நீங்க காபி அதிகமாக குடிப்பீங்களா ? உங்களுக்கான குட் நியூஸ் இதோ..

காட்சி படம்

காபி குடிப்பதால் கல்லீரல், குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களின் ஆபத்தும் குறையும்.

 • Share this:
  ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு சுரப்பி தான் புரோஸ்டேசமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு, ஒவ்வொரு நாளும் நிறைய கப் காபி குடிப்பது புரோஸ்டேட் கேன்சர்உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்று குறிப்பிடுகிறது. BMJ Open இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஒவ்வொரு எக்ஸ்ட்ரா கப் காபி கேன்சருக்கான அபாயத்தைக் கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைக்கிறது என்று கூறியுள்ளது.

  "அதிகரித்த காபி நுகர்வு புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஷெங்ஜிங் மருத்துவமனையின்சிறுநீரகத் துறை பொறுப்பாளர் சியோனன் சென் மற்றும் இந்த ஆய்வின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புரோஸ்டேட் கேன்சர்  என்பது உலகில் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும், மேலும் ஆண்களை இந்த கேன்சர் மோசமாக பாதித்து அவர்களை இறப்புக்கும் கொண்டுசெல்கிறது. இதன் வேலை விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரப்பது. பெரும்பாலும் 40 மற்றும் 50 வயதானவர்களுக்கு இந்த சுரப்பி வேலை செய்வது குறைகிறது. இந்த சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோய் . ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், 35 வயதிற்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் தாக்கும். ஆனால் இந்த கேன்சருக்கு கொஞ்சம் சாதகமானதை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  வளர்ந்த நாடுகளில் நான்கில் மூன்று நிகழ்வுகள் இந்த புரோஸ்டேட் கேன்சரால் (Prostate cancer) தான் நிகழ்கின்றன, 1970களில் இருந்து, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனா (Japan, Singapore, and China) உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்க்கான புதிய பாதிப்புகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் செப்டம்பர் 2020 வரை வெளியிடப்பட்ட தொடர்புடைய ஒருங்கிணைந்த ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி தரவுகளை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளனர்.

  குறைந்த அளவு, காபி குடிப்பவர்களுடன் அதிக காபி குடிப்பவர்களை ஒப்பிடும்போது, புரோஸ்டேட் கேன்சரின் ஆபத்து குறைவு என்று ஆய்வாளர்கள் தெரிந்துகொண்டனர். இது குறித்து 16 நபர்களில் நடத்தப்பட்ட சோதனையில் அதிக காபி குடிக்கும் 13 நபர்கள் பாசிட்டிவான முடிவுகளை அளித்தனர். ஒரு நாளைக்கு 2 லிருந்து 9 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபியை ஒருவர் குடிக்கலாம். மிகக் குறைந்த அளவாக ஒரு நாளைக்கு குறைந்தது 2 கப் காபியாவது குடிக்கவேண்டும். இந்த ஆய்வு வட அமெரிக்கா (7), ஐரோப்பா (7) மற்றும் ஜப்பான் (2) போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன.

  Also Read : தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய கொரோனா மாறுபாடு C.1.2.. தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?

  மேற்கண்ட நாடுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் (1,081,586) உள்ளனர், அவர்களில் 57,732 பேர் புரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். குறைந்த அளவு காபி குடிப்பவர்களுடன் அதிக காபி குடிப்பவர்களை ஒப்பிடும்போது, அவர்களுக்கு புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயம் 9 சதவீதமாகக் குறைகிறது. உதாரணமாக ஒருநாளைக்கு ஒரு கப் காபி குடித்தால் 1 சதவீத அபாயம் குறையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். காபி குடிப்பதால் கல்லீரல், குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களின் (liver, bowel, and breast cancers) ஆபத்தும் குறையும். ஆனால் இதுவரை, புரோஸ்டேட் கேன்சர் அபாயத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: