Home /News /lifestyle /

வீட்டிலேயே டோமினோஸ் மாதிரி ஓரிகனோ மசாலாவை தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே டோமினோஸ் மாதிரி ஓரிகனோ மசாலாவை தயாரிப்பது எப்படி?

ஆர்கனோ மசாலா

ஆர்கனோ மசாலா

ஓரிகனோ பலவகையான நாடுகளைச் சேர்ந்த உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பீட்சாவில் ஆரம்பித்து பாஸ்தா வரைக்கும் ஓரிகனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாமல் மேற்கத்திய உணவுகள் நிறைவு பெறாது. இத்தாலி, மெடிட்டரினியன் கடல் பகுதிகள், மெக்சிகன் போன்ற பலவகையான நாடுகளைச் சேர்ந்த உணவுகளிலும் ஓரிகனோ என்ற வாசனை மூலிகை பயன்படுத்தப்படுகிறது.

    இதன் பலன்களை அறிந்து கொள்வதோடு, வீட்டிலேயே டோமினோ பாணி ஓரிகனோ மசாலாவை தயாரிப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.

     ஓரிகனோ என்றால் என்ன?

    ஓரிகனோ புதினா குடும்பத்தைச் சேர்ந்த தீவிர சுவை மற்றும் வாசனை கொண்ட மூலிகையாகும். இது மத்திய தரைக்கடல், இத்தாலியன், மெக்சிகன், கிரேக்க உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓரிகனோ என்ற சொல் பண்டைய கிரேக்கத்திலிருந்து பெறப்பட்டது.

    இதற்கு ‘மலையின் பிரகாசம்’ என்று பொருள். ஊதா நிற பூக்களையும், ஆலிவ் நிற இலைகளையும் கொண்ட இந்த மூலிகையானது, இத்தாலி மற்றும் மெக்சிகன் வகை உணவுகளில் உலர்ந்த பவுடர் வடிவத்தில் சேர்க்கப்படுகிறது.

     ஓரிகனோவால் கிடைக்கும் நன்மைகள்:

    இந்த மசாலா வகையைச் சேர்ந்த நறுமண மூலிகை, உணவில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டாலும் நிறைய நன்மைகளைத் தரக்கூடியது. 1 டீஸ்பூன் ஓரிகனோவை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான வைட்டமின் கே தேவையில் 8 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஓரிகனோவின் கார்வாக்ரோ கலவை பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதோடு, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடக்கூடியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Also Read : கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?

    ஓரிகனோ மசாலா செய்யத் தேவையான பொருட்கள்:

    கருப்பு மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    ட்ரை ஓரிகனோ - 1 டீஸ்பூன்
    பூண்டு பவுடர் - 2 டீஸ்பூன்
    உலர்ந்த பார்சிலி இலைகள் - 1/2 டீஸ்பூன்
    சில்லி ப்ளெக்ஸ் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்
    உலர்ந்த ரோஸ்மேரி - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    வீட்டிலேயே சுவையான டோமினோஸ் பாணி ஓரிகனோ மசாலாவை தயாரிக்க உங்களிடம் ஒரு சிறிய மசாலா தயாரிக்கும் உரல் இருந்தாலே போதும். உரலில் உப்பைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அளவுக்குக் கருப்பு மிளகு தூள், ட்ரை ஆர்கனோ, பூண்டு பவுடர், உலர்ந்த பார்சிலி இலைகள், சில்லி ப்ளெக்ஸ், உலர்ந்த ரோஸ்மேரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும்.

    அனைத்தும் ஒன்றாகக் கலந்து பொடிப் பொடியாக ஆகும் படி நன்றாக இடிக்கவும். மிகவும் நைஸாக இல்லாமல் கொர கொரப்பான கலவை கிடைத்ததும், அத்துடன் உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு காற்று புகாத கண்ணாடி ஜாடி அல்லது ஃப்ரிட்ஜில் சேகரித்து வைப்பதன் மூலமாக நறுமணம் மாறாமல் அதிக நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
    Published by:Janvi
    First published:

    Tags: Food recipes, Food Spices, Health Benefits, Recipe

    அடுத்த செய்தி