• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனவை தடுக்க ஆயுர்வேத மூலிகை உணவுகள்... மத்திய அரசு பரிந்துரை!

கொரோனவை தடுக்க ஆயுர்வேத மூலிகை உணவுகள்... மத்திய அரசு பரிந்துரை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வீட்டில் இருப்பவர்கள் ஆயுர்வேத மூலிகை சாறுகள் மற்றும் யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் செய்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நடைமுறையில் உள்ள கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஆயுர்வேத மூலிகை சாறுகள் மற்றும் யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் செய்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தலாம். இது தொடர்பான விளக்கம் ஒன்றை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் எதிப்பு சக்தியை பலப்படுத்தவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது.

பொதுவான வழிமுறைகள்

*வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்

*மஞ்சள், கொத்தமல்லி, சீரகம் மற்றும் உலர்ந்த இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

*நாள்தோறும் நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்

*மஞ்சள் மற்றும் உப்பை சூடான நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்

* பிரெஷ்ஷாக உணவை தயாரித்து சாப்பிடலாம், அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதாக இருக்க வேண்டும்

*யோகா, பிராணாயாமா ஆகியவற்றுடன் நாள்தோறும் 30 நிமிடங்கள் தியானம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

*போதுமான அளவில் தூக்கம் இருக்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்த்து, குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்

ஆயுர்வேத முறையில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க;

* வெதுவெதுப்பான தண்ணீரில் 20 கிராம் சியவன்பிரஷ்ஷை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

* மஞ்சள் கலந்த பாலை நாள் ஒன்றுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம் அல்லது குடுச்சி கன்வதி 5000 mg மற்றும் அஸ்வகந்தா மாத்திரை 500 MG ஆகியவற்றை சாப்பாட்டுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் சாப்பிட வேண்டும். அல்லது மூலிகை டீ சாப்பிடலாம் தெரிவித்துள்ளது. அதாவது, 4 துளசி இலை, 2 இலவங்க பட்டை, 2 இஞ்சிப் பட்டை, மிளகு ஒன்று ஆகியவற்றின் மூலம் மூலிகை டீ தயாரித்துக் குடிக்கலாம். தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

* காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் நாசி பகுதியில் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பசு நெய் எடுத்து தடவிக் கொள்ள வேண்டும்.

*ஆயில் புல்லிங் தெரபி; ஒரு டீ ஸ்பூன் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி, குடிக்கக் கூடாது, 3 நிமிடங்களுக்கும் குறையாமல் வாயை கொப்பளிக்க வேண்டும். பின்னர் சூடான நீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும். நாள்ளொன்றுக்கு இருமுறை செய்யலாம்.

Also read... பெண்கள் மாதவிடாய் சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா..? மருத்துவரின் விளக்கம்..!

வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண்

* வெறும் சுடு நீர் அல்லது புதினா இலை அல்லது கேரவே விதைகள் அல்லது கற்பூரம் ஆகியவற்றைக் கொண்டு நீராவி பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருமுறை செய்யலாம்.

* சர்க்கரை, தேனுடன் கலந்த கிராம்பு ஆகியற்றை தொண்டை எரிச்சல் இருந்தால் நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகள் சாதாண வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. பிரச்சனை தீவிரமாக இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: