• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஃபைபர் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ட்ரெண்டாகும் குக்கீ டயட்..!

ஃபைபர் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ட்ரெண்டாகும் குக்கீ டயட்..!

குக்கீ டையட்

குக்கீ டையட்

ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 கிலோ குறைக்கலாம். தினசரி 1000 - 2000 கலோரிகளை குறைக்கலாம்.

  • Share this:
    உணவுக்கு பதில் மூன்று வேளையும் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டால் கூடுதல் கொழுப்பைக் குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என புதிய டையட் டிரெண்டாகி வருகிறது. அதற்கு பெயர் குக்கீ டையட் என பெயரிடப்பட்டுள்ளது.

    எப்படி உருவானது.?

    தென் புளோரிடா மருத்துவர் சான்ஃபோர்ட் சீகல் 1975-ஆம் ஆண்டில் சில அமினோ அமிலங்களின் கலவையில் குக்கீஸ் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அதிக புரோட்டீன் , ஃபைபர் நிறைந்த பிஸ்கெட்ஸ் . இதை சாப்பிடுவோருக்கு பசியும் எடுக்காதாம். அப்படி சீகல் தன்னிடம் வருவோரிடம் ஒருநாளை 6 குக்கீஸ் சாப்பிட சொல்வாராம். அது ஒருநாளைக்கு 500 கலோரிகள் கொண்டதாம்.

    தற்போது அவர் அதை மிகப்பெரிய நிறுவனமாக சந்தைப்படுத்தி அமெரிக்காவில் ட்ரெண்டாக மாறியுள்ளது. ஆன்லைனிலேயே தற்போது இந்த பிஸ்கெட்டுகளை விற்பனை செய்கிறது.

    சாக்லெட், பிரௌனி , பட்டை, ஓட்ஸ், பட்டர் ஸ்காட்ஸ் என பல வகையான ஃபிளேவர்களிலும் கிடைக்கிறது.



    பின்பற்றும் வழிகள் :

    இந்த பிஸ்கெட்டை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் ஒன்று அல்லது இரண்டு என சாப்பிட வேண்டும். இரவு மட்டும் பிஸ்கெட்டை தவிர்த்து வேக வைத்த காய்கறிகள், குறைந்த கொழுப்பில் இறைச்சி, மீன் வகைகளை சாப்பிடலாம். நீங்கள் நினைத்த அளவு உடல் எடையைக் குறைத்துவிட்டால் குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடத் துவங்கலாம். இடையில் இந்த பிஸ்கெட்டுகளையும் சாப்பிட வேண்டும்.

    இதை முறையாகப் பின்பற்றினால் ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 கிலோ குறைக்கலாம். தினசரி 1000 - 2000 கலோரிகளை குறைக்கலாம் என்கிறது அந்த வெப்சைட்.

    வல்லுநர்கள் கருத்து :

    இது குறித்து நியூட்ரீஷியன்கள், டையட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கையில் ”இந்த டையட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டசத்து , மினரல்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. அதேசமயம் பிஸ்கெட் மட்டுமே சாப்பிடுவது போர் அடித்துவிடும். இது உணவின் மீதான ஈர்ப்பை அதிகரித்துவிடும். இது குறைந்த காலத்தில் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்றாலும், நீண்ட நாட்களுக்கு இதை பின்பற்ற முடியாது” என மருத்துவர் மெலிண்டா ரட்டினி WebMD தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    வல்லுநர்கள், மருத்துவர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான எடை குறைப்பு டயட்டுகளையும் தாங்களாகவே பின்பற்றுவது தீங்கை விளைவிப்பதாக முடியும் என்பதே சர்வதேச மருத்துவர்கள் சமூகத்தின் அறிவுரையாக உள்ளது.

    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: