பிரமாண்ட செலவில் திருமணம் செய்யக் கட்டுப்பாடு : மீறினால் 15 லட்சம் வரை அபராதம்..!

இதன் மூலம் குப்பைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி உணவுகள் அதிக அளவில் வீணாவதையும், தண்ணீரை மிச்சப்படுத்தவும் வழிவகுத்துள்ளது.

Web Desk | news18
Updated: July 18, 2019, 3:15 PM IST
பிரமாண்ட செலவில் திருமணம் செய்யக் கட்டுப்பாடு : மீறினால் 15 லட்சம் வரை அபராதம்..!
பிரமாண்ட செலவில் திருமணம் செய்யக் கட்டுப்பாடு
Web Desk | news18
Updated: July 18, 2019, 3:15 PM IST
சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் கல்யாணம் என்ற வெறும் வார்த்தையை நிஜமாக்கும் விதமாக நடத்தப்படுவதுதான் இன்றைய வெட்டிங் டிரெண்ட்.  செட் அமைத்து, ஆயிரக்கணக்கான உறவினர்களை அழைத்து, பார்த்தாலே தெகிட்டும் அளவிற்கு உணவு என பிரமாண்ட பொருட்ச் செலவில் செய்வதுதான் திருமணம் என்ற நிலைக்கு வந்துவிட்டது இந்தியத் திருமணக் கலாசாரம்.

சமீபத்தில் குப்தா குடும்பம் உத்திரகாண்டில் 200 கோடி செலவில் திருமணம் செய்தது. அதன் விளைவு 4000 கிலோ குப்பை. பின் மாநகராட்சி அவர்களிடமே பணம் பெற்று ஜே.சி.பி , துப்புரவுப் பணியாளர்களை அமர்த்தி அந்த குப்பைகளை அகற்றியது. ஒரு திருமணத்திற்கே 4000 கிலோ குப்பை என்றால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒட்டுமொத்த திருமணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால்..?

இதை கணக்கு பார்த்துதான் டெல்லி அரசாங்கம் பிரமாண்ட பொருட்ச்செலவிலான திருமணங்களை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் மூலம் குப்பைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி உணவுகள் அதிக அளவில் வீணாவதையும், வீணாகும் தண்ணீரை மிச்சப்படுத்தவும் வழிவகுத்துள்ளது. இதற்கென நகர்ப்புற மேம்பாட்டு முதன்மை செயலாளர், சுகாதார முதன்மை செயலாளர், டெல்லி ஜல் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செயலாளர் என நான்கு உறுப்பினர்களை அமர்த்தி ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளது. இதற்கு உச்சநீதி மன்றமும் ஒப்புதல் அளித்து கண்காணிக்க தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கொள்கையில் மண்டபத்தின் அளவைப் பொருத்துதான் உறவினர்களை அழைக்க வேண்டும். அதாவது, இடத்தின் சதுர மீட்டர் பரப்பளவை 1.5 ஆல் வகுத்து அதன் மூலம் கிடைக்கும் எண் அடிப்படையில் உறவினர்களை அழைக்க வேண்டும் அல்லது நான்கு பேருக்கு ஒரு கார் என்ற வீதம் அழைக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளது.

Loading...அதேபோல் குதிரை ஊர்வலம், பேண்டு வாத்தியங்கள் மண்டபத்திற்கு வெளியே அனுமதி இல்லை. இசை , பாடல், பேண்டு வாத்தியம் போன்றவற்றின் சத்தங்கள்; ஒலி மாசுபாடுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்.
உணவை அளவுக்கு அதிகமாக் சமைக்கக் கூடாது. ஒருவேளை மீந்துவிட்டால் அமைப்புகள் , உதவி மையங்கள் மூலம் குழந்தைகள் இல்லம், வறுமையில் உள்ள மக்களுக்கு அளிக்க வேண்டும்.

இந்த கொள்கையை மீறும் நபருக்கு அதிக அபராதம் வழங்கப்படும் என்றுக் கூறப்பட்டுள்ளது. அது விதி மீறல்படி 5 முதல் 15 லட்சங்கள் வரை அபராதம் அளிக்கப்படும்.

அதிகபட்சமாக அனுமதி அளித்த மண்டபத்திற்கு 30 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்படும். அதேசமயம் அங்கீகாரமற்ற இடத்தில் நிகழ்ச்சியை நடத்தினால் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
திருமணங்கள் மட்டுமன்றி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு இந்தக் கொள்கை கணக்கில் கொள்ளப்படும்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...