• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... சுவை மிகுந்த ரவா லட்டு ரெசிபி...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... சுவை மிகுந்த ரவா லட்டு ரெசிபி...

ரவா லட்டு

ரவா லட்டு

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்களில் மிக முக்கியமான இனிப்பு பலகாரம் ரவா லட்டு... |

  • Share this:
    எந்த பண்டிகையானாலும் ரவா லட்டுக்கு இடமிருக்கும். சிலர் வீட்டில் ரவா லட்டு பிடித்தால் சாப்பிடும்போது கடிக்கவே முடியாதபடி கல்லைக் கடிப்பதுபோல் இருக்கும். சிலர் வீட்டில் இதை கிண்டலும் செய்வார்கள். இனியும் இந்த கிண்டல்களுக்கு ஆளாகாமல் சூப்பராக ரவா லட்டு செய்து அசத்திவிடுங்கள்.. அதற்கான ரெசிபி இதோ..


    தேவையான பொருட்கள்:


    ரவை - 2 கப்,



    சர்க்கரை - 1 கப்,


    துருவிய தேங்காய் - 1/4 கப்,


    உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,


    நெய் - தேவையான அளவு


    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு




    செய்முறை:


    ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். அதன் பின்னர் சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு விட்டு, முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.


    பிறகு ரவை, சர்க்கரையை சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து,  தேங்காய், ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சிவையான ரவா லட்டு ரெடி...





    மேலும் படிக்க...  கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம்... இதோ ரெசிபி...
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: