முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மணமகன் குடும்பமே சேர்ந்து பெண்ணை கடத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பற்றித் தெரியுமா.?

மணமகன் குடும்பமே சேர்ந்து பெண்ணை கடத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பற்றித் தெரியுமா.?

ஹிம்பா திருமணம்

ஹிம்பா திருமணம்

மணமகன் குடும்பத்தினர் மணமகளின் வீட்டிற்கு பரிசுகளுடன் சென்று உங்கள் மகள் எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். திருமணம் செய்து தாருங்கள் என்று கேட்பார்களாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் அதற்கு 10008 சடங்குகள் இருக்கிறது. எல்லாம் சரியாக செய்ய வேண்டும் .வரன் தேடுவது, பொருத்தம் பார்ப்பது, பெண் பார்க்க போவது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம், கல்யாணம், இதற்கு இடையில் ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களை செய்து கொண்டு இருக்கிறோம்.

கல்யாணத்தை பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்பதை எல்லாம் உணர வைக்கும் தருணங்களாக அமைந்து விடும். இது போக கல்யாணத்திற்கு வாங்கும் கடனை, குழந்தை பள்ளி செல்லும் வரை கட்டிக்கொண்டு இருப்பர்.

ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் அப்படி இல்லை. அவர்களது பாரம்பரிய முறைகளே வினோதமாக இருக்கின்றன. ‘என்னடா இப்படி ரகரகமா கல்யாணம் பண்றீங்க?’ என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக ஒவ்வொன்றும் இருக்கிறது. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் தனித்தனி நடைமுறைகள் வேறு இருக்கிறது.

கடத்தல் திருமணம்:

அமெரிக்க நாடான நமீபியாவில் ஹிம்பா என்ற பழங்குடியினர் இருக்கின்றனர். அந்த பழங்குடியின இனத்தில் உள்ள ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் அந்த ஆணின் குடும்பத்தினர் மணப்பெண்ணை கடத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களாம். அதன் பின்னர் திருமணம் செய்து வைக்கின்றனர். நினைத்து பாருங்கள் நம் ஊரில் அந்த பையன் பெண்ணை கூப்பிட்டு கொண்டு போனாலே கடத்தல் வழக்கு போட்டு விடுவார்கள். அங்கே குடும்பமே சேர்ந்து கடத்துகிறது.

இதே போல மற்றொரு ஆப்பிரிக்க நாடான கானாவின் ஃப்ராஃப்ரா பழங்குடியினரும் மணமகளை கத்திவிட்டு போவார்களாம். அதுமட்டும் இல்லாமல் மணமகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பையும் போட்டு விடுவார்களாம். அதன் பிறகு மணமகன் குடும்பத்தினர் மணமகளின் வீட்டிற்கு புகையிலை, கோலா கொட்டைகள், கினியா கோழிகள் போன்ற பரிசுகளுடன் சென்று உங்கள் மகள் எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். திருமணம் செய்து தாருங்கள் என்று கேட்பார்கள்.

சில சமயங்களில் அவர்களது திருமண 'ரெக்வஸ்ட்' நிராகரிக்கப்படுகிறது. ஆனால் பெண் வீட்டால் ஏற்றுக்கொண்டால் அடுத்து இருக்கு ஒரு சுவாரசிய சம்பவம். அடுத்து என்ன கல்யாணம் தானே என்று நினைக்கலாம். அது தான் இல்லை. அங்கு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.( அந்த ட்விஸ்ட் நமக்கு தான் அதிர்ச்சி). மணமகள் மணமகனோடு இருந்து, கருவுற்ற பின்னர் தான் அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

இதையும் படிங்க: உலகின் மிகப்பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடம்.. முதல் நாடு எது தெரியுமா..?

திருமணத்தின் போது  ஒரு சுவையான சடங்கு நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஒரு நாய், இரண்டு ஆடுகள் மற்றும் கோழிகளைக் கொன்று, சுவையூட்டப்பட்டு மணமகள் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இறைச்சி விருந்தோடு நான்கு பசுக்கள், கினிக்கோழிகள், கோலா கொட்டைகள் மற்றும் பணம் ஆகியவற்றை மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக மணமகள் குடும்பத்திற்கு கொடுத்து மணமகளை அழைத்து வருகின்றனர். கிளம்பும் முன்  இறைச்சிகளை திருமண விருந்தாக இரண்டு குடும்பமும் சேர்ந்து சாப்பிட்டு தீர்க்கிறார்கள்.

First published:

Tags: Africa, Marriage