தந்தேராஸ் பண்டிகை நாளன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் வாழ்வு செழிக்கும்!

தந்தேராஸ் பண்டிகை நாளன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் வாழ்வு செழிக்கும்!

மாதிரி படம்

தந்தேராஸ் பூஜையின் நேரம் மாலை 05:28 மணி முதல் மாலை 05:59 மணி வரை ஆக இருக்கும். மாலை 05:28 மணி முதல் இரவு 08:07 மணி வரை லட்சுமி பூஜை செய்யலாம்.

  • Share this:
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் "தந்தேராஸ்" பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தந்தேராஸ் என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி 'தேராஸ்' என்பதற்கு 13வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை தந்தேராஸ் பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது.

தந்தேராஸ் தனத்ரயோதாஷி என்றும் அழைக்கப்படுகிறது. இது தீபாவளியின் மிகப்பெரிய பண்டிகையின் முதல் நாளை குறிக்கும். கார்த்திகை மாதம் இந்து நாட்காட்டி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதிமூன்றாவது சந்திர நாளில் தந்தேராஸ் விழுகிறது. இந்துக்கள் தன்தேரா நாளில், ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்தரியை வணங்குகிறார்கள். மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக ஆயுர்வேதத்தின் ஞானத்தை தன்வந்தரி வழங்கினார் என்றும், நோய்களிலிருந்து விடுபட அவர் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

அதே தந்தேராஸ் நாளில், லட்சுமி பூஜை மாலையில் செய்யப்படுகிறது. மேலும் வீட்டில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படுகிறது. இந்து பாரம்பரியத்தின் படி, புதிய கொள்முதல், குறிப்பாக தங்கம் அல்லது வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கு தந்தேராஸ் மிகவும் நல்ல நாள் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் என்று நம்பப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் தந்தேராஸ் பண்டிகை தினத்தில் நகை விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா பாதிப்புகளைத் தாண்டி மக்களிடையே தேவை குறைவு ஏற்பட்டுள்ளதால் நகை விற்பனை இந்த ஆண்டில் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை.2020ம் ஆண்டில் தந்தேராஸ் பூஜை நடத்தும் தேதி, நேரம்:

தந்தேராஸ் பூஜையின் நேரம் மாலை 05:28 மணி முதல் மாலை 05:59 மணி வரை ஆக இருக்கும். மேலும், தந்தேராஸ் தினத்தன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரதோஷ் காலில் அதாவது மாலை 05:28 மணி முதல் இரவு 08:07 மணி வரை லட்சுமி பூஜை செய்யலாம். பல்வேறு நகரங்களில் பூஜை செய்வதற்கான நேரம் மற்றும் தருணங்களை குறித்து காண்போம்.

புனேவில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:57 முதல் 05:59 மணி வரை

டெல்லியில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:28 முதல் 05:59 மணி வரை

சென்னையில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:40 முதல் 05:59 மணி வரை

ஜெய்ப்பூரில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:37 முதல் 05:59 PM மணி வரை

ஹைதராபாத்தில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:41 முதல் 05:59 மணி வரை

குர்கானில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:29 மணி முதல் 05:59 மணி வரைசண்டிகரில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:30 முதல் 05:59 மணி வரை

கொல்கத்தாவில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 04:58 முதல் 05:59 மணி வரை

மும்பையில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 06:01 முதல் 08:34 மணி வரை

பெங்களூரில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:50 முதல் 05:59 மணி வரை

அகமதாபாத்தில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:56 முதல் 05:59 மணி வரை

நொய்டாவில் தந்தேராஸ் பூஜை செய்யும் நேரம் - மாலை 05:32 முதல் 05:59 மணி வரை

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: