நாம் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு ஆக்சிஜன் ஃபேசியல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைச் சீராக்கி சருமத்தைத் தொய்வில்லாமல் எப்போதும் இளமைத்தோற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
பொதுவாகப் பெண்களுக்கு எப்போதும் முகப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஃபேசியலைத் தான் முதலில் தேர்வு செய்வார்கள். சிலர் வீட்டிலேயே ப்யூட்டி கிரீம்களை வாங்கி மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது பேசியல் செய்வார்கள். சிலர் ப்யூட்டி பார்லர்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இவர்களின் பொதுவான விஷயம் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி முகத்தை எப்போதும் பொலிவுடனும், முகப்பருக்கள் நீக்கம் செய்வது எனப் பலவற்றிற்காக ஃபேசியல் செய்வதை மேற்கொள்கின்றனர்.
கோல்டன் பேசியல், ப்ரூட் பேசியல், அரோமாதெரபி பேசியல், வைன் பேசியன், ஆன்டி ஏஜிங் பேசியல், டைமன் பேசியல், பாராபின் ஃபேசியல் எனப் பலவகைகள் உள்ளது. இவைகள் முகப் பொலிவைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நிலையில், சருமத்தை இயற்கையான முறையில் எப்போதும் இளமைத்தோற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு ஆக்ஸிஜன் ஃபேசியல் மிகவும் உறுதுணையாக இருக்கின்றது என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். எந்த வகையில் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆக்சிஜன் பேசியல் உதவுகிறது என இங்கே விரிவாக அறிந்துகொள்வோம்.
Also Read : இந்த பிரச்சனைகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை உடனே நிறுத்திவிடுங்கள்!
ஆக்சிஜன் ஃபேசியல் : ஆக்சிஜன் ஃபேசியலில் இருந்தும் சருமத்திற்கு உயிர்ப்பைத் தருவதால் உடனடியாக முகம் பொலிவாக உதவுகிறது. மேலும் அடுத்த முறை ஃபேசியல் செய்யும் வரை முகத்தில் பிரகாசம் மாறாமல் இருப்பதை நாம் பார்க்க முடியும்.
ஆக்சிஜன் ஃபேசியல் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ஆக்ஸிஜன் பேசியல் செய்யும் பொது சருமத்தில் உள்ள இறந்த செல்களை எளிதில் அகற்ற உதவுகிறது.
சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைச் சீராக்கி முகத்தில் தொய்வு ஏற்படாமல் எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். இதனால் இளம் வயதிலேயே ஏற்படும் வயதான அறிகுறிகளையும் இந்த ஃபேசியல் போக்குகிறது.
பெண்கள் மற்றும் ஆண்களுக்குச் சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கும் போது பருக்கள் அதிகரிப்பதோடு நமக்கு மாறாத தழும்புகளை உண்டாக்கும். இந்நேரத்தில் ஆக்சிஜன் ஃபேசியல் செய்யும் போது சருமத்திற்குத் தேவையான எண்ணெய் அளவுடன் முகப்பருக்கள் வராமல் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இளம் வயதில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் குறைக்க உதவுகிறது. ஆக்சிஜன் ஃபேசியல் செய்யும் போது முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகத்தில் சுருக்கங்கள் வருவதைக் கட்டுக்குள் வைக்கிறது.
முகத்தில் வீக்கம், சிவத்தல், எரிச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
தோலின் pH அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, சருமம் பிரகாசமாக இருக்க உதவுகிறது.
பகல் நேரங்களில் வெயிலில் செல்லும் போது சூரியனிடமிருந்து புற ஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்தும் சருமம் கருமையடையாமல் இருப்பதற்கும் ஆக்சிஜன் பேசியல் மிகவும் உறுதுணையாக உள்ளது.
இதுபோன்று பல்வேறு நன்மைகள் ஆக்சிஜன் ஃபேசியலில் இருப்பதால் அதிகளவில் மக்கள் விரும்பும் ஃபேசியல்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.