• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 31 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ள கொரோனா தொற்று..

31 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ள கொரோனா தொற்று..

காட்சி படம்

காட்சி படம்

கோவிட் -19 பெருந்தொற்று நோய் உலகளவில் கூடுதலாக 31 மில்லியன் மக்களை கடும் வறுமை நிலைக்கு தள்ளியுள்ளது.

  • Share this:
சர்வதேச நாடுகளை 20 மாதங்களுக்கு மேலாக ஆட்டிப்படைத்து வரும் கோவிட்-19 தொற்று லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றி இருக்கிறது. சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு, தொற்று அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக போடப்படும் லாக்டவுன்கள் என பல்வேறு காரணிகள் காரணமாக உலகளவில் எண்ணற்ற மக்கள் இயல்பு பொருளாதார நிலைக்கு திரும்ப முடியாமலும், வறுமையின் பிடியில் சிக்கியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்னும் நீடித்து வரும் கோவிட் -19 பெருந்தொற்று நோய் உலகளவில் கூடுதலாக 31 மில்லியன் மக்களை கடும் வறுமை நிலைக்கு தள்ளியுள்ளது.

மேலும் 4 ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பதில் காணப்பட்ட உலகளாவிய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி நிலைமையை பின்னுக்கு இழுத்து சென்றுள்ளது. 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீடிக்கும் கோவிட் -19 பேரிடரானது, கூடுதலாக சுமார் 31 மில்லியன் மக்களை தீவிர வறுமை நிலைக்கு தள்ளியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள்தொற்று நோயால் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏற்றத்தாழ்வுகளை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் ஆகியோரால் இணைந்து நடத்தப்படும் அறக்கட்டளையான கோல்கீப்பர்ஸ்-ன் 5ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக Goalkeepers-ன் வருடாந்திர அறிக்கையில் வெளியாகி உள்ள தகவல்கள் பின்வருமாறு:

பெருந்தொற்றின் விளைவுகள் காரணமாக ஒரே ஆண்டில் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் தீவிர வறுமை நிலைக்கு சென்றுள்ளது கவலையளிக்க கூடிய ஒன்று. வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசி விகிதங்களில் பெரும் பின்னடைவுக்கு தொற்றுநோய் வழிவகுத்துள்ளது, ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கு இடையே கல்வி இடைவெளி மற்றும் சுகாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகளில், தொற்றின் மிக மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் பலரால் தவிர்க்க இயலவில்லை.

Also Read : கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு இந்த அறிகுறிகள் இருக்குமாம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு பதிலாக சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையில் தள்ளி விட்டுள்ளது இந்த பெருந்தொற்று. இது தவிர கல்வி கற்பதில் சில சவால்கள் முதல் வளர்ச்சி மற்றும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் ஏற்படும் தேக்கநிலை வரை பல விளைவுகளை தொற்றின் தாக்கம் ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர உலகளாவிய அளவில் பெண்களின் மீது தொற்று ஏற்படுத்தியுள்ள விகிதாச்சாரமற்ற பொருளாதார தாக்கத்தையும் இந்த அறிக்கை எடுத்து காட்டி உள்ளது.

உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய மந்தநிலை ஆண்களை விட பெண்களை கடுமையாக பாதித்துள்ளது. உலகின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் கட்டமைப்பு தடைகளை எதிர்கொள்வதால், தொற்று தாக்கங்களால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார். அதேபோல கோவிட் -19 தடுப்பூசிகள் உலகின் அனைத்து நாட்டு மக்களுக்கும் சமமான அளவில் ஒரே நேரத்தில் கிடைக்காமல் இருப்பது ஒரு பொது சுகாதார சோகம் என்று அந்த அறிக்கையில் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: