மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை பழக்கங்கள்..!
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை பழக்கங்கள்..!
காட்சி படம்
நம்முடைய உடலில் மூளை தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்பு ஆகும். ஆகவே, நம் மூளைக்கு சிறிதளவேனும் ஸ்ட்ரெஸ் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். நமது மூளையை அவ்வபோது புத்துணர்ச்சி பெற வைப்பதற்கு முறையான தூக்கமே போதுமானது.
மனநலனுக்கு நாம் ஏன் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு புதிய அறிமுகம் தேவையில்லை. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் மனநிலைக்கு அது மிகவும் அவசியமானதாகும். ஆகவே, நாம் நமது மனதுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
நம்முடைய உடலில் மூளை தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்பு ஆகும். ஆகவே, நம் மூளைக்கு சிறிதளவேனும் ஸ்ட்ரெஸ் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். நமது மூளையை அவ்வபோது புத்துணர்ச்சி பெற வைப்பதற்கு முறையான தூக்கமே போதுமானது.
இது மட்டுமல்லாமல் நமது மூளைக்கு எப்படி ஓய்வு கொடுப்பது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் இன்ஸ்டாகிராமில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மூளைக்கு போதுமான ஓய்வு கொடுக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற தலைப்பில் இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
தூங்கும்போது கூட மூளை வேலை செய்யும்
பக்தி கபூர் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் கல்வி கற்றவராகவும், மிகுந்த கவனம் உடையவராகவும் இருப்பது அவசியமான ஒன்றுதான். ஆனால், அதே சமயத்தில் நமது மூளைக்கு போதுமான அளவு ஓய்வு கொடுப்பதும் அவசியம். மனநலனுடைய முக்கியத்துவம் குறித்து நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
நாம் தூங்கும் போது கூட மூளை வேலை செய்யும். 24 மணி நேரத்தில் சுமார் 70,000 ஐடியாக்களை நமது மூளை சிந்திக்கும். ஒரு நாளில் மொத்தம் 86,400 விநாடிகள் உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு 1.2 நொடிக்கும் நமது மூளை புதுப்புது விஷயங்களை சிந்திக்கிறது. சிந்திப்பதை உங்கள் மூளை ஒருபோதும் நிறுத்தாது.
சத்தான உணவு, குடிநீர் அவசியம்
மூளை நலனை பாதுகாத்துக் கொள்வதற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதுடன், அவ்வபோது தண்ணீர் அருந்துவதும் அவசியமாகும். முறையான தூக்கம் அவசியம். நம் மூளையை சோர்வடையச் செய்யும் விஷயங்களில் இருந்து அவ்வபோது கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.
நாம் இன்றைக்கு பெரும்பாலும் புரொஃபஷனல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட, நமது மூளையின் நலனுக்கு கவனம் செலுத்தி, மனநலனை பாதுகாப்பது அவசியமாகும். மனநலன் நன்றாக இருந்தால் மட்டுமே வேலையிலும் நாம் ஜொலிக்க முடியும்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.