வரதட்சணை கேட்பதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், வரதட்சணை என்பது முழுவதுமாக நீங்கவில்லை. நாடு முழுவதும் கிராமங்கள், சிறு நகரங்கள் மட்டும் இல்லாமல், பெரு நகரங்களிலும் மணமகன் தரப்பில் வரதட்சணை கேட்கப்படுகிறது.
பொருட்கள், சொத்து மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கு திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற டிமாண்ட் உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பெண்கள் வரதட்சணை என்ற பெயரில் ‘மோசமான, வினோதமான, கோரிக்கைகளை’ மேற்கொண்ட மாமியார்களைப் பற்றி பகிர்ந்ததை இங்கே பார்க்கலாம்.
கிட்னி பெறுவதற்கு காதல் நாடகம்
ஐந்து வருடங்களாக காதலித்த வந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்த போது, பெண்ணுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது ‘எனக்கு ஏற்றவன் இவன் தான்’ என்று அந்த மணப்பெண் மகிழ்ச்சியில் திளைத்திருந்த நிலையில், மணமகனுடைய தந்தைக்கு, அவன் பெற்றோர்கள் வரதட்சணையாக கிட்னி வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். மணப்பெண்ணின் கிட்னி அவருடைய வருங்கால மாமனாருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது என் காரணத்தாலேயே, அவருக்கு தெரியாமலே மணமகன் இந்த வேலையைச் செய்துள்ளார். கிட்னி பெறுவதற்காகவே திருமணம் செய்வதாக தெரிய வந்த போது, திருமணத்தை நிறுத்திவிட்டார் மணப்பெண்.
மிக மிக விலையுயர்ந்த கார்
பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வசதியையும் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை மருமகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள். தன்னுடைய மகனுக்கு ‘Audi’ கார் பரிசளிக்க விரும்பிய பெற்றோர், திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது, மணமகள் குடும்பத்திடம் வரதட்சணையாக மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். சொகுசுக் காரை வாங்கித் தர முடியாது என்று தெரிந்த போதும் கட்டாயப்படுத்தியது மணமகளை அதீத வெறுப்பு மற்றும் கோபத்திற்குள்ளாக்கியது. மணமகள் உறுதியாக ‘நானும் உங்கள் மகனும் கடினமாக உழைத்து சொகுசுக் காரை வாங்குவோம்’ தெரிவித்த போது, மணமகன் வீட்டார் எதுவும் பேசவில்லை.
ALSO READ | உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!
குரானை மனப்பாடம் செய்ய வேண்டும்
கடவுள் நம்பிக்கை, வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வது எல்லாமே தனி நபர் விருப்பம். நாத்திராக இருந்த பெண் காதலித்து வந்துள்ளார். அவர் திருமணம் செய்ய முடிவு செய்த போது, காதலனின் பெற்றோர்கள் குர்ஆனில் சில பத்திகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொன்னது வேடிக்கையாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
சமைக்கத் தெரியவில்லை என்றால் மருமகளாக ஏற்க முடியாது
சில கோரிக்கைகள் திருமணத்துக்கு முன்னதாகவும், சில கோரிக்கைகள் திருமணத்துக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாகவும் அமைகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி அடிப்படை சமையல் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால், திருமணம் முடிந்த பின்னர், தன் மருமகளுக்கு சமைக்கத் தெரியாது என்று அறிந்த போது, ‘ஒரு மாதத்தில் சமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், என் மருமகளாக இருக்க முடியாது’ என்று கூறியுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.