மனமே சற்று இளைப்பாறு 3: குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களால் கொரோனா வந்திடுமோ என குற்ற உணர்ச்சியா..?

எப்படி இதிலிருந்து மீள்வது என்பது மட்டுமே நம் கவனமாக இருந்து தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் கண்டிப்பாக கொரோனாவை எதிர்கொள்வதற்கான தைரியம் கிடைக்கும்.

எப்படி இதிலிருந்து மீள்வது என்பது மட்டுமே நம் கவனமாக இருந்து தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் கண்டிப்பாக கொரோனாவை எதிர்கொள்வதற்கான தைரியம் கிடைக்கும்.

  • Share this:
கொரோனா முதல் அலை போல் அல்லாமல் இரண்டாவது அலையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வந்தால் அது மற்ற உறுப்பினர்களுக்கும் எளிதில் பரவி விடுகிறது. திருமண நிகழ்வு, சீமந்தம், இறுதி சடங்கு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் கொத்து கொத்தாக தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதில் யாரிடமிருந்து யாருக்கு வந்தது என கண்டறிவது இயலாதது மட்டுமல்ல தேவையற்ற ஆராய்ச்சி என்றும் மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். ( அறிவியல் பூர்வமாக நோய் கட்டுப்பாட்டுக்காக கான்டேக்ட் ட்ரேசிங் செய்வது என்பது வேறு)

மனநல ஆலோசகர் நப்பின்னை , “யாரிடமிருந்து யாருக்கு வந்தது என கண்டு பிடிப்பது இயலாதது. உங்களுக்கு அனுமானங்கள் இருக்கலாம். ஆனால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாது. யாருக்கு முதலில் அறிகுறிகள் வந்ததோ அதை வைத்து யாருக்கு வந்தது என நாம் தீர்மானிக்க முயல்வோம். ஆனால் முதலில் தொற்று ஏற்பட்டவருக்கு தான் முதலில் அறிகுறிகள் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் உடல் நிலை பொருத்து அறிகுறிகள் தெரிவதற்கு நாட்கள் மாறுபடலாம்.எனவே என்னிடமிருந்து தான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்தது என குற்ற உணர்ச்சி இருந்தால், அது உங்கள் அனுமானம் மட்டுமே. எனவே அனுமானத்தின் அடிப்படையில் கவலைப்பட்டு அதனால் பல சிக்கல்களை உருவாக்கிக் கொள்வது தேவையற்றது. அப்படியே மிக தீர்க்கமாக உங்களால் தான் வந்தது என தெரிந்து விட்டாலும் அதனால் என்ன பலன்? உங்களின் தற்போதைய நிலை அதனால் மாற போகிறதா?” என்கிறார்.

மனமே சற்று இளைப்பாறு 2 : இந்த நேரத்தில் தேவையற்ற எண்ணங்களை தவிருங்கள்..!

எப்படி குற்ற உணர்ச்சி வேண்டாமோ அதே காரணங்களுக்காக  ‘உன்னிடமிருந்து தான் வந்தது’ என குற்றம் சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடும்பத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் நம் கவனத்தில் முதலில் இருக்க வேண்டியது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சையே. பாதிக்கப்பட்டவர்களில் யார் யாருக்கு என்ன அறிகுறிகள் உள்ளன, அவர்களின் வயது, இணை நோய்கள் என்ன, எத்தனை டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர், யாருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும், யார் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த சிறு அனாலிசிஸ் நாமே செய்து நம் மனதை அடுத்து என்ன செய்வது என்பதை நோக்கி நகர்த்த வேண்டும.

எப்படி இதிலிருந்து மீள்வது என்பது மட்டுமே நம் கவனமாக இருந்து தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் கண்டிப்பாக கொரோனாவை எதிர்கொள்வதற்கான தைரியம் கிடைக்கும்.

மனநலம் சார்ந்த உங்கள் கேள்விகளை editor.tamil@nw18.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வாசகர்கள்  அனுப்பினால் அடுத்தடுத்து இந்த பகுதியில் வெளிவரும் கட்டுரைகளில் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெறப்படும்.
Published by:Sivaranjani E
First published: