியை உருவாக்கி வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் கிரீன் எனர்ஜி என்று கூறப்படும் பசுமை எனர்ஜி, இந்த ஃபாசில் ஃபியூயல் வளங்கள் குறைந்து வருவதால் ஏற்படும் ஆபத்தை குறைக்க டுஹவும். அதுமட்டுமின்றி கிரீன்ஹவுஸ் எமிஷன் எதுவுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

தண்ணீரை சேமிக்க வேண்டும் : தண்ணீரை சேகரிக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். மாறி வரும் தீவிரமான பருவநிலையால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை நீரை சேமிப்பது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது ஆகிய மாற்றங்களை உடனடியாக மேற்கொண்டு தண்ணீரை சேமிக்க வேண்டும்.

40 டிகிரி வெயிலை கூட ஒன்றுமில்லாமல் ஆக்கும் 7 பாரம்பரியமான பானங்கள்..!

செடிகளை நட வேண்டும் : இந்த பூமிக்கு நாம் செய்யக்கூடிய மிகவும் எளிமையான விஷயங்களில் ஒன்று மரங்களை நடுவது தான் எவ்ளோ காடுகள் அழிந்து விட்டன அதற்கு மாற்றாக எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் செடிகளை நடலாம். வீடு வசிக்கும் இடங்கள் மட்டுமன்றி பரிசாகவும் மரக்கன்றுகளை வழங்கலாம். பழங்களின் விதைகளை சேகரித்து செல்லும் வழியில் தூவிச் செல்லலாம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் கரைகளில், கல்விநிலையங்களில் அப்பார்ட்மென்ட் கட்டிடங்கள் சுற்றுவட்டாரத்தில் என்று எந்த இடத்தில்லாம் மரம் வளர்க்க முடியுமோ எல்லா இடங்களிலும் மரங்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

top videos

    பிளாஸ்டிக்கிற்கு தடை : இன்று உலகின் சுற்றுசூழலும் மற்றும் பசுமை நிலையும் பாதிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பது அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு தான். பிளாஸ்டிக் மக்காத பொருள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் உருமாறாமல் அப்படியே இருக்கும். நாம் பயன்படுத்தி தூக்கி போடும் ஒரு பிளாஸ்டிக் பொருள் கடலிலும் பூமிக்கு அடியிலும், மக்கிப் போகாமல் பூமியின் வளத்தையும் பாதித்து உயிரினங்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. ஈகோ சிஸ்டத்தையே பிளாஸ்டிக் பயன்பாடு மாற்றி அமைத்துள்ளது. ஒன்றரை கோடிக்கும் மேலான பிளாஸ்டிக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தாலே பூமியின் ஈகோ சிஸ்டம் மேம்பட்டு நாம் வாழ்வதற்கு மிகவும் உகந்த இடமாக மாறும்.

    First published:

    Tags: World Earth Day