உங்கள் பாஸ் அடிக்கடி கடுகடுவென நடந்துகொள்கிறாரா ?

எப்போதும் கடுகடுவென கோபமாகப் பேசும் பாஸ் கிடைத்தால் அந்த வேலை நமக்குப் பெரும் சவால்தான். வேலை ஒரு புறம் மன அழுத்தத்தைத் தந்தாலும் பாஸின் இதுபோன்ற நடவடிக்கைகள் வேலைப் பளுவை அதிகரித்துவிடும்.

Web Desk | news18
Updated: May 17, 2019, 4:46 PM IST
உங்கள் பாஸ் அடிக்கடி கடுகடுவென நடந்துகொள்கிறாரா ?
கடுமையாக நடந்து கொள்ளும் குழுத் தலைவர்
Web Desk | news18
Updated: May 17, 2019, 4:46 PM IST
வேலை செய்யும் இடம் என்பது தொந்தரவுகள் இல்லாமல் நிம்மதியான சூழலில் இருந்தால்தான் அதிக உற்பத்தியை அளிக்க முடியும்.  அதுவே எப்போதும் கடுகடுவென கோபமாகப் பேசும் பாஸ் கிடைத்தால் அந்த வேலை நமக்குப் பெரும் சவால்தான். வேலை ஒரு புறம் மன அழுத்தத்தைத் தந்தாலும் பாஸின் இதுபோன்ற நடவடிக்கைகள் வேலைப் பளுவை அதிகரித்துவிடும்.



பல நாடுகளிலிருந்து 1,200 பணியாட்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உங்கள் பாஸுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவுமுறை குறித்துக் கூறுங்கள் என்ற கேள்விக்கு அனைவரும் சிறந்த உறவு இல்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் வேலைத் திருப்தியும் இல்லை எனத்தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற பாஸின் நடவடிக்கைகள் தனி நபரை மட்டுமல்லாது ஒட்டு மொத்த டீமையும் பாதிப்பதாக அந்த ஆய்வில் கூறியுள்ளனர். அதுவும் தலைமைப் பதவியில் இருக்கும் பாஸ் புரொஃபஷ்னலாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதுவும் அந்தக் குழுவைப் பாதிக்கிறது. இதனால் சக ஊழியர்களும் ஒழுக்கமின்மையாகச் செயல்படுகின்றனர்.



அதேபோல் அந்த ஆய்வில், தலைமையில் இருக்கும் பாஸ் ஏதேனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் குழு நபர்களையும் தாக்கி இதனால் அதிக மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர் என்று குறிப்பிடுகிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய மற்றொரு ஆய்வில் திறமைக்கு மரியாதை அளிக்காமல், வேலைக்கு அங்கீகாரமில்லாமல் எப்போதும் குறை கூறும், தாழ்வாக நடத்தும் பாஸ் கிடைத்தால் அவர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் பணியில் கவனச்சிதறல் உண்டாகி உற்பத்தித் திறனையும் குறைத்துக்கொள்கின்றனர். இதனால் அந்த நிறுவனமும் குழுத் தலைவரால் ஒரு சிறந்த ஊழியரை இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
Loading...


எனவே ஒரு நிறுவனத்திற்குக் கீழ் வேலை செய்யும் பாஸ் என்பவர் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் கோபம் கொள்வதை விடுத்து ஊழியர்களை ஊக்குவித்தால் ஆரோக்கியமான உறவை பணியிடத்தில் உருவாக்கலாம் என்கிறது. வேலையில் திருப்தி, மகிழ்ச்சி இருக்கும் ஊழியரால் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு விஸ்வாசமாகவும், நம்பிக்கையுடையவராகவும் நீடித்திருப்பார் என குறிப்பிடுகிறது.

இதையும் படிக்க :

அப்ரைசலில் திருப்தி இல்லையா... அடுத்து என்ன செய்யலாம்...?



பணியிடத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்தால் வேலைத்திறன் அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626