• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காதலர்கள் கொண்டாடும் மினியேச்சர் பொம்மைகள்...! நினைவாக அல்ல... உயிராய் ஒரு காதல் பரிசு..!

காதலர்கள் கொண்டாடும் மினியேச்சர் பொம்மைகள்...! நினைவாக அல்ல... உயிராய் ஒரு காதல் பரிசு..!

மை கியூட் மினி

மை கியூட் மினி

காதலர்கள் காஃபி மக், கடிகாரம் என்றில்லாமல் இப்படி ஆத்மார்த்தமான பொருட்களைக் கொடுக்க நினைக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காதலர்களுக்குள் பறிமாறிக்கொள்ளும் பரிசுகள் மட்டும் என்றுமே விலை மதிப்பற்றது. பிடித்திருந்தால் போதும் என்ன விலையாக இருந்தாலும் அதை வாங்கி அன்பை மட்டுமே விலையாகக் கொடுப்பார்கள்.

அதேபோல், காதலருக்குக் தான் கொடுக்கும் பரிசு என்பது தனித்துவமானதாக இருக்க வேன்டும் என பார்த்து பார்த்து வாங்குவார்கள். அப்படிப்பட்டோருக்காக பிரத்யேகமாக இயங்குவதுதான்’மை கியூட் மினி’. 

பேரே வித்யாசமாக உள்ளதே என்று யோசிக்கிறீர்களா..?

இந்த நிறுவனத்தின் பெயரை போல் அதன் செயல்பாடுகளும் தனித்துவம்தான். நீங்கள் பரிசு கேட்டால் உங்களையே பரிசாகக் கொடுக்கும். அதாவது காதலர்கள், நண்பர்கள், கணவன்மார்கள், மனைவிமார்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் அன்பானவர்களுக்காக பரிசு கொடுக்க நினைத்தால் அவர்களுடைய புகைப்படத்தை mycutemini.com என்ற அவர்களுடைய தளத்தில் பதிவேற்றினால் போதும். சிறு மினியேச்சர் பொம்மைகளாக வடிவமைத்துக் கொடுப்பார்கள். இதில் சிறப்பு என்னவெனில் நீங்கள் எப்படி புகைப்படம் கொடுக்கிறீர்களோ அதை அப்படியே அச்சு பிசராமல் வடிவமைத்துக் கொடுப்பார்கள்.“சரியான உருவத்தை அளிக்க நாங்கள் சிந்தடிக் செரமிக்ஸ், களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இதில் எந்தவித கெமிக்கல்களும் பயன்படுத்துவதில்லை. சிலைகளின் ஆடை நிறங்களுக்கு மட்டுமே பெயிண்ட் பயன்படுத்துகிறோம்” என்கிறார் மை கியூட் மினியின் நிறுவனர் ஹரி.

”இன்றைய மக்கள் வளர்ச்சிக்கு ஏற்ப பரிசு கொடுக்கும் பொருட்களும் மாறியுள்ளன. காஃபி மக், கடிகாரம் என்றில்லாமல் இப்படி ஆத்மார்த்தமான பொருட்களைக் கொடுக்க நினைக்கின்றனர். இதுபோல் அவர்களின் உருவத்தையே சிறியதாக வடிவமைத்து கையில் கொடுக்கும் போது அலப்பறிய மகிழ்ச்சியை அடைகின்றனர். பரிசு வாங்குவோரின் மனதையும் வெகுவாகத் தொடுகிறது ”என்கிறார் ஹரி.சென்னையைச் சேர்ந்த இவருக்கு சிறு வயது முதலே மினியேச்சர் உருவங்கள், பொருட்களை கற்களில் செதுக்குவதில் ஆர்வம் அதிகம். அதனால் பலரும் ஊக்குவிக்க எதார்த்தமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து பிராண்டாக உயர்ந்துள்ளது.”எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள் எனில் அதற்கு எங்களுடைய தரமான தயாரிப்புகளே காரணம். நாங்கள் எதற்கும் மிஷின்களை நம்புவது இல்லை. மொம்மைகள் அனைத்தும் கைகளிலேயே தயாரிக்கப்படுவதுதால் அதன் அழகு மேலும் மெருகேறுகிறது “ என்கிறார் ஹரி.

ஹரி  (மை கியூட் மினியின் நிறுவனர்)


இவர்களின் மினியேச்சர் மொம்மைகள் வடிவமைக்க 6000 தொடங்கி 25000 வரை ஆகும். சினிமா பிரபலங்களும் இவர்களின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர் என்றால் மிகையல்ல. சமீபத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரை மினியேச்சர் பொம்மைகளாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். அதேபோல் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் என பல நடிகர்களுக்கும் அவர்களின் உருவங்களை குட்டி பொம்மைகளாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.வரும் காதலர் தினத்திற்கான ஆர்டர்களும் தற்போது முடிந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு டெலிவரி செய்ய மும்முரமாக இறங்கியுள்ளனர். ஆன்லைனில் மட்டுமே இயங்கும் இந்த நிறுவனம் நீங்கள் வாங்கும் பொம்மைகளுக்கு நான்கரை ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கிறது. வாரண்டி காலத்திற்குள் வாங்கிய பொம்மையில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டது என்றாலும் இலவசமாக அதை சரி செய்து கொடுக்கின்றனர்.உறவுகளில் காதலையும் தாண்டி வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குவது இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பரிசுகளால் மட்டுமே சாத்தியப்படும். அப்படி உங்களின் அன்புக்குறியவரையும் மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் செல்ல நினைத்தால் அவர்களையே இப்படி குட்டி உருவமாக செதுக்கி கையில் கொடுங்கள். பரிசோடு உங்கள் காதலையும் அன்போடு பெற்றுக்கொள்வார்கள். ஹேப்பி வேலண்டைன்ஸ் டே..!

இணையதள முகவரி : www.mycutemini.com
தொடர்புக்கு : 8048017904

மேலும் படிக்க : Valentine Week List 2020 | காதலியை ஈர்க்க எந்த ரோஜா கொடுக்கலாம்..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: