• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆன்லைன் டேட்டிங் கைகொடுக்குமா..? அதில் உள்ள சிக்கல்கள் என்ன..?

ஆன்லைன் டேட்டிங் கைகொடுக்குமா..? அதில் உள்ள சிக்கல்கள் என்ன..?

ஆன்லைன் டேட்டிங்

ஆன்லைன் டேட்டிங்

ஆன்லைன் டேட்டிங் தளத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த முன்னெச்சரிக்கை, கவனமின்மையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். உளவியல் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

  • Share this:
    இன்றைய இளைஞர்கள் அதிகம் மூழ்கி இருக்கும் விஷயங்களில் ஆன்லைன் டேட்டிங்கும் ஒன்று. ஆனால் அதில் உள்ள சிக்கல்கள் குறித்த முன்னெச்சரிக்கை, கவனமின்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆன்லைன் டேட்டிங்கில் உள்ள சிக்கல்களும், பாதுகாப்பு அம்சங்களும் என்ன என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

    முகமூடி : ஆன்லைனில் பேசும் நபர்களில் பலர் முகமூடி அணிந்தவர்களாக இருக்கலாம். திருமணமானவர், விவாகரத்தில் இருப்பவர் இப்படி எப்படிபட்ட நிலையிலும் இருக்கலாம். எனவே அவர்களுடன் உணர்வுபூர்வமான இணக்கத்தில் இருக்காதீர்கள். அவர்களை சட்டென நம்பாதீர்கள். அவர்களின் மெசேஜிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் சற்றும் பொருத்தமில்லாத நபராகவும் இருக்கலாம்.

    ஏற்றுக்கொள்ளும் முன் சிந்தியுங்கள் : முகம் தெரியாத நபர் உங்களின் நண்பராக ஃபேஸ்புக்கில் ரெக்குவஸ்ட் தருகிறார், டேட்டிங் ஆப்பில் பேசுகிறார் எனில் அதற்கு முன் அவர் குறித்து சில விஷயங்களை ஆன்லைனில் அல்லது சமூகவலைதளங்கில் தெரிந்து கொண்டு அதன் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    உடல் ரீதியான நெருக்கம் : பேசிய கொஞ்ச நாட்களிலேயே அந்தரங்க விஷயங்களை பேசுவது, அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்வது போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள்.



    பணமே குறிக்கோள் : பேசிய சிறிது நாட்களிலேயே குடும்ப கஷ்டம், தவிர்க்க முடியாத பணக் கஷ்டம் என கூறி உங்களிடம் பண உதவி கேட்டால் செய்யாதீர்கள். கடனாக தாருங்கள் என்று கேட்டாலும் கொடுக்க முன்வராதீர்கள். உதவி செய்வது நற்செயல்தான் என்றாலும் இப்படி முகம் தெரியாத நபர்களுக்கு செய்வது ஆபத்தையும், ஏமாற்றத்தையுமே தரும்.

    அனுபவங்கள் வேறுபடலாம் : உங்கள் நண்பருக்கு ஆன்லைன் டேட்டிங் கைகொடுத்தது. தற்போது திருமணம் வரை சென்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால் இது பலருக்கும் கைகொடுக்காது. லட்சத்தில் ஒருவருக்கே இப்படி நடக்கலாம். அதை உங்கள் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்து ஏமாறாதீர்கள்.

    சந்திக்கும் முன் சிந்தியுங்கள் : ஆன்லைனில் பேசியவரை பார்க்க முடிவு செய்தால் சந்திக்கும் முன் பல முறை யோசியுங்கள். அதேபோல் சந்திக்கும்போது மக்கள் கூடும் பொது இடங்களில் சந்தியுங்கள்.

    ஆலோசனை : அவர் மீது காதல் என்றால் அதை அவரிடம் தெரியப்படுத்தும் முன் நண்பர்களுடன், உறவினர்களுடன் ஆலோசனை பெறுதல் அவசியம்.

    தெரியாத நபரிடமிருந்து தவறான மெசேஜ், தவறான நடவடிக்கைகள் தெரிந்தால் உடனே பிளாக் செய்துவிடுங்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: