Covid Testing in Children: குழந்தைகளுக்கு கோவிட் சோதனை செய்யும் முறைகள் என்ன? சோதனை முடிவுகள் சிறப்பாக இருக்குமா?

மாதிரிப்படம்.

பொதுவாக ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும், டாக்டரை பார்க்க வேண்டும் என்றாலே குழந்தைகள் பயந்து நடுங்குவார்கள்.

  • Share this:
கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை மெல்ல மெல்ல குறித்து கொண்டே வரும் அதே வேளையில், இன்னும் சில வாரங்களில் மூன்றாம் அலை உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முதல் இரு அலைகளை விட மூன்றாம் அலை அதிகளவில் குழந்தைகளை பாதிக்க கூடும் என்ற தகவல் மக்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இதுவரை இல்லாத மூன்றாவது அலை குறித்த எதிர்பார்ப்புகளுடன் மாநிலங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் கோவிட் தொற்றுக்கு எதிராக போராட தீவிரமாக தயாராகி கொண்டிருக்கின்றன.

மூன்றாம் அலை அபாயத்தில் நாடு உள்ள சூழலில் எந்தவொரு சிகிச்சையும் ஒருவரது நோய் இன்னதென்று கண்டறிந்து துல்லியமாக தெரிவிக்கும் நோயறிதல் சரியாக இருந்தால் மட்டுமே அது நாம் எதிர்பார்க்கும் சிறப்பான பலன்களை தரும். தொற்றின் அடுத்த அலை குழந்தைகளை பாதிக்ககூடும் என்றாலும் அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பது சற்றே சிக்கலான பணியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நோயை கண்டறிவதற்கான சோதனை நடைமுறைகள் அவர்களுக்கு வசதியாக இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தின் கோவிட் மூன்றாம் அலை தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான உயர்மட்ட நிபுணர் குழுவின் உறுப்பினரும், பெங்களூருவின் கிளவுட்னைன் ஹாஸ்பிடல்ஸ் மல்லேஸ்வரத்தில் (Cloudnine Hospital - Malleshwaram) நியோனாட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் சஷி பூஷண் (Shashi Bhushan) குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மாற்று சோதனை முறைகள் பற்றி பதிலளித்துள்ளார்.

குழந்தைகளுக்கு டெஸ்ட் செய்வதற்கு சோதனைக்கு மாற்று சோதனை முறை ஏன்.?

பொதுவாக ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும், டாக்டரை பார்க்க வேண்டும் என்றாலே குழந்தைகள் பயந்து நடுங்குவார்கள். பல குழந்தைகள் அழ துவங்கிவிடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய பெரியவர்களுக்கு செய்வது போல தொண்டையில் அல்லது மூக்கின் உள்ளே மெல்லிய குச்சை உள்ளே ஆழமாக விட்டு சாம்பிள்களை சேகரிக்க குழந்தைகளிடம் முடியாது. எனவே தொற்றை கண்டறிய குழந்தைகளுக்கு மிகவும் மாறுபட்ட அணுகுமுறையுடன் கூடிய டெஸ்ட் முறை மிகவும் அவசியமாகிறது.

குழந்தைகளுக்கான கோவிட் டெஸ்ட் முறைகள் என்ன?

குழந்தைகளிடமிருந்து சேம்பிளஸ்களை சேகரிக்க Oral RT-PCR மற்றும் Gargle RT-PCR ஆகியவை மிகவும் பயனுள்ள முறைகளாக குறிப்பிடப்படுகின்றன.

நாசல் ஸ்வாப் (nasal swab) மற்றும் நாசோஃபரேன்ஜியல் ஸ்வாப் (nasopharyngeal swab) இடையே என்ன வித்தியாசம்?

nasopharyngeal swab என்பது பெரியவர்களிடமிருந்து சேம்பிளஸை சேகரிக்க பயன்படும் ஒன்றாகும். நீண்ட மற்றும் மெல்லிய பொருள் மூக்கின் வழியாக மூக்கில் ஆழமாக செருகப்பட்டு சட்டென்று வெளியே இழுக்கப்படுகிறது. இந்த நடைமுறை அனைத்தும் சில நொடிக்குள் நடந்தாலும், மக்களுக்கு இதனால் அசௌகரியம் ஏற்படுகிறது. முழு செயல்முறையையும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு இந்த டெஸ்ட் எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. நாசல் ஸ்வாபில் நாசி துளையின் ஆழம் வரை மெல்லிய பொருளை உள் செலுத்தாமல் துவக்கத்திலேயே சேம்பிள்ஸ் சேகரிக்கப்படும்.

Also read... Immunity Booster : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 4 வகையான மூலிகைகள்..!

Gargle RT-PCR டெஸ்ட் என்றால் என்ன?

இந்த டெஸ்ட் முறையில் ஒரு குறிப்பிட்ட திரவம் (gargling solution) கொடுக்கப்படும். குழந்தை இந்த கரைசலை கொப்பளித்து வெளியே துப்புமாறு கேட்கப்படுகிறது. இந்த டெஸ்ட் முறையை 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் பயன்படுத்தலாம்.

இந்த புதிய முறை துல்லிய டெஸ்டிற்கு உதவுமா?

Gargle RT-PCR டெஸ்ட்டிற்கு ICMR ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த புதிய முறைகள் அனைத்தும் வழக்கமான முறைகளை போல சிறப்பாக மற்றும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த முறைகள் வேறு எங்கு பயன்படுத்தப்படுகின்றன?

Salivary RT-PCR டெஸ்ட் முறை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. Gargle RT-PCR டெஸ்ட் சமீபத்தில் புனேவில் பயன்படுத்தப்பட்டது மற்றும் சிறந்த முடிவை தரும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி தேவையா?

குழந்தைகளுக்கு டெஸ்ட் எடுக்க குழந்தைநல சுகாதார ஊழியர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் திறமையான ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பின், இருக்க கூடிய ஊழியர்களுக்கு குழந்தைகளிடமிருந்து சேம்பிளஸ்களை சேகரிக்க பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: