வீட்டில் அலுவலகப் பணி : புரொடக்டிவிட்டி குறைவதாக நினைக்கிறீர்களா..? இனி இப்படி வேலை செஞ்சு பாருங்க..!

வீட்டில் அலுவலகப் பணி செய்வது பலருக்கும் புது அனுபவமாக இருக்கலாம். இதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் இருக்கலாம்.

வீட்டில் அலுவலகப் பணி : புரொடக்டிவிட்டி குறைவதாக நினைக்கிறீர்களா..? இனி இப்படி வேலை செஞ்சு பாருங்க..!
வீட்டில் அலுவலகப் பணி
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் பலரும் வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் அலுவலகப் பணி செய்வது பலருக்கும் புது அனுபவமாக இருக்கலாம். இதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் இருக்கலாம். இதனால் உங்கள் வேலை திறன் பாதிப்பதாக நினைத்தால் இந்த விஷயங்களை செய்து பாருங்கள்.

சௌகரியமான இடம் : வேலை செய்ய முதலில் தேவை சௌகரியமான இடம். எனவே வீடு தானே என கட்டில் அமர்ந்து வேலை செய்வது, படுத்துக்கொண்டே செய்வது, நினைத்த இடத்தில் அமர்வது என்று இல்லாமல் உங்களுக்கென ஒரு இடத்தை அமைத்து அங்கு வேலை செய்யத் தேவையான ஸ்டேஷ்னரி பொருட்கள், மேசை என அமைத்துக்கொள்ளுங்கள்.

பணியிடத்தில் வேலை செய்யும் முன் என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்பீர்களோ அதை வீட்டிலும் செய்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு பாட்டில் நிறைய தண்ணீர், அவ்வபோது குடிக்க காஃபி என செட் செய்து கொள்ளுங்கள்.


வீட்டில் தனிமை, அலுவலகப் பணி.. இருந்தாலும் உற்சாகமாக இருக்க என்ன செய்வது..?

ஆடை கவனம் : வீட்டில் தானே இருக்கிறோம் என எழுந்தவுடன் லாப்டாப்பை லாகின் செய்யாமல் குளித்துவிட்டு அலுவலகம் செல்வதுபோல் நல்ல உடை அணிந்து வாசனை திரவியங்கள் அடித்துக்கொண்டு ஃபிரெஷாக அமருங்கள். இது பாசிடிவ் உணர்வை தரும்.

திட்டங்கள் : நாளை என்ன வேலை செய்யப் போகிறீர்கள் என்பதை முந்தைய நாளே திட்டம் போட்டுக்கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் வேலைகளை செய்தால் நினைத்ததைவிட சிறப்பாக செய்ய முடியும். டென்ஷன் இருக்காது.

வீட்டில் அலுவலகப் பணி... கட்டிலில் அமர்ந்தபடி லேப்டாப் பயன்படுத்தாதீர்கள்..!

ஓய்வு : அலுவலகத்தில் எப்படி உடன் வேலை செய்பவர்களோடு ஓய்வு நேரம் எடுத்துக்கொள்வீர்களோ அதேபோல் வீட்டிலும் அதே நேரத்தில் ஓய்வுகளை பின்பற்றுங்கள். குடும்பத்தாருடன் பேசுவது, வெளியே வேடிக்கை பார்ப்பது இப்படி ஏதாவது செய்யுங்கள்.

பார்க்க :

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading