தந்தேராஸ் 2020 - எந்த ராசிகாரர்கள் என்ன பொருட்கள் வாங்கினால் நல்லது நடக்கும் தெரியுமா?

தந்தேராஸ் 2020 - எந்த ராசிகாரர்கள் என்ன பொருட்கள் வாங்கினால் நல்லது நடக்கும் தெரியுமா?

மாதிரி படம்

இது தன்வந்தரி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாளில் தன்வந்தரியை வணங்குவது நல்ல ஆரோக்கியத்திற்கும் செல்வ செழிப்புக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

  • Share this:
ஏதோ சில பொருட்களை வாங்குவதோடு ஒப்பிடுகையில், உங்கள் ராசி அடையாளத்தின் படி பொருட்களை வாங்குவது நீண்ட காலத்திற்கு நல்ல பலன்களை தரும் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த ஆண்டு தந்தேராஸில், உங்கள் ராசி அடையாளத்தின் படி ஷாப்பிங் செய்வது மிகவும் நல்ல செல்வ சேர்க்கையை தரும். ஜோதிடர்களின் கூற்றுப்படி நீங்கள் சரியாக என்ன வாங்க வேண்டும் என்பது குறித்த விவரத்தை நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. மேலும் அதை வாங்குவதற்கான நல்ல நேரத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

செல்வத்தின் பண்டிகையான தந்தேராஸ் புதிய பொருட்களை வாங்குவதற்கான மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாகும், இது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரும். இந்த நாளில் நாம், நல்ல உடல்நலம் மற்றும் செல்வ வளத்திற்காக கடவுள்களை வழிபடுவது நல்ல பலனை தரும். உங்கள் ராசி அடையாளத்தின் படி இந்த தந்தேராஸில் ஷாப்பிங் செய்வதற்கான சில யோசனைகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை தந்தேராஸில் தொடங்கி பாய் தூஜுடன் முடிவடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், கிருஷ்ணா பக்ஷாவின் திரயோதாஷி திதியில் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இது தன்வந்தரி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சமுத்திர மந்தனின் போது தந்தேராஸ் நாளில் தனரிந்தர் அமிர்த கலாஷுடன் தோன்றினார் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் தன்வந்தரியை வணங்குவது நல்ல ஆரோக்கியத்திற்கும் செல்வ செழிப்புக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் ஷாப்பிங் செய்வது நல்லதாக கருதப்படுகிறது.ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்ன வாங்க வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.,

மேஷம்:  இந்த ராசிக்காரர்கள் மின்னணு பொருட்கள், மின்னணு கருவிகள், தங்கம்-வெள்ளி பொருள், மற்றும் சொத்துக்களை வாங்குவதன் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள்.

ரிஷபம்:  இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் ஒரு சிக்கலான கிரகம் எனவே, இந்த அழகு பொருட்கள், வாசனை திரவியங்கள் வெள்ளி, வைரம், நிலம், மற்றும் வாகனங்கள் வாங்குவது சரியான வழி.

மிதுனம் :  ரிஷபம் ராசி அடையாளத்தின் அதிபதி புதன். மிதுன ராசிக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். இது தவிர, பித்தளை, துணி, வழிபாட்டுப் பொருட்கள், இசைக்கருவிகள் போன்றவற்றில் வர்த்தகம், வாங்குதல் அல்லது முதலீடு செய்வது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

கடகம் : கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த நபர்கள் வணிகத்திலும், வேலையிலும் வெற்றி பெறுவார்கள். எனவே, அவர்களுக்கு வெள்ளி, நவீன உபகரணங்கள், அல்லது நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவதற்கான சிறந்த தேர்வாகும்.சிம்மம் : சிம்ம ராசி அடையாளத்தின் அதிபதி சூரியன். தங்கத்தில் முதலீடு செய்வது இந்த ராசிக்காரர்களுக்கு பயனளிக்கும், மேலும் வாசனை திரவியம், மின்னணு பொருட்கள், தங்கம், தாமிரம், பங்குச் சந்தையில் முதலீடு, மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திலும் முதலீடு செய்யலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பண ரீதியாக பயனளிக்கும்.

கன்னி:  இந்த ராசி அடையாளத்தின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களைப் பொறுத்தவரை செல்வத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்வதை விட வேறு எதுவும் சிறந்த வழி இருக்காது.

துலாம்:  துலாம் மற்றும் ரிஷபம் என இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் அதிபதி சுக்கிரன் என்பதால் ரிஷப ராசிக்கான பொருட்கள் அதாவது அழகு பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வாங்குவதை தேர்வு செய்யலாம், ஏனெனில் இது அவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

விருச்சிகம்: இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் நிலம், வீடுகள், கடைகள், விவசாயம், சிமென்ட், கற்கள், தாதுக்கள், வேளாண்மை மற்றும் மருத்துவ உபகரணங்களில் முதலீடு செய்வதன் மூலமோ அல்லது வாங்குவதன் மூலமோ பயனடையலாம்.

தனுசு: இந்த ராசியின் அதிபதி வியாழன் அல்லது குரு ஆகும். இது வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் கிரகம். குறிப்பாக தங்கம், நகைகள், கற்கள் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வாங்கினால் அல்லது அதில் முதலீடு செய்தால் அவர்களுக்கு பயன் உண்டாகும்.மகரம் :  மகர ராசியின் அதிபதி சனி. இரும்பு, எஃகு, அனைத்து வகையான எண்ணெய், உணவுப் பொருட்கள், மின்னணு பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும்.

கும்பம்:  சனி இந்த அடையாளத்தின் அதிபதியாகும், இது மகர ராசிக்கு மிகவும் நெருங்கியது. இந்த இராசி மக்கள் இரும்பு, எஃகு, எல்லா வகையான எண்ணெய், உணவு பொருட்கள், மின்னணு பொருட்கள், கருவிகள், தாதுக்கள், போன்ற உலோகங்களில் ஒரு பொருளை வாங்க தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

மீனம்:  இந்த ராசியின் அதிபதி குரு, நாம் மேலே பார்த்தபடி குரு வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் ஒரு கிரகம். எனவே மீனம் மற்றும் தனு அல்லது தனுசு ராசிக்காரர்கள் தங்கம், நகைகள், கற்கள் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்யலாம், அதை வாங்க அல்லது முதலீடு செய்தால் அவர்களுக்கு பயன் உண்டாகும்.

தந்தேராஸில் ஷாப்பிங் செய்வதற்கான நல்ல நேரம்:-

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு, நவம்பர் 12ம் தேதி இரவு 9:30 மணி முதல் திரயோதாஷி திதி நடைபெறும், இது நவம்பர் 13ம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடையும். ஷாப்பிங், நவம்பர் 12ம் தேதி, காலை 11:30 மணி முதல் மதியம் 1:07 மணி வரை செய்யலாம். மேலும் நவம்பர் 13ம் தேதி, காலை 5:59 முதல் 10:06 வரை ஷாப்பிங் செய்ய உகந்த நேரமாகும்.

தந்தேராஸ் பண்டிகை நாளில், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு ஏராளமான அதிர்ஷ்டத்தை அளிக்கட்டும். உங்களுக்காக News18 தமிழ்நாடு வாழ்த்துக்களை இதன் மூலம் அனுப்புகிறது. நீங்கள் விரும்பிய அனைத்து வசதிகளையும் உங்களுக்கு வழங்குவதற்கு போதுமான செல்வத்துடன் உங்கள் வாழ்க்கை நடந்த வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: