இந்தியர்களில் பலர் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் பால் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தினசரி பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆரோக்கியத்திற்காகத் தினசரி பாலை குடிக்கும் பழக்கம் தற்போது கெடுதல் விளைவிக்கும் ஒன்றாக மாறி இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரச்சனை பாலில் இல்லை அதில் நாம் சேர்க்கும் பொருளால் தான். ஆம், தினமும் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் சுவைக்காக சில ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பொதுவாக அதிக சர்க்கரை உள்ள உணவுகள் கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்குப் பதில் கூடுதல் கலோரிகளை வழங்குகின்றன.
இதனிடையே இன்று நாம் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (refined sugar) பயன்படுத்தி வருகிறோம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்த்து பால் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்குத் தீமைகளைத் தரும் என்கிறார்கள் நிபுணர்கள். பாலுடன் சர்க்கரையைக் கலப்பதைத் தவிர்க்க நிபுணர்கள் கூறும் சில காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்
செரிமானத்தைப் பாதிக்கக் கூடும் :
பால் மற்றும் ஒயிட் சுகரின் கலவை செரிமானத்தைப் பாதிக்கும் மற்றும் அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பைல்ஸ் போன்ற சிக்கல்களைத் தூண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நிலையில் ஒருவர் பாலுடன் வெள்ளை சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பது குறிப்பிட்ட நபருக்குச் செரிமானத்தை மிகவும் கடினமாக்குகிறது மற்றும் அவரின் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. தூங்கச் செல்லும் முன் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை எடுத்துக் கொள்வது சிலருக்கு அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
Also Read : புருவத்திலும் பொடுகு ஏற்படுமா? தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த முழு விபரம்!
எடை அதிகரிக்கலாம்:
உடலை எடையை சரியாக வைத்திருக்கும் முயற்சிகளில் ஈடுபடும் பலர் செய்யும் ஒரு விஷயம் உணவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு கிளாஸ் பாலை குடிப்பது. ஆனால் அவர்களது எடை இழப்புக்கான முயற்சிகளை அவர்களே கெடுப்பது போகலான செயலக இது இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட பாலில் அதிக கலோரி உள்ளடக்கம் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் உடலில் கொழுப்பு படிவதற்கு வழி வகுக்கிறது. எனவே உடல் எடையில் கவனம் செலுத்தும் ஒருவர் குறைந்த கொழுப்புள்ள பாலில் வெள்ளை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்ல பலன்களைத் தரும்.
ஃபேட்டி லிவர் (Fatty liver):
கல்லீரலில் கொழுப்பு சேரும் ஒரு நிலையே Fatty liver என்று குறிப்பிடப்படுகிறது. 1 டேபிள் ஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் சுமார் 60 கலோரிகள் உள்ளது. 1 கிளாஸ் ஃபுல் க்ரீம் பாலில் சுமார் 89 கலோரிகள் உள்ளன. இந்த நிலையில் வெதுவெதுப்பான பாலுடன் வெள்ளை சர்க்கரையைக் கலந்து குடிப்பது கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை அதிகமாகக் கொண்ட பானமாக இருக்கும். எனவே இப்பழக்கம் கல்லீரலின் மேற்பரப்பில் கொழுப்பு மூலக்கூறுகள் படிய வழிவகுத்து ஃபேட்டி லிவர் கண்டிஷனை ஏற்படுத்தக் கூடும். பிற்காலத்தில் கல்லீரலைப் பாதிக்கும் நோயாக உருவெடுக்கும்.
Also Read : தங்கம் சேர்க்கப்பட்ட அழகு சாதன பொருட்கள்..கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இதயத்திற்கு ஆபத்து :
மிதமான பால் நுகர்வு உடலில் உள்ள LDL கொழுப்பைக் குறைக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதே நேரம் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கொண்டதாகக் கருதப்படும் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை குடிப்பது கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கிறது. நீங்கள் பால் குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பின் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கப் பாலில் வெள்ளை சர்க்கரை அல்லது வேறு இனிப்புகளைச் சேர்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Sugar, Milk, Sugar intake, Weight gain