ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கடலுக்குள் கவர்ந்திழுக்கும் அதிசயம்

கடலுக்குள் கவர்ந்திழுக்கும் அதிசயம்

Aerial view of Hurawalhi

Aerial view of Hurawalhi

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவளத் தீவுகளைக் கொண்ட நாடு மாலத்தீவுகள். பரந்து விரிந்த இந்தியப் பெருங்கடலில் ஆங்காங்கே உள்ள மணல்திட்டுகளின் கோர்வைதான் இந்நாடு. கடல், கடல், எங்கு நோக்கிலும் கடல். பாலைவனத்துக்கு நடுவே காணப்படும் சோலைகளைப் போல கடலுக்குள் இருக்கும் சிறு சிறு தீவுகளில் அழகிய கடற்கரை ரெசார்ட்கள் உள்ளன. அப்படி ஒரு தீவுதான்

ஹுராவகி தீவு. அத்தீவில் உள்ள அழகிய ரெசார்ட், ஹுராவகி ஐலாண்ட் ரெசார்ட்.

இதுபோன்ற ரெசார்ட்கள் மாலத்தீவுகளில் உள்ள அனைத்து தீவுகளிலும் உண்டு. ஆனால் இந்த ரெசார்ட்டின் தனிச்சிறப்பு, உலகிலேயே மிகப்பெரிய அன்டர்சீ கிளாஸ் ரெண்டரண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரெசார்ட்டில் உள்ள 90 சொகுசு வில்லாக்களில் 60 வில்லாக்கள் கடலுக்கு மேலேயும், 30 வில்லாக்கள் கடற்கரை வில்லாக்களாகவும் உள்ளன. பாடி எனப்படும் அன்டர்வாட்டர் ஸ்போர்ட்ஸ் சென்டரும், ஸ்பாவும் உள்ளன.

அன்டர்சீ ரெஸ்டரண்ட், 5.8 அன்டர்சீ ரெஸ்டரண்ட் என்று அழைக்கப்படுகிறது. காரணம் இது தரையிலிருந்து 5.8 மீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. 5.8 ரெஸ்டரண்ட்டைத் தவிர்த்து, அக்வேரியம் ரெஸ்டரண்ட், தேப்பன்யாக்கி கிரில், கன்னெல்லி ரெஸ்டரண்ட், கோகோ பார் மற்றும் பிரைவேட் பீச் பிரண்ட் ரெஸ்டரண்ட் ஆகிய உணவகங்களும் உள்ளன. இது, ஈகோ பிரென்ட்லி கான்செப்ட் ரெசார்ட். இங்கு குடிநீருக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதில்லை. குடிநீர் தயாரிக்கும் யூனிட்கள் தனியாக உள்ளன. அதேபோல் தேவைப்படும் மின்சாரத்தில் 30 சதவீதம் சோலார் பேனல்கள் மூலம் அங்கேயே தயாரிக்கப்படுகிறது.

ஹுராவகி ரெசார்ட், மான்டா டிரஸ்ட் எனப்படும் கடல் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. மான்டா குரூப், டைவிங், ஸ்நோர்க்கிளிங் போன்ற கடலுக்குள் பயணிக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தருவதோடு தீவின் மற்றொரு அழகிய அம்சமான பச்சை ஆமைகளைப் பாதுகாக்கிற பணியில் ஈடுபட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளால் அவற்றின் இனப்பெருக்கம், வளர்ச்சி ஆகியவை பாதிக்காத வண்ணம் பாதுகாக்கிறது. ஹுராவகி ஐலாண்டு ரெசார்ட் இன்று (டிசம்பர் 1) முதல் விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

First published:

Tags: Hurawalhi, Maldives, Resort, Underwater restaurant