Home /News /lifestyle /

தந்தேராஸ் திருநாளில் நீங்கள் தங்கம் வாங்க உகந்த நேரம் எது தெரியுமா?

தந்தேராஸ் திருநாளில் நீங்கள் தங்கம் வாங்க உகந்த நேரம் எது தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த நாளில் தங்கம் வாங்க விரும்புவோர் நவம்பர் 13ம் தேதி காலை 6.42 மணி முதல் மாலை 5.59 மணி வரை வாங்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக "தந்தேராஸ்" பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தனத்ரயோதாஷி என்றும் அழைக்கப்படும். தந்தேராஸ் என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி 'தேராஸ்' என்பதற்கு 13 வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டப்படவுள்ளது.

தந்தேராஸில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே இரவில் எம தீபத்தை ஒளிரச் செய்வார்கள். புராணங்களின்படி, த்ரயோதாஷி திதியில் அவ்வாறு செய்வது மரணத்தின் கடவுளான யமராஜை விரட்ட முடியும் என்பது ஐதீகம். மேலும் தந்தேராஸ் தினத்தன்று, சமுத்திரமந்தனின் போது லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளான குபேரா பகவானுடன் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. அதனால் நாளின் மாலை வேளையில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. அந்த தினத்தில் புதிய பாத்திரங்கள் மற்றும் நகைகள் அல்லது தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது உங்கள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. தந்தேராஸ் தினத்தை கொண்டாடுபவர்கள் வழக்கமாக சந்தைகளுக்குச் சென்று தங்க பிஸ்கட் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை வாங்குவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாடுவதற்கான உதவிக்குறிப்புகள் இதோ..

பண்டிகை காலங்களில் பல்வேறு விற்பனை நிலையங்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குவதால் தங்கம் தவிர வீட்டிற்கு உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை மக்கள் வாங்குவார்கள். இப்போதெல்லாம், ஷாப்பிங் ஆன்லைனிலும் செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பயன்பாடுகளில் பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால் இந்த தினத்தில் ஏன் தங்கம் வாங்க வேண்டும். அன்றைய நாளில் தங்கம் வாங்குவது குடும்பத்திற்கு எவ்வாறு செல்வத்தை பெருக்கி தரும் என நாம் ஆச்சரியப்படலாம். இதற்கு ஒரு புராணக் கதை ஒன்று உள்ளது.தந்தேராஸ் தினம் உருவான கதை:

புராணக் கதையின் படி, ஹிமா என்ற அரசனின் மகனுக்கு ஒரு சாபம் அளிக்கப்பட்டது. அந்த சாபம், அவன் தனது திருமணத்திற்குப் பின்பு 4 வது நாள் மரணமடைவான் என்பது தான். ஒரு ரகசிய வேண்டுகோள் மூலம் இதனை அறிந்துகொண்ட இளவரசனின் மனைவி கணவனைச் சாபத்திலிருந்து காப்பாற்ற ஒரு திட்டத்தை தீட்டுகிறார். அவர்களுடைய திருமணமான 4 வது நாளன்று தூங்க வேண்டாமென அவள் தனது கணவனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். மேலும் தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள், நாணயங்களை அவளது கணவனின் படுக்கையறை கதவின் முன் குவித்தார். அரண்மனை முழுவதும் முடிந்த அளவு நிறையத் தீபங்களை ஏற்றினார்.

தந்தேராஸ் பண்டிகை நாளன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் வாழ்வு செழிக்கும்!

தனது கணவன் தூங்காத வண்ணம் கதைகள் மற்றும் பாடல்கள் பாடினார். அந்த நேரத்தில் யமதர்ம ராஜன் அரசன் ஹிமாவின் மகனைத் தேடி பாம்பு வடிவில் வந்தார். ஆனால் பல்வேறு ஆபரணங்கள், விளக்குகள் மற்றும் நாணயங்களின் ஒளி அவரது பார்வையை மறைத்ததால், அவரால் அரண்மனை படுக்கையறைக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து யமதர்ம ராஜன் இளவரசனுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அங்கிருந்து வெளியேறினார். இதனடிப்படையிலேயே எம தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல, தாந்தேராஸ் தினத்தன்று மக்கள் தங்க ஆபரணங்களையும், நாணயங்களையும் வாங்குவதற்கு இது ஒரு காரணமாகும்.தந்தேராஸ் தினத்தில் தங்கம் வாங்க நல்ல நேரம்:

இந்த நாளில் தங்கம் வாங்க விரும்புவோர் நவம்பர் 13ம் தேதி காலை 6.42 மணி முதல் மாலை 5.59 மணி வரை வாங்கலாம். மக்கள் நெரிசலான கடைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஆன்லைனில் விலைமதிப்பற்ற உலோகத்தை வாங்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும், விற்பனை நிலையங்கள் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன என்றால், COVID-19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நகைக் கடைகளுக்குச் நீங்கள் செல்லலாம்.

தந்தேராஸ் நாளில் பூஜை நடத்தும் நேரம்:

தந்தேராஸ் பூஜை செய்யும் தருணம் மாலை 05:28 மணி முதல் மாலை 05:59 மணி வரை ஆக இருக்கும். மேலும், தந்தேராஸ் தினத்தன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரதோஷ் காலில் அதாவது மாலை 05:28 மணி முதல் இரவு 08:07 மணி வரை லட்சுமி பூஜை செய்யலாம்.

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Deepavali, Dhanteras, Diwali

அடுத்த செய்தி