• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஏற்படும் ’கோவிட் டோ’ என்றால் என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஏற்படும் ’கோவிட் டோ’ என்றால் என்ன?

காட்சி படம்

காட்சி படம்

இந்த அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்ட 1 - 4 வாரங்களுக்குள் உருவாகிறது.

  • Share this:
கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு பல்வேறு அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருவது பொதுவான ஒன்றாக இருக்கும் நிலையில், கோவிட் டோ (Covid toe) என்றழைக்கப்படும் ஸ்கின் கண்டிஷன், நிபுணர்களை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சமீப நாட்களாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சிலர் கோவிட் டோ எனப்படும் அறிகுறியால் பாதிக்கப்படுகின்றனர். கோவிட் டோ என்பது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் கால் விரல்களின் சிவந்து போதல் மற்றும் அந்த பகுதியில் கொப்பளங்கள் ஏற்படுவது உள்ளிட்ட சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

இது எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் குறிப்பாக இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு இது வலியற்றதாக இருக்கும்.ஆனால் ஒரு சிலருக்கோ இது மிகவும் புண் மற்றும் அரிப்பு, மென்மையான கொப்புளங்கள் மற்றும் வீக்கத்துடன் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் கால் விரல் அல்லது காலின் கீழ் பகுதிகளில் முதலில் ஒரு பிரகாசமான சிவப்பு நிறத்துடன் ஏற்பட துவங்குகிறது. பின்னர் படிப்படியாக இது ஊதா நிறமாக மாறுகிறது.

இந்த அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்ட 1 - 4 வாரங்களுக்குள் உருவாகிறது. இதனால் கால் விரல்கள் வீங்குகிறது அல்லது நிறம் மாறுகிறது. இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் இந்த அறிகுறிகள் சில நாட்களில் மறைந்துவிடும். ஆனாலும் சில நாட்களுக்கு பின் இதே நிலை மீண்டும் மீண்டும் தோன்றி மறையலாம். இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட மூத்த மருத்துவர் டாக்டர் சுச்சின் பஜாஜ், Covid toe சமீபத்தில் பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டாம் நிலை அறிகுறியாகும்.

இது 10 முதல் 14 நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கால் விரல்கள் சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறும். சிலருக்கு அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படும். சிலருக்கு காலணிகளை அணிய முடியாத அளவுக்கு இந்த அறிகுறி கடுமையானதாக இருக்கலாம் என்றார். இதனிடையே இந்த அறிகுறி வைரஸுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அளிக்கும் பதிலின் ஒரு பக்க விளைவாக இருக்கலாம் என ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

also read : எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் தரும் இயற்கை தானியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..



தொற்றை எதிர்த்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் போராடும் போது ஏற்படும் பக்கவிளைவுகளே சிலருக்கு கால்களில் ஏற்படும் Covid toe அறிகுறியாக வெளிப்படுகிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாக உள்ளது. இது தொடர்பான பரிசோதனையில் கோவிட் டோ அறிகுறிகள் கொண்ட 50 பேரை ஆய்வுக்குட்படுத்திய போது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் 2 பகுதிகள் அறிகுறிகள் தோன்ற காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

ஒன்று 'டைப் 1 இன்டர்ஃபெரான்' எனப்படும் ஒரு வைரஸ் தடுப்பு புரதத்தாலும், மற்றொன்று உடலின் சொந்த செல்கள் அல்லது திசுக்களை தவறாகத் தாக்கும் ஒரு வகை ஆன்டிபாடியினாலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான தொற்று ஏற்பட்ட பிறகும் மற்றும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாதவர்களிடமும் கோவிட் தொடர்பான தோல் பிரச்சனைகள் தோன்றும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: