• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா காலத்தில் உயிர்காக்கும் செயலில் ஈடுபடும் செல்லப்பிராணிகள் : ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!

கொரோனா காலத்தில் உயிர்காக்கும் செயலில் ஈடுபடும் செல்லப்பிராணிகள் : ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகளுக்கான செலவு மட்டும் 13 பில்லியன் டாலர்கள் ஆகும். அதேபோல அமெரிக்காவின் பிராந்தியங்களில் 260 பில்லியன் டாலர்கள் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று நோய் காரணமாக சமூக இடைவெளி என்ற கட்டுப்பாடு வந்ததில் இருந்து மனிதர்களிடம் நேரடி தொடர்பு என்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்றும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு காரணமாக மக்கள் இன்னும் வீட்டில் முடங்கியுள்ளனர். மனிதர்களிடையே நேரடி தொடர்பு என்ற ஒரு விஷயம் இல்லாத நிலையில், உலகளவில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகள் தான் அரவணைப்பு, அன்பாக தட்டிக்கொடுத்தல், எப்போதும் ஒருவர் நம்முடன் இருப்பது போன்ற உணர்வு என மிகவும் தேவையான ஆறுதல்களை மக்களுக்கு வழங்கியுள்ளன என்று ஒரு ஆய்வுக் கூறியுள்ளது.

செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் ஆராய்ச்சியார்களின் கூற்றை ஆதரிக்கவும் செய்துள்ளனர்.மனிதர்களிடையே இருக்கும் நேரடி தொடர்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த ஒரு சகாப்தத்தில் செல்லப்பிராணிகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றிய இந்த ஆய்வு கொள்கைக்கான நடத்தை பொருளாதாரம் (JBEP) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமாவதற்கு முன்பு உடல் ரீதியான தொடுதல் என்பது ஒரு பொருட்டாக கருதப்படவில்லை.

மேலும் அவற்றை மிகவும் பெரிதாக மக்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இது குறித்து தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஜேனட் யங் என்பவர் கூறியதாவது, "தனிமையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கும், மன அழுத்தத்திற்கு எதிராக ஒரு இடையகத்தை வழங்குவதற்கும், ஊரடங்கு சமயத்தில் பெட் ஷாப்பில் இருந்து நாய்கள் மற்றும் பூனைகளை மக்கள் தத்தெடுப்பதில் உலகளாவிய எழுச்சி ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.மேலும், சில வகை நாய்குட்டிகளை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் பலர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாகவும், இதனால் நாய்க்குட்டிகளின் தேவை நான்கு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். செல்லப்பிராணிகளை வாங்குவதற்கான செலவு ஏற்கனவே ஒரு பெரிய சாதனை அளவை எட்டியுள்ளது. உலகளவில் 2020ல், ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகளுக்கான செலவு மட்டும் 13 பில்லியன் டாலர்கள் ஆகும். அதேபோல அமெரிக்காவின் பிராந்தியங்களில் 260 பில்லியன் டாலர்கள் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த செலவுகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளுடன் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம் சுகாதார நன்மைகள் குறித்து பரவலாகப் புகாரளிக்கப்பட்டாலும் செல்லப்பிராணிகள் தொடுதலின் அடிப்படையில் மனிதர்களுக்கு கொண்டு வரும் குறிப்பிட்ட நன்மைகள் குறித்து சிறிய தகவல்களும் வெளிவந்துள்ளன. இது குறித்து யங் தெரிவித்ததாவது, மக்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படும் போது அல்லது விலக்கப்பட்டிருக்கும் போது அது செல்லப்பிராணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றுகிறது.

துணி மாஸ்க்குகளை எப்படி துவைக்க வேண்டும்? எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?

ஏனெனில் அவை ஆறுதல், தோழமை மற்றும் சுய மதிப்புக்குரிய உணர்வை வழங்குகின்றன என்று கூறினார். தொடுதல் என்பது ஒரு சாதாரணமான உணர்வு தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அது வளர்ச்சி, மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு முக்கியமானது என்பதையும், உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைப்பதையும் குறிக்கிறது. மேலும் வயதானவர்களின் மற்ற புலன்கள் குறைந்து வருவதால் தொடுதல் என்ற ஒரு விஷயம் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இது பற்றிய ஆய்வில் 32 பேருடன் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் செல்லப்பிராணிகளைத் தொடுவது ஆறுதலையும், நிதானத்தையும் அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் செல்லப்பிராணிகளுக்கும் இது தேவை என்று தோன்றியதாக தெரிவித்துள்ளனர். நாய்கள் மற்றும் பூனைகள் அவற்றின் உரிமையாளர்கள் சோகமாக இருக்கும் போதும், தொந்தரவு செய்யும் போதும், அல்லது அதிர்ச்சியடையும் போதும் அவர்களை தொடுவதாக பல்வேறு உதாரணங்கள் ஆய்வில் மேற்கோள்காட்டப்பட்டன.

இது பற்றி மேலும் பேசிய யங்," ஆய்வில் எங்களுக்கு கிடைத்த பீட்பேக் என்னவென்றால், செல்லப்பிராணிகளும் மனிதர்களைப் போலவே தொட்டுணரக்கூடிய தொடர்புகளிலிருந்து மகிழ்ச்சியை பெறுகின்றன என்பது தான். நாய்கள் மற்றும் பூனைகள் மட்டுமல்ல. நாங்கள் நடத்திய நேர்காணல்களில் பறவைகள், செம்மறி ஆடுகள், குதிரைகள் மற்றும் ஊர்வனவற்றைக் கூட மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி, திடீர் ஊரடங்கு மற்றும் சமூக எழுச்சி ஆகிய காலகட்டத்தில், பல மனிதர்களை தொட்டு ஆறுதல் தரக்கூடிய ஒரே உயிரினமாக நம் செல்லப்பிராணிகள் இருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: