Home /News /lifestyle /

நீரிழிவு நோயாளிகள் இருந்தால் சோறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

நீரிழிவு நோயாளிகள் இருந்தால் சோறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

 வெள்ளை சாதம்

வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தில் கிளைசமிக் இண்டெக்ஸ் மிகக் கூடுதலாக இருக்கிறது என்றாலும், அதற்கு நிகராக புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து போன்றவற்றைச் சரியான அளவில் சேர்த்துக் கொள்ளும்போது எந்த சிக்கலும் ஏற்படாது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெள்ளை சாதம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் அதைச் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். வெள்ளை சாதம் அதிகமான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்டிருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

    மனம் விரும்பியவற்றை எல்லாம் சாப்பிட்ட காலம் மாறிப் போய், இப்போதெல்லாம் உணவில் எதை, எதைச் சேர்க்கக் கூடாது என்று பட்டியல் போடும் அளவுக்குக் காலம் மாறியிருக்கிறது. மாறியுள்ள நமது வாழ்க்கைச் சூழல் மற்றும் தினம், தினம் புதிதாக உருவாகி வரும் நோய்கள் போன்றவைதான் இதற்குக் காரணம்.

    அதிலும், இன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குச் சர்க்கரை நோய்ப் பாதிப்பு இருக்கிறது என்பதால், திரும்பிய திசையெங்கும் அதற்கான மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் குறித்த பேச்சுகள் தான் மிக அதிகம்.

    ஆனால், தட்டில் என்ன உணவு இருக்கிறது என்பதைப் பார்த்து கவலை கொள்வதைக் காட்டிலும், எதையுமே மிதமான அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் மருத்துவர்கள். ஊட்டச்சத்து நிபுணர் புவண் ரஸ்தோகி இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தட்டில் மற்ற உணவுகளுக்கு ஈடாக எந்த அளவுக்கு வெள்ளை சாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் கவனத்துடன் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : தவறாக புரிந்து கொள்ளப்படும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் - உண்மையான அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்

    நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் :

    நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை மிகுதியாக இருப்பின், அதற்கேற்ப வெள்ளை சாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் கிளைசமிக் இண்டெக்ஸ் என்றால் என்பதைப் புரிந்து கொண்டால், இது சாத்தியமாகும்.

    அதிகமான கொழுப்புச் சத்து எடுத்துக் கொண்டால், கிளைசமிக் இண்டெக்ஸ் குறையத் தொடங்கும். அதே சமயம், கொழுப்புச்சத்தைக் காட்டிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. அதே சமயம், இனிப்பான பால் கலந்த உணவுகளை நாம் குறைத்துக் கொள்ளலாம்.

    வெள்ளை சாதம் எடுத்துக் கொள்ளலாமா?

    நமது தட்டில் என்னென்ன உணவுகள் இருக்கின்றன? ஒவ்வொன்றையும் எந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என்ற புரிதல் நமக்கு இருக்கிறது என்றால், அதை வேண்டுமானாலும் நாம் தவிர்க்காமல் சாப்பிடலாம்.

    குறிப்பாக, வெள்ளை சாதத்தில் கிளைசமிக் இண்டெக்ஸ் மிகக் கூடுதலாக இருக்கிறது என்றாலும், அதற்கு நிகராக புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து போன்றவற்றைச் சரியான அளவில் சேர்த்துக் கொள்ளும்போது எந்த சிக்கலும் ஏற்பட்டு விடாது. குறிப்பாக கிளைசமிக் இண்டெக்ஸ் 55க்கு குறைவாக இருக்கிறது என்றால் அந்த உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
    Published by:Janvi
    First published:

    Tags: Diabetic diet, Diabetics, White Rice

    அடுத்த செய்தி