டெங்கு பரவுவதும்.. தடுப்பதும் எப்படி...?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமே பாராமல் தாக்கும் இந்த காய்ச்சல் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.

டெங்கு பரவுவதும்.. தடுப்பதும் எப்படி...?
கொசு
  • News18
  • Last Updated: August 20, 2019, 7:56 PM IST
  • Share this:
டெங்குவைப் போல் கொடுமையான நோய் யாருக்கும் வரவே கூடாது என்பதுதான் அனைவரது விருப்பமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமே பாராமல் தாக்கும் இந்த காய்ச்சல் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. பகலிலும் சுற்றும் இந்தக் கொசுக்களை வீட்டில் அண்ட விடாமல் பார்த்துக்கொள்வதே இந்த நோய்க்கான தலையாய தீர்வு.

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் நண்ணீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குப்பைத் தொட்டி, மூலைமுடுக்குகளை சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். கொசுக்களை விரட்டுவதற்கான பாதுகாப்பு விஷயங்களை கையாளுவதாலும் இந்தக் கொசுக்களை ஒழிக்கலாம்.
டெங்கு வந்தால் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் அசதி, வலி, வாந்தி, மூட்டுகள் வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த கிருமிகள் ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. அவைக் குறைவதுதான் உயிரின் விளிம்பு நிலைக்குத் தள்ளுவது. அப்படி இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது நல்லது. இந்தக் காய்ச்சல் வந்தால் குறைந்தது 5 நாட்களுக்கு மேல் இருக்கும். உங்களுக்கு இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தாலே மருத்துவரை அணுகுங்கள்.

காய்ச்சல் குறைய பச்சை தண்ணீரில் துண்டை நனைத்து உடலில் துடைத்து எடுங்கள். இதனால் வெப்பம் குறையும். ஓ.ஆர்.எஸ் கலந்த தண்ணீர் பருகுங்கள். நிலவேம்புக் கஷாயம், பப்பளி இலைக் கஷாயம் குடிப்பது டெங்கு வைரஸை கட்டுப்படுத்த உதவும். டெங்கு இருக்கும்பட்சத்தில் இந்த கஷாயத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி மூன்று வேளையும் குடிக்கலாம்.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...