ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எச்சரிக்கை... ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படியொரு பிரச்சனை ஏற்படுமா.?

எச்சரிக்கை... ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படியொரு பிரச்சனை ஏற்படுமா.?

தூக்கமின்மை

தூக்கமின்மை

Omicron | தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது என நினைத்து தடுப்பு மற்றும் பராமரிபு விதிமுறைகளை புறக்கணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளை விடவும், கடைசியாக வந்த ஒமைக்ரான் பரவலை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் மூன்றாவது அலையில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் பரவல் தினமும் ஆயிரக்கணக்கான நபர்களை பாதிக்கக்கூடியதாக இருந்தது. மிகவும் வேகமாக பரவக்கூடிய இது பெரிய அளவில் உயிருக்கு ஆபத்தில்லாததாக இருந்தாலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

காய்ச்சல், உடல்வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை ஒமைக்ரன் வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாக அறியப்பட்ட நிலையில், தூக்கம் இல்லாமல் தவிப்பதும் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது என நினைத்து தடுப்பு மற்றும் பராமரிப்பு விதிமுறைகளை புறக்கணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தூக்கத்திற்கு நொந்தரவு ஏற்படக் காரணம் என்ன?

ஒமைக்ரான் துணை மாறுபாடான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றிற்கும் தூக்க பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாக டிரினிட்டி கல்லூரி டப்ளின் நோயெதிர்ப்பு நிபுணர், பேராசிரியர் லூக் ஓ'நீல் கண்டுபிடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றின் அடுத்த பரவலுக்கு ஒமைக்ரான் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியன காரணமாக இருக்கும் என முன்னணி சுகாதார வல்லுநர்கள் எச்சரித்ததை அடுத்து, உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் இந்த வைரஸ் மாறுபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் இந்தியாவில் தொற்றுநோயைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மற்ற மாநிலங்களிலும் அதன் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒமைக்ரானின் மற்ற அறிகுறிகள் என்னென்ன?

மதியவேளையில் தூக்கம் வருவது போன்ற உணர்வு கோவிட்சோம்னியா (COVID இன்சோம்னியா) என அழைக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிப்பதும் ஒமைக்ரானின் புதிய அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மார்பக புற்றுநோய் தொடர்பாகக் கூறப்படும் 5 கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

தூக்க பிரச்சனைகள் யாருக்கு ஏற்படும்:

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அல்லது நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு தூக்க பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்பட்ட தூக்கமின்மை இருதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, ஒமைக்ரான் தொற்றின் விளைவாக 52 சதவீத இந்தியர்கள் தங்கள் தூக்கப் பழக்கத்தை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்க பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் என்னென்ன?

அதிக வியர்வை, ஸ்லீப் மூச்சுத்திணறல், தூக்கத்திற்கு நடுவில் எழுந்திருப்பது, தூக்கம் வராமல் தவிப்பது அல்லது காலையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு தூக்க கலக்கம் ஏற்படுவது ஆகியவை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் தூக்க பிரச்சனை என தெரிவித்துள்ளனர்.

Also Read : வெறும் தண்ணீர் தானேன்னு நினைக்காதீங்க... அதனால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குது..!

தூக்க கலக்கம் ஏற்படுவது ஒருவரது முழு நாளின் வேலைத்திறனையும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கும் நிபுணர்கள், தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் ஷாட்கள் மட்டுமே இந்த பிரச்சனை மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றிலிருந்து மக்களை காக்க ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Covid-19, Lifestyle, Omicron, Sleepless