வீட்டில் அலுவலகப் பணி... உடனே களைப்பு வருகிறதா..? இப்படி வேலை செஞ்சு பாருங்க..!

”இருவரும் வேலைக்காக திட்டமிடும்போது இருவருக்கும் தனித்தனியே தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்க வேண்டும்”

வீட்டில் அலுவலகப் பணி... உடனே களைப்பு வருகிறதா..? இப்படி வேலை செஞ்சு பாருங்க..!
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றக் கூறியுள்ளது.  இந்நிலையில் பலருக்கும் வீட்டில் அலுவலகப் பணி என்பது புது அனுபவமாக இருக்கலாம்.

மேலும் இந்த செட்அப் ஆரம்பத்தில் கேட்கும்போது மகிழ்ச்சியாக
இருந்திருக்கலாம். ஆனால் அதை நடைமுறைபடுத்திய பின்புதான்


அதிலிருக்கும் சிக்கல்கள் தெரிந்திருக்கும். இதற்கு பல தனியார் நிறுவன சி.இ.ஓக்களின் ட்வீட்டுகளே சாட்சி.

திருமணமாகாத இளைஞர்கள் எனில் கொஞ்சம் தப்பிக்கலாம். ஆனால், குழந்தை ,கணவன், மனைவி என இருக்கும் குடும்பத்தில் இருவருக்கும் அலுவலக வேலை எனில் கடினம்தான். இது மன
ரீதியாகவும் உடல் ரீதியாகவும் களைப்பை உண்டாக்கலாம். அதுவும் சிலர் அலுவலக வேலையைக் காட்டிலும், வீட்டில் அதிக நேரம் வேலை செய்வதாகவும் கூற்றுகள் எழுகின்றன.ஹோட்டல், ஆன்லைன் டெலிவரி இருந்தாலும் அமர்ந்த
இடத்தில் ஆர்டர் செய்து விடலாம். அதற்கும் வழியில்லை என்பதால் நாமே காய்கறி வாங்கி வந்து சமைக்க வேண்டும். குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அலுவலக வேலையும் செய்ய
வேண்டும். இந்த நிலை கடினம்தான் என்றாலும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த சூழலில், கணவன் மனைவி அனைத்து வேலைகளையும் ஒருவரே தலையில் போட்டுக்கொள்ளாமல், இருவரும் சமமாகப்
பகிர்ந்து செய்யலாம். இருவரும் வேலைகளை திட்டமிட்டு
அதன்படி அலுவலக வேலையை செய்தல் சிறப்பு.

குழந்தையைப் பார்த்துக்கொள்வதிலும், கவனித்துக் கொள்வதிலும் சமபங்கு இருக்க வேண்டும்.இதற்கிடையில் உங்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் அவசியம்.

இருவரும் வேலைக்காக திட்டமிடும்போது இருவருக்கும் தனித்தனியே தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அந்த
நேரத்தில் பாட்டு கேட்பது, குட்டி தூக்கம் என உங்களுக்கான நேரமாக ஒதுக்கிக்கொள்ளுங்கள். இந்த பழக்கம் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

இப்படி திட்டமிட்டு வேலைகளை பிரித்துக்கொண்டால் மட்டுமே இந்த காலக்கட்டத்தை நிம்மதியாக சமாளிக்க முடியும். இல்லையெனில் மன அழுத்தம், உடல் சோர்வு என உடல்நிலை
சரியில்லாமல் போகலாம்.

பார்க்க :

 

 
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading