Home /News /lifestyle /

தீபிகா படுகோன் தினமும் பின்பற்றும் விஷயங்கள் இதுதானா? படிச்சா நீங்களே ஆச்சர்யப்பட்டு போவீங்க..

தீபிகா படுகோன் தினமும் பின்பற்றும் விஷயங்கள் இதுதானா? படிச்சா நீங்களே ஆச்சர்யப்பட்டு போவீங்க..

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

"சினிமா வாழ்கை-நிஜ வாழ்கை இரண்டும் ஒரே மாதிரியாக இல்லை, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, பல் துலக்குவது, காலை உணவை உட்கொள்வது என்பன போன்ற சின்ன சின்ன விஷயங்களும் மிகவும் கடினம்.

முன்பெல்லாம் நடிகர்கள் தங்கள் வாழ்க்கை முறையை பொதுவெளியில் கொண்டு வர மாட்டார்கள். ஆனால் இப்பொழுதோ சோசியல் மீடியாக்களில் பலரும் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு நடிகர் நடிகைகள் தயங்காமல் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இண்டர்நெட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள தீபிகா படுகோன் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

தீபிகா படுகோன், இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போஸ்டில், தன்னுடைய "தினசரி வழக்கத்தை" ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவரின் டெய்லி ரோட்டின் தீபிகாவைப் போலவே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த வகையில் தீபிகாவிடம் ஒருவர், "உங்கள் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்?" என்று கேட்டுள்ளார். அதற்கு தீபிகாவோ, "சினிமா வாழ்கை-நிஜ வாழ்கை இரண்டும் ஒரே மாதிரியாக இல்லை, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, பல் துலக்குவது, காலை உணவை உட்கொள்வது என்பன போன்ற சின்ன சின்ன விஷயங்களும் மிகவும் கடினம்.

காலைப்பொழுது மிகவும் அமைதியாக இருப்பது எனக்கு பிடிக்கும். பின்னர், வொர்க்-அவுட் செய்ய விரும்புவேன், இப்படியே எனது அன்றாட வாழ்க்கை முறைகளும் தொடங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரு நாளைக்கு நிறைய திட்டமிடுவீர்களா?" என்ற கேள்விக்கு தீபிகா, "ஆம், மற்றும் இல்லை! எல்லாவற்றையும் சரியாக செய்திடவேண்டுமென்ற எண்ணம் என்னிடம் இருக்கிறது, அதேபோல் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமும் என்னிடம் இருக்கிறது. இதைத்தான் எனது திட்டமிடல் மற்றும் வழக்கத்தின் ஒரு பகுதியாக நான் நினைக்கிறன்" என்று கூறினார்.

தீபிகா படுகோனின் போஸ்ட்டை இங்கே பாருங்கள்: 
View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)


மேலே நாம் கண்ட போஸ்ட்டானது தீபிகா படுகோனின் சமீபத்தியது. ஊரடங்கின்போது தனக்கு "பிடித்த நிகழ்ச்சி", தனக்கு பிடித்த தொலைக்காட்சி தொடர் மற்றும் அவரது "பிடித்த உணவு" பற்றி அவர் தனித்தனி வீடியோக்களில் பேசியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)
 
View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)


பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை தீபிகா படுகோன், ஷாருகான் நடித்த "ஓம் சாந்தி ஓம்" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பச்னா ஏ ஹசீனோ, லவ் ஆஜ் கல், கார்த்திக் காலிங் கார்த்திக், ஹவுஸ்ஃபுல், காக்டெய்ல், யே ஜவானி ஹை தீவானி, சென்னை எக்ஸ்பிரஸ், கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்தார். அடுத்ததாக தீபிகா பதானில் ஷாருக்கானுடன் நடிக்கிறார். மேலும் அவர் '83, ஷாகுன் பாத்ரா போன்ற அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஆயத்தமாகிவருகிறார்.

போதைப் பொருள் வழக்கு, திரைப்படத்தில் சிக்கல், நடிகைகளுடன் வாக்குவாதம் என்பன போன்ற பல பிரச்சனைகள் தீபிகாவுக்கு இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார். உங்களுக்கும் தீபிகாவிடம் ஏதேனும் நல்ல கேள்வி இருந்தால் கேட்டுப்பாருங்கள்.. அதிர்ஷ்டம் இருந்தால் பதில் கிடைக்கும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Bollywood, Deepika Padukone

அடுத்த செய்தி