உடலைக் குறைக்க இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்..! இதோ செய்முறை

ஆரஞ்சு , கேரட், இஞ்சி ஆகிய மூன்று பொருட்கள் சேர்த்து ஜூஸாக குடித்தால் தேவையற்றக் கொழுப்புகள் கரைந்துவிடும்.

உடலைக் குறைக்க இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்..! இதோ செய்முறை
உடல் அமைப்பைப் பெற இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.
  • News18
  • Last Updated: August 14, 2019, 7:34 PM IST
  • Share this:
உடல் எடையை சிக்கென வைத்துக்கொள்வதில் எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் சுவையால் வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என புலம்பித் தள்ளுகிறீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம். எவ்வளவு சாப்பிட்டாலும் தினமும் இந்த ஜூஸைக் குடித்து வாருங்கள் உடல் எடை நினைத்ததைப் போலவே குறைந்து வரும்.

அதற்காக என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அளவான டையட்டைப் பின்பற்றுவதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

அதேபோல் உடல் எடைக்கு உணவு மட்டுமன்றி சர்க்கரையை தெகிட்ட தெகிட்ட கொட்டியிருக்கும் குளிர்பானங்களும் காரணம். வீட்டில் ஆரோக்கியமான முறையில் ஃப்ரெஷ் ஜூஸ் போட்டுக் குடித்தாலும் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் ஆபத்துதான். எனவே சர்க்கரை இல்லத ஜூஸ்தான் உடல் எடையைக் குறைக்க உதவும்.


ஆரஞ்சு , கேரட், இஞ்சி ஆகிய மூன்று பொருட்கள் சேர்த்து ஜூஸாக குடித்தால் தேவையற்றக் கொழுப்புகள் கரைந்துவிடும். இதில் சேர்க்கப்படும் இஞ்சி ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.உடல் எடையைக் குறைக்க உதவும் ஜூஸ்தேவையான பொருட்கள்

ஆரஞ்சு சாறு - 500 ml

கேரட் - 2

இஞ்சி - சிறு துண்டு 1

செய்முறை

முதலில் கேரட் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தண்ணீருக்கு பதிலாக அரஞ்சு ஜூஸை இறுதியாக ஊற்றி மீண்டும் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஜூஸை தினமும் காலை குடித்து வாருங்கள். நல்ல பலனை நீங்களே உணர்வீர்கள்..!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்